1
மறைகள் ஆயின நான்கும் மற்றுள பொருள்களு மெல்லாந்துறையுந் தோத்திரத் திறையுந் தொன்மையும் நன்மையு மாயஅறையும் பூம்புனல் ஆனைக் காவுடை ஆதியை நாளும்இறைவன் என்றடி சேர்வார் எம்மையும் ஆளுடை யாரே.
சொற்பிரிப்பு
மறைகள்ஆயின நான்கும், மற்று உள பொருள்களும், எல்லாம்,துறையும், தோத்திரத்து இறையும், தொன்மையும், நன்மையும்; ஆயஅறையும் பூம்புனல் ஆனைக்கா உடை ஆதியை, நாளும்,"இறைவன்” என்று அடி சேர்வார் எம்மையும் ஆள் உடையாரே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.