1
வாழ்வாவது மாயம்மிது மண்ணாவது திண்ணம்பாழ்போவது பிறவிக்கடல் பசிநோய்செய்த பறிதான்தாழாதறஞ் செய்ம்மின்தடங் கண்ணான்மல ரோனுங்கீழ்மேலுற நின்றான்றிருக் கேதாரமெ னீரே.
சொற்பிரிப்பு
வாழ்வாவது மாயம் ; இது மண்ணாவது திண்ணம்;பாழ் போவது பிறவிக்கடல்; பசி, நோய், செய்த பறி தான்;தாழாது அறம் செய்ம்மின்! தடங் கண்ணான். மலரோனும்கீழ் மேல் உற நின்றான் திருக்கேதாரம் எனீரே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.