திருமுறை 7 · 7.082 · 10

திருச்சுழியல்

அருளியவர்
சுந்தரர்
பண்
நட்டபாடை
தலம்
சுழியல்
நாடு
பாண்டியநாடு

1

ஊனாய்உயிர் புகலாய்அக லிடமாய் முகில்பொழியும்வானாய்வரு மதியாய்விதி வருவானிடம் பொழிலின்தேனாதரித் திசைவண்டினம் மிழற்றுந்திருச் சுழியல்நானாவிதம் நினைவார்தமை நலியார்நமன் தமரே.
சொற்பிரிப்பு
ஊனாய்‌, உயிர்‌ புகலாய்‌, அகலிடமாய்‌, முகில்‌ பொழியும்‌வானாய்‌, அதன்‌ மதியாய்‌, விதி வருவான்‌ இடம்‌ பொழிலின்‌தேன்‌ ஆதரித்து இசை வண்டு இனம் ‌ மிழற்றும்‌ திருச்‌சுழியல்‌,நானாவிதம்‌ நினைவார் தமை நலியார்‌, நமன் தமரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தண்டேர்மழுப் படையான்மழ விடையான்எழு கடல்நஞ்சுண்டேபுரம் எரியச்சிலை வளைத்தான்இமை யவர்க்காத்திண்டேர்மிசை நின்றானவன் உறையுந்திருச் சுழியல்தொண்டேசெய வல்லாரவர் நல்லார்துயர் இலரே.
சொற்பிரிப்பு
தண்டு ஏர்‌ மழுப்படையான்‌, மழ விடையான்‌, எழு கடல் நஞ்சுஉண்டே புரம்‌ எரியச்‌ சிலை வளைத்தான்‌, இமையவர்க்கா,திண்‌ தேர்மிசை நின்றான்‌ அவன்‌, உறையும்‌ திருச்‌ சுழியல்‌தொண்டே செயவல்லார்‌ அவர் ‌ நல்லார்‌; துயர்‌ இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தங்கரைக் கேற்றக்கொவ்வைத்துவர் வாயார்குடைந் தாடுந்திருச் சுழியல்தெய்வத்தினை வழிபாடுசெய் தெழுவாரடி தொழுவார்அவ்வத்திசைக் கரசாகுவர் அலராள்பிரி யாளே.
சொற்பிரிப்பு
கவ்வைக்‌ கடல்‌ கதறிக்‌ கொணர் ‌ முத்தம்‌ கரைக்கு ஏற்ற,கொவ்வைத் துவர் வாயார்‌ குடைந்து ஆடும்‌ திருச்‌சுழியல்‌,தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார்‌ அடி தொழுவார்‌,அவ்‌ அத்‌ திசைக்கு அரசு ஆகுவர்‌; அலராள்‌ பிரியாளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மலையான்மகள் மடமாதிட மாகத்தவண் மற்றுக்கொலையானையின் உரிபோர்த்தவெம் பெருமான்றிருச் சுழியல்அலையார்சடை யுடையானடி தொழுவார்பழு துள்ளம்நிலையார்திகழ் புகழால்நெடு வானத்துயர் வாரே.
சொற்பிரிப்பு
மலையான்‌ மகள் மட மாது இடம் ‌ ஆகத்தவன்‌, மற்றுக்‌கொலை யானையின்‌ உரி போர்த்த எம் பெருமான்‌, திருச்‌சுழியல்‌அலை ஆர்‌ சடை உடையான்‌, அடி தொழுவார்‌ பழுது உள்ளம்‌நிலையார்‌; திகழ்‌ புகழால்‌ நெடு வானத்து உயர்வாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

