1
கொன்று செய்த கொடுமை யாற்பல சொல்லவேநின்ற பாவம்* வினைகள் தாம்பல நீங்கவேசென்று சென்று தொழுமின் தேவர் பிரானிடங்கன்றி னோடு பிடிசூழ் தண்கழுக் குன்றமே.( * பாவ வினைகள் என்றும் பாடம்)
சொற்பிரிப்பு
கொன்று செய்த கொடுமையால் பல, சொல்லவேநின்ற பாவ வினைகள் தாம் பல, நீங்கவேசென்றுசென்று தொழுமின் தேவர் பிரான் இடம்கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.