திருமுறை 7 · 7.074 · 10

திருத்துருத்தியும் திருவேள்விக்குடியும்

அருளியவர்
சுந்தரர்
பண்
காந்தாரம்
தலம்
துருத்தி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மின்னுமா மேகங்கள் பொழிந்திழிந் தருவி வெடிபடக் கரையொடுந் திரைகொணர்ந் தெற்றும்அன்னமாங் காவிரி அகன்கரை உறைவார் அடியிணை தொழுதெழும் அன்பராம் அடியார்சொன்னவா றறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்என்னைநான் மறக்குமா றெம்பெரு மானை என்னுடம் படும்பிணி இடர்கெடுத் தானை.
சொற்பிரிப்பு
மின்னும்‌ மா மேகங்கள்‌ பொழிந்து இழிந்து அருவி வெடிபடக்‌ கரையொடும்‌ திரை கொணர்ந்து எற்றும்‌அன்ன மாங் காவிரி அகன்‌ கரை உறைவார்‌; அடி இணை தொழுது எழும்‌ அன்பராம்‌ அடியார்‌சொன்னவாறு அறிவார்‌; துருத்தியார்‌; வேள்விக்‌. குடி உளார்‌; அடிகளை, செடியனேன்‌ நாயேன்‌என்னை, நான்‌ மறக்கும்‌ ஆறு?எம்பெருமானை, என்‌ உடம்பு அடும்‌ பிணி இடர்‌ கெடுத்தானை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கூடுமா றுள்ளன கூடியுங் கோத்துங் கொய்புன ஏனலோ டைவனஞ் சிதறிமாடுமா கோங்கமே மருதமே பொருது மலையெனக் குலைகளை மறிக்குமா றுந்திஓடுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்பாடுமா றறிகிலேன் எம்பெரு மானைப் பழவினை உள்ளன பற்றறுத் தானை.
சொற்பிரிப்பு
கூடுமாறு உள்ளன கூடியும்‌, கோத்தும்‌, கொய்‌ புன ஏனலோடு ஐவனம்‌ சிதறி,மாடு மா கோங்கமே மருதமே பொருது, மலை எனக்‌ குலைகளை மறிக்குமாறு உந்தி,ஓடு மா காவிரித்‌ துருத்தியார்‌; வேள்விக்‌- குடி உளார்‌; அடிகளை, செடியனேன்‌ நாயேன்‌பாடும்‌ ஆறு அறிகிலேன்‌ எம் பெருமானை, பழவினை உள்ளன பற்று அறுத்தானை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கொல்லுமால் யானையின் கொம்பொடு வம்பார் கொழுங்கனிச் செழும்பயன் கொண்டுகூட் டெய்திப்புல்கியுந் தாழ்ந்தும் போந்து தவஞ்செய்யும் போகரும் யோகரும் புலரிவாய் மூழ்கச்செல்லுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்சொல்லுமா றறிகிலேன் எம்பெரு மானைத் தொடர்ந்தடுங் கடும்பிணித் தொடர்வறுத் தானை.
சொற்பிரிப்பு
கொல்லும்‌ மால்யானையின்‌ கொம்பொடு வம்பு ஆர்‌ கொழுங்‌ கனிச்‌ செழும்‌ பயன்‌ கொண்டு, கூட்டு எய்தி,புல்கியும்‌, தாழ்ந்தும்‌, போந்து தவம்‌ செய்யும்‌ போகரும்‌ யோகரும்‌ புலரிவாய்‌ மூழ்கச்‌செல்லும்‌ மா காவிரித்‌ துருத்தியார்‌; வேள்விக்‌ குடி உளார்‌; அடிகளை, செடியனேன்‌ நாயேன்‌சொல்லும்‌ ஆறு அறிகிலேன்‌ எம் பெருமானை, தொடர்ந்து அடும்‌