திருமுறை 7 · 7.076 · 10

திருவாஞ்சியம்

அருளியவர்
சுந்தரர்
பண்
பியந்தைக்காந்தாரம்
தலம்
வாஞ்சியம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பொருவ னார்புரி நூலர் புணர்முலை உமையவ ளோடுமருவ னார்மரு வார்பால் வருவதும் இல்லைநம் அடிகள்திருவ னார்பணிந் தேத்துந் திகழ்திரு வாஞ்சியத் துறையும்ஒருவ னார்அடி யாரை ஊழ்வினை நலிய வொட்டாரே.
சொற்பிரிப்பு
பொருவனார்‌; புரி நூலர்‌; புணர்முலை உமையவளோடுமருவனார்‌; மருவார்பால்‌ வருவதும் ‌ இல்லை, நம்‌ அடிகள்‌;திருவனார்‌ பணிந்து ஏத்தும்‌ திகழ்‌ திரு வாஞ்சியத்து உறையும்‌ஒருவனார்‌; அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தொறுவில் ஆனிள ஏறு துண்ணென இடிகுரல் வெருவிச்செறுவில் வாளைகள் ஓடச் செங்கயல் பங்கயத் தொதுங்கக்கறுவி லாமனத் தார்கள் காண்தகு வாஞ்சியத் தடிகள்மறுவி லாதவெண் ணீறு பூசுதல் மன்னுமொன் றுடைத்தே.
சொற்பிரிப்பு
தொறுவில்‌ ஆன்‌ இள ஏறு துண்ணென, இடி குரல்‌ வெருவிச்‌செறுவில்‌ வாளைகள்‌ ஓட, செங்கயல்‌ பங்கயத்து ஒதுங்க,கறுவு இலா மனத்தார்கள் ‌ காண் தகு வாஞ்சியத்து அடிகள்‌மறு இலாத வெண்நீறு பூசுதல்‌ மன்னும்‌ ஒன்று உடைத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

தூர்த்தர் மூவெயி லெய்து சுடுநுனைப் பகழிய தொன்றாற்பார்த்த னார்திரள் தோள்மேற் பன்னுனைப் பகழிகள் பாய்ச்சித்தீர்த்த மாமலர்ப் பொய்கைத் திகழ்திரு வாஞ்சியத் தடிகள்சாத்து மாமணிக் கச்சங் கொருதலை பலதலை யுடைத்தே.
சொற்பிரிப்பு
தூர்த்தர்‌ மூ எயில்‌ எய்து, சுடு நுனைப்‌ பகழி அது ஒன்றால்‌,பார்த்தனார்‌ திரள் தோள் மேல்‌ பல்‌-நுனைப் பகழிகள்‌ பாய்ச்சி,தீர்த்தம்‌ ஆம்‌ மலர்ப் பொய்கைத் ‌ திகழ்‌ திரு வாஞ்சியத்து அடிகள்‌சாத்து மா மணிக்‌ கச்சு அங்கு ஒருதலை பல தலை உடைத்தே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சள்ளை வெள்ளையங் குருகு தானது வாம்எனக் கருதிவள்ளை வெண்மலர் அஞ்சி மறுகியோர் வாளையின் வாயில்துள்ளு தெள்ளுநீர்ப் பொய்கைத் துறைமல்கு வாஞ்சியத் தடிகள்வெள்ளை நுண்பொடிப் பூசும் விகிர்தமொன் றொழிகிலர் தாமே.
சொற்பிரிப்பு
சள்ளை வெள்ளை அம் குருகு தான்‌ அது ஆம்‌ எனக்‌ கருதி,வள்ளை வெண்மலர்‌ அஞ்சி, மறுகி, ஓர்‌ வாளையின்‌ வாயில்துள்ளு தெள்ளும்‌ நீர்ப்‌ பொய்கைத்‌ துறை மல்கு வாஞ்சியத்து அடிகள்‌வெள்ளை நுண்பொடிப்‌ பூசும்‌ விகிர்தம் ‌ ஒன்று ஒழிகிலர்‌, தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மைகொள் கண்டர்எண் தோளர் மலைமக ளுடனுறை வாழ்க்கைக்கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக் குழகர்கைதை நெய்தலங் கழனி கமழ்புகழ் வாஞ்சியத் தடிகள்பைதல் வெண்பிறை யோடு பாம்புடன் வைப்பது பரிசே.
சொற்பிரிப்பு
மை கொள்‌ கண்டர்‌, எண்தோளர்‌, மலைமகள்‌ உடன்‌ உறை. வாழ்க்கைக்‌கொய்த கூவிள மாலை குலவிய சடைமுடிக்‌ குழகர்‌,கைதை நெய்தல்‌ அம்‌ கழனி கமழ்‌ புகழ்‌ வாஞ்சியத்து அடிகள்‌,பைதல் வெண்பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கரந்தை கூவிள மாலை கடிமலர்க் கொன்றையுஞ் சூடிப்பரந்த பாரிடஞ் சூழ வருவர்நம் பரமர்தம் பரிசால்திருந்து மாடங்கள் நீடு திகழ்திரு வாஞ்சியத் துறையும்மருந்த னார்அடி யாரை வல்வினை நலிய வொட்டாரே.
சொற்பிரிப்பு
கரந்தை கூவிள மாலை கடிமலர்க்‌ கொன்றையும்‌ சூடி,பரந்த பாரிடம்‌ சூழ, வருவர்‌, எம்‌ பரமர்‌, தம்‌ பரிசால்‌;திருந்து மாடங்கள்‌ நீடு திகழ்‌ திருவாஞ்சியத்து உறையும்‌மருந்தனார்‌, அடியாரை வல்வினை நலிய ஒட்டாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளையங் கண்ணார்குருவி யாய்கிளி சேப்பக் குருகினம் இரிதரு கிடங்கில்பருவ ரால்குதி கொள்ளும் பைம்பொழில் வாஞ்சியத் துறையும்இருவ ராலறி யொண்ணா இறைவன தறைகழல் சரணே.
சொற்பிரிப்பு
அருவி பாய்தரு கழனி, அலர் தரு குவளை அம் கண்ணார்‌,குருவி ஆய்‌ கிளி சேர்ப்ப, குருகு இனம்‌ இரிதரு கிடங்கின்‌பரு வரால்‌ குதி கொள்ளும்‌ பைம்பொழில்‌ வாஞ்சியத்து உறையும்‌இருவரால்‌ அறிய ஒண்ணா இறைவனது அறைகழல்‌ சரணே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

