திருமுறை 7 · 7.085 · 10

திருக்கூடலையாற்றூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
புறநீர்மை
தலம்
கூடலையாற்றூர்
நாடு
நடுநாடு

1

வடிவுடை மழுவேந்தி மதகரி உரிபோர்த்துப்பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்கொடியணி நெடுமாடக் கூடலை யாற்றூரில்அடிகள்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
சொற்பிரிப்பு
வடிவு உடை மழு ஏந்தி, மத கரி உரி போர்த்து,பொடி அணி திருமேனிப் ‌ புரி குழல் உமையோடும்கொடி அணி நெடுமாடக்‌ கூடலையாற்றூரில்‌அடிகள்‌ இவ்‌ வழி போந்த அதிசயம்‌ அறியேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வையகம் முழுதுண்ட மாலொடு நான்முகனும்பையர விளவல்குற் பாவையொ டும்முடனேகொய்யணி மலர்ச்சோலைக் கூடலை யாற்றூரில்ஐயன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
சொற்பிரிப்பு
வையகம் முழுது உண்ட மாலொடு, நான்முகனும்‌,பை அரவு இள அல்குல்‌ பாவையொடும்‌, உடனே,கொய்‌ அணி மலர்ச்‌ சோலைக் ‌ கூடலையாற்றூரில்‌ஐயன்‌ இவ்‌ வழி போந்த அதிசயம்‌ அறியேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஊர்தொறும் வெண்டலைகொண் டுண்பலி இடுமென்றுவார்தரு மென்முலையாள் மங்கையொ டும்முடனேகூர்நுனை மழுவேந்திக் கூடலை யாற்றூரில்ஆர்வன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
சொற்பிரிப்பு
ஊர் தொறும்‌ வெண்தலை கொண்டு, 'உண்‌ பலி இடும்‌!' என்று,வார்‌ தரு மென் முலையாள்‌ மங்கையொடும்‌ உடனே,கூர் நுனை மழு ஏந்தி, கூடலையாற்றூரில்‌ஆர்வன்‌ இவ்‌ வழி போந்த அதிசயம்‌ அறியேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சந்தண வும்புனலுந் தாங்கிய தாழ்சடையன்பந்தண வும்விரலாள் பாவையொ டும்முடனேகொந்தண வும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்அந்தணன் வழிபோந்த அதிசயம் அறியேனே.
சொற்பிரிப்பு
சந்து அணவும்‌ புனலும் ‌ தாங்கிய தாழ் சடையன்‌பந்து அணவும்‌ விரலாள் ‌ பாவையொடும்‌ உடனே,கொந்து அணவும்‌ பொழில் ‌ சூழ்‌ கூடலையாற்றூரில்‌அந்தணன்‌ வழி போந்த அதிசயம்‌ அறியேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வேதியர் விண்ணவரும் மண்ணவ ருந்தொழநற்சோதிய துருவாகிச் சுரிகுழல் உமையோடும்கோதிய வண்டறையுங் கூடலை யாற்றூரில்ஆதிஇவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
சொற்பிரிப்பு
வேதியர்‌ விண்ணவரும் ‌ மண்ணவரும்‌ தொழ, நல்‌சோதி அது உரு ஆகி, சுரி குழல்‌ உமையோடும்‌,கோதிய வண்டு அறையும்‌ கூடலையாற்றூரில்‌ஆதி இவ்‌ வழி போந்த அதிசயம்‌ அறியேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வித்தக வீணையொடும் வெண்புரி நூல்பூண்டுமுத்தன வெண்முறுவல் மங்கையொ டும்முடனேகொத்தல ரும்பொழில்சூழ் கூடலை யாற்றூரில்அத்தன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
சொற்பிரிப்பு
வித்தக வீணையொடும்‌, வெண்புரிநூல்‌ பூண்டு,முத்து அன வெண் முறுவல் ‌ மங்கையொடும்‌ உடனே,கொத்து அலரும்‌ பொழில்‌ சூழ் ‌ கூடலையாற்றூரில்‌அத்தன்‌ இவ்‌ வழி போந்த அதிசயம்‌ அறியேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மழைநுழை மதியமொடு வாளர வஞ்சடைமேல்இழைநுழை துகில்அல்குல் ஏந்திழை யாளோடும்குழையணி திகழ்சோலைக் கூடலை யாற்றூரில்அழகன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
சொற்பிரிப்பு
மழை நுழை மதியமொடு வாள்‌ அரவம்‌ சடை மேல்‌இழை நுழை துகில்‌ அல்குல்‌ ஏந்திழையாளோடும்‌,குழை அணி திகழ்‌ சோலைக் ‌ கூடலையாற்றூரில்‌அழகன்‌ இவ்‌ வழி போந்த அதிசயம்‌ அறியேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மறைமுதல் வானவரும் மாலயன் இந்திரனும்பிறைநுதல் மங்கையொடும் பேய்க்கண முஞ்சூழக்குறள்படை யதனோடுங் கூடலை யாற்றூரில்அறவன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
சொற்பிரிப்பு
மறை முதல்‌ வானவரும்‌, மால்‌, அயன்‌, இந்திரனும்‌,பிறை நுதல்‌ மங்கையொடும்‌, பேய்க் கணமும்‌, சூழ,குறள் படை அதனோடும்‌,கூடலையாற்றூரில்‌அறவன்‌ இவ்‌ வழி போந்தஅதிசயம்‌ அறியேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வேலையின் நஞ்சுண்டு விடையது தான்ஏறிப்பாலன மென்மொழியாள் பாவையொ டும்முடனேகோலம துருவாகிக் கூடலை யாற்றூரில்ஆலன்இவ் வழிபோந்த அதிசயம் அறியேனே.
சொற்பிரிப்பு
வேலையின்‌ நஞ்சு உண்டு, விடை அது தான்‌ ஏறி,பால்‌ அன மென் மொழியாள் ‌ பாவையொடும்‌ உடனே,கோலம்‌ அது உரு ஆகி, கூடலையாற்றூரில்‌ஆலன்‌ இவ்‌ வழி போந்த அதிசயம்‌ அறியேனே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கூடலை யாற்றூரிற் கொடியிடை யவளோடும்ஆடலு கந்தானை அதிசயம் இதுவென்றுநாடிய இன்றமிழால் நாவல வூரன்சொற்பாடல்கள் பத்தும்வல்லார் தம்வினை பற்றறுமே.
சொற்பிரிப்பு
கூடலையாற்றூரில்‌ கொடி இடையவளோடும்‌ஆடல்‌ உகந்தானை, "அதிசயம்‌ இது” என்றுநாடிய இன் தமிழால் ‌ நாவல ஊரன்‌ சொல்‌பாடல்கள் பத்தும்‌ வல்லார் தம்‌ வினை பற்று அறுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.