உற்றான்நமக் குயரும்மதிச் சடையான்புலன் ஐந்துஞ்செற்றார்திரு மேனிப்பெரு மானூர்திருச் சுழியல்பெற்றான்இனி துறையத்திறம் பாமைத்திரு நாமங்கற்றாரவர் கதியுட்செல்வர் ஏத்தும்மது கடனே.
சொற்பிரிப்பு
உற்றான்‌, நமக்கு; உயரும்‌ மதிச் ‌ சடையான்‌; புலன் ஐந்தும்‌செற்று ஆர்‌ திருமேனிப்‌ பெருமான்‌; ஊர்‌ திருச்‌சுழியல்‌பெற்றான்‌, இனிது உறைய; திறம் பாமைத்‌ திருநாமம்‌கற்றார்‌ அவர்‌ கதியுள்‌ செல்வர்‌; ஏத்தும்‌ அது கடனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மலந்தாங்கிய பாசப்பிறப் பறுப்பீர்துறைக் கங்கைச்சலந்தாங்கிய முடியான்அமர்ந் திடமாந்திருச் சுழியல்நிலந்தாங்கிய மலராற்கொழும் புகையால்நினைந் தேத்துந்தலந்தாங்கிய புகழாம்மிகு தவமாஞ்சது ராமே.
சொற்பிரிப்பு
மலம்‌ தாங்கிய பாசப்‌ பிறப்பு அறுப்பீர்‌! துறைக்‌ கங்கைச்‌சலம்‌ தாங்கிய முடியான்‌ அமர்ந்த இடமாம்‌ திருச்‌சுழியல்‌நிலம்‌ தாங்கிய மலரால்‌, கொழும் ‌ புகையால்‌, நினைந்து ஏத்தும்‌!தலம்‌ தாங்கிய புகழ்‌ ஆம்‌; மிகு தவம்‌ ஆம்‌; சதுர்‌ ஆமே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சைவத்தசெவ் வுருவன்றிரு நீற்றன்னுரு மேற்றன்கைவைத்தொரு சிலையால்அரண் மூன்றும்மெரி செய்தான்தெய்வத்தவர் தொழுதேத்திய குழகன்றிருச் சுழியல்மெய்வைத்தடி நினைவார்வினை தீர்தல்லெளி தன்றே.
சொற்பிரிப்பு
சைவத்த செவ்‌ உருவன்‌; திரு நீற்றன்‌, உரும்‌ ஏற்றன்‌;கை வைத்த ஒரு சிலையால்‌ அரண் மூன்றும்‌ எரி செய்தான்‌;தெய்வத்தவர்‌ தொழுது ஏத்திய குழகன்‌; திருச்‌சுழியல்‌மெய்‌ வைத்து அடி நினைவார்‌ வினை தீர்தல்‌ எளிது அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பூவேந்திய பீடத்தவன் றானும்மடல் அரியுங்கோவேந்திய வினயத்தொடு குறுகப்புகல் அறியார்சேவேந்திய கொடியானவன் உறையுந்திருச் சுழியல்மாவேந்திய கரத்தான்எம சிரத்தான்றன தடியே.
சொற்பிரிப்பு
பூ ஏந்திய பீடத்தவன் தானும்‌, அடல்‌ அரியும்‌,கோ ஏந்திய வினயத்தொடு குறுகப்‌ புகல்‌ அறியார்‌சே ஏந்திய கொடியான்‌ அவன் ‌ உறையும்‌ திருச்‌சுழியல்‌,மா ஏந்திய கரத்தான்‌, எம சிரத்தான்‌ தனது அடியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கொண்டாடுதல் புரியாவரு தக்கன்பெரு வேள்விச்செண்டாடுதல் புரிந்தான்திருச் சுழியற்பெரு மானைக்குண்டாடிய சமண்ஆதர்கள் குடைச்சாக்கியர் அறியாமிண்டாடிய அதுசெய்தது வானால்வரு விதியே.
சொற்பிரிப்பு
கொண்டாடுதல்‌ புரியாவரு தக்கன்‌ பெரு வேள்விசெண்டு ஆடுதல்‌ புரிந்தான்‌ ‌ திருச்சுழியல்‌ பெருமானைக்‌குண்டாடிய சமண்‌ ஆதர்கள் ‌ குடைச்‌ சாக்கியர்‌ அறியா,மிண்டாடிய அது செய்தது ஆனால்‌, வருவிதியே,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நீரூர்தரு நிமிலன்றிரு மலையார்க்கயல் அருகேதேரூர்தரும் அரக்கன்சிரம் நெரித்தான்றிருச் சுழியல்பேரூரென உறைவானடி பெயர்நாவலர் கோமான்ஆரூரன தமிழ்மாலைபத் தறிவார்துயர் இலரே.
சொற்பிரிப்பு
நீர்‌ ஊர் தரு நிமலன்‌, திரு மலையார்க்கு அயல்‌ அருகேதேர்‌ ஊர் தரும்‌ அரக்கன்‌ சிரம் ‌ நெரித்தான்‌, திருச்‌சுழியல்‌பேர்‌ ஊர்‌ என உறைவான்‌, அடிப்பெயர்‌ நாவலர் கோமான்‌ஆரூரன தமிழ் மாலை பத்து அறிவார்‌ துயர்‌ இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.