களங்க ளார்தரு கழனி அளிதரக் களிதரு வண்டுஉளங்க ளார்கலிப் பாடல் உம்பரில் ஒலித்திடுங் காட்சிகுளங்க ளானிழற் கீழ்நற் குயில்பயில் வாஞ்சியத் தடிகள்விளங்கு தாமரைப் பாதம் நினைப்பவர் வினைநலி விலரே.
சொற்பிரிப்பு
களங்கள்‌ ஆர் தரு கழனி அளி தரக்‌ களி தரு வண்டுஉளங்கள்‌ ஆர்‌ கலிப்பாடல் ‌ உம்பரில்‌ ஒலித்திடும்‌ காட்சி,குளங்கள்‌ ஆல்‌ நிழல் கீழ்‌ நல் ‌ குயில்‌ பயில்‌, வாஞ்சியத்து அடிகள்‌விளங்கு தாமரைப் பாதம்‌ நினைப்பவர்‌ வினை நலிவு இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வாழை யின்கனி தானும் மதுவிம்மு வருக்கையின் சுளையுங்கூழை வானரந் தம்மிற் கூறிது சிறிதெனக் குழறித்தாழை வாழையந் தண்டாற் செருச்செய்து தருக்குவாஞ் சியத்துள்ஏழை பாகனை யல்லால் இறையெனக் கருதுத லிலமே.
சொற்பிரிப்பு
வாழை இன் கனி தானும்‌, மது விம்மி, வருக்கை இன் சுளையும்‌,கூழை வானரம்‌ தம்மில்‌, “கூறு இது சிறிது” எனக்‌ குழறி,தாழை வாழை அம் தண்டால்‌ செருச்‌ செய்து தருக்கு வாஞ்சியத்துள்‌,ஏழை பாகனை அல்லால்‌ இறை எனக்‌ கருதுதல்‌ இலமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

செந்நெ லங்கலங் கழனித் திகழ்திரு வாஞ்சியத் துறையும்மின்ன லங்கலஞ் சடையெம் இறைவன தறைகழல் பரவும்பொன்ன லங்கனல் மாடப் பொழிலணி நாவலா ரூரன்பன்ன லங்கனல் மாலை பாடுமின் பத்தரு ளீரே.
சொற்பிரிப்பு
செந்நெல்‌ அங்கு அலங்‌(கு) கழனித் ‌ திகழ்‌ திரு வாஞ்சியத்து உறையும்‌இன்‌ அலங்கல்‌ அம்‌ சடை எம் ‌ இறைவனது அறைகழல்‌ பரவும்‌பொன்‌ அலங்கல்‌ நல்‌ மாடப் ‌ பொழில்‌ அணி நாவல்‌ ஆரூரன்‌பன்‌ அலங்கல்‌ நல்மாலை பாடுமின்‌, பத்தர்‌ உளீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.