1
பரவும் பரிசொன் றறியேன்நான் பண்டே உம்மைப் பயிலாதேன்இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினைய மாட்டேன்நான்கரவில் அருவி கமுகுண்ணத் தெங்கங் குலைக்கீழ்க் கருப்பாலைஅரவந் திரைக்கா விரிக்கோட்டத் தையா றுடைய அடிகளோ.
சொற்பிரிப்பு
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மைப் பயிலாதேன்;இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன், நான்கரவு இல் அருவி கமுகு உண்ண, தெங்கு அம்குலைக் கீழ்க் கருப்பாலைஅரவம் திரைக் காவிரிக் கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.