1
தொண்ட ரடித்தொழலுஞ் சோதி இளம்பிறையுஞ் சூதன மென்முலையாள் பாகமு மாகிவரும்புண்டரி கப்பரிசாம் மேனியும் வானவர்கள் பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமருங்கொண்ட லெனத்திகழுங் கண்டமும் எண்டோ ளுங் கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன் கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே.
சொற்பிரிப்பு
தொண்டர் அடித் தொழலும், சோதி இளம் பிறையும், சூது அன மென் முலையாள் பாகமும், ஆகி வரும்புண்டரிகப் பரிசு ஆம் மேனியும்; வானவர்கள் பூசல் இடக் கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும்,கொண்டல் எனத் திகழும், கண்டமும்; எண் தோளும்; கோல நறுஞ்சடை மேல் வண்ணமும்; கண் குளிரக்கண்டு, தொழப் பெறுவது என்றுகொலோ, அடியேன்? கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.