திருமுறை 7 · 7.083 · 10

திருவாரூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
புறநீர்மை
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

அந்தியும் நண்பகலும் அஞ்சுப தஞ்சொல்லிமுந்தி எழும்பழைய வல்வினை மூடாமுன்சிந்தை பராமரியாத் தென்றிரு வாரூர்புக்கெந்தை பிரானாரை யென்றுகொல் எய்துவதே.
சொற்பிரிப்பு
அந்தியும்‌ நண்பகலும்‌ அஞ்சு பதம்‌ சொல்லி,முந்தி எழும்‌ பழைய வல்வினை மூடாமுன்‌,சிந்தை பராமரியா தென் திருஆரூர்‌ புக்கு,எந்தை பிரானாரை என்றுகொல்‌ எய்துவதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நின்ற வினைக்கொடுமை நீங்க இருபொழுதுந்துன்று மலரிட்டுச் சூழும் வலஞ்செய்துதென்றல் மணங்கமழுந் தென்றிரு வாரூர்புக்கென்றன் மனங்குளிர என்றுகொல் எய்துவதே.
சொற்பிரிப்பு
நின்ற வினைக்‌ கொடுமை நீங்க இரு பொழுதும்‌துன்று மலர்‌ இட்டு, சூழும்‌ வலம் செய்து.தென்றல்‌ மணம்‌ கமழும் ‌ தென் திருஆரூர்‌ புக்கு,என் தன்‌ மனம்‌ குளிர என்றுகொல்‌ எய்துவதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

முன்னை முதற்பிறவி மூதறி யாமையினாற்பின்னை நினைந்தனவும் பேதுற வும்மொழியச்செந்நெல் வயற்கழனித் தென்றிரு வாரூர்புக்கென்னுயிர்க் கின்னமுதை என்றுகொல் எய்துவதே.
சொற்பிரிப்பு
முன்னை முதல்‌ பிறவி மூதறியாமையினால்‌பின்னை நினைந்தனவும்‌ பேதுறவும்‌ ஒழிய,செந்நெல்‌ வயல்‌ கழனித் ‌ தென் திருஆரூர்‌ புக்கு,என்‌ உயிர்க்கு இன்னமுதை என்றுகொல்‌ எய்துவதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நல்ல நினைப்பொழிய நாள்களில் ஆருயிரைக்கொல்ல நினைப்பனவுங் குற்றமும் அற்றொழியச்செல்வ வயற்கழனித் தென்றிரு வாரூர்புக்கெல்லை மிதித்தடியேன் என்றுகொல் எய்துவதே.
சொற்பிரிப்பு
நல்ல நினைப்பு ஒழிய நாள்களில்‌ ஆர்‌ உயிரைக்‌கொல்ல நினைப்பனவும் ‌ குற்றமும்‌ அற்று ஒழிய,செல்வ வயல்‌ கழனித் ‌ தென் திருஆரூர்‌ புக்கு,எல்லை மிதித்து, அடியேன் ‌ என்றுகொல்‌ எய்துவதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கடுவரி மாக்கடலுட் காய்ந்தவன் தாதையைமுன்சுடுபொடி மெய்க்கணிந்த சோதியை வன்றலைவாய்அடுபுலி ஆடையனை ஆதியை ஆரூர்புக்கிடுபலி கொள்ளியைநான் என்றுகொல் எய்துவதே.
சொற்பிரிப்பு
கடு வரி மாக்கடலுள் ‌ காய்ந்தவன்‌ தாதையை, முன்‌;சுடுபொடி மெய்க்கு அணிந்த சோதியை; வன் தலை வாய்‌அடு புலி ஆடையனை; ஆதியை; ஆரூர்‌‌ புக்குஇடு பலி கொள்ளியை; நான்‌ என்றுகொல்‌ எய்துவதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

சூழொளி நீர்நிலந்தீத் தாழ்வளி ஆகாசம்வானுயர் வெங்கதிரோன் வண்டமிழ் வல்லவர்கள்ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர்புக்கேழுல காளியைநான் என்றுகொல் எய்துவதே.
சொற்பிரிப்பு
சூழ்‌ ஒளி, நீர்‌, நிலம்‌, தீ, தாழ்‌ வளி, ஆகாசம்‌,வான்‌ உயர்‌ வெங்கதிரோன்‌, வண்தமிழ்‌ வல்லவர்கள்‌ஏழ்‌ இசை, ஏழ் நரம்பின் ‌ ஓசையை; ஆரூர் புக்குஏழ்‌ உலகு ஆளியை; நான் ‌ என்றுகொல்‌ எய்துவதே;
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கொம்பன நுண்ணிடையாள் கூறனை நீறணிந்தவம்பனை எவ்வுயிர்க்கும் வைப்பினை ஒப்பமராச்செம்பொனை நன்மணியைத் தென்றிரு வாரூர்புக்கென்பொனை என்மணியை என்றுகொல் எய்துவதே.
சொற்பிரிப்பு
கொம்பு அன நுண் இடையாள் ‌ கூறனை, நீறு அணிந்‌தவம்பனை, எவ் உயிர்க்கும் ‌ வைப்பினை, ஒப்பு அமராச்செம்பொனை, நல் மணியை, தென் திருஆரூர்‌ புக்குஎன் பொனை, என்‌ மணியை, என்றுகொல்‌ எய்துவதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஆறணி நீண்முடிமேல் ஆடர வஞ்சூடிப்பாறணி வெண்டலையிற் பிச்சைகொள் நச்சரவன்சேறணி தண்கழனித் தென்றிரு வாரூர்புக்கேறணி எம்மிறையை என்றுகொல் எய்துவதே.
சொற்பிரிப்பு
ஆறு அணி நீள்‌ முடிமேல் ‌ ஆடு அரவம்‌ சூடிப்‌பாறு அணி வெண்தலையில் ‌ பிச்சை கொள்‌ நச்சு அரவன்‌,சேறு அணி தண் கழனித் ‌ தென் திருஆரூர்‌ புக்குஏறு அணி எம்‌ இறையை, என்றுகொல்‌ எய்துவதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மண்ணினை உண்டுமிழ்ந்த மாயனும் மாமலர்மேல்அண்ணலும் நண்ணரிய ஆதியை மாதினொடுந்திண்ணிய மாமதில்சூழ் தென்றிரு வாரூர்புக்கெண்ணிய கண்குளிர என்றுகொல் எய்துவதே.
சொற்பிரிப்பு
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும்‌, மா மலர்மேல்‌அண்ணலும்‌, நண்ண அரிய ஆதியை மாதினொடும்‌திண்ணிய மா மதில்‌ சூழ் ‌ தென் திருஆரூர்‌ புக்குஎண்ணிய கண்‌ குளிர என்றுகொல்‌ எய்துவதே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மின்னெடுஞ் செஞ்சடையான் மேவிய ஆரூரைநன்னெடுங் காதன்மையால் நாவலர் கோன்ஊரன்பன்னெடுஞ் சொல்மலர்கொண் டிட்டன பத்தும்வல்லார்பொன்னுடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே.
சொற்பிரிப்பு
மின்நெடுஞ் செஞ்சடையான் ‌ மேவிய ஆரூரைநன்நெடுங்‌ காதன்மையால் ‌ நாவலர்கோன்‌ ஊரன்‌பல்‌-நெடுஞ் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும்‌ வல்லார்‌பொன்‌ உடை விண்ணுலகம் ‌ நண்ணுவர்‌; புண்ணியரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.