1
விடையின்மேல் வருவானை வேதத்தின் பொருளானைஅடையில்அன் புடையானை யாவர்க்கும் அறியொண்ணா*மடையில்வா ளைகள்பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்ச்சடையிற்கங்கை தரித்தானைச் சாராதார் சார்பென்னே.(*அறிவொண்ணா என்றும் பாடம்)
சொற்பிரிப்பு
விடையின் மேல் வருவானை; வேதத்தின் பொருளானை;அடையில் அன்பு உடையானை; யாவர்க்கும் அறிய ஒண்ணா,மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்,சடையில் கங்கை தரித்தானை; சாராதார் சார்பு என்னே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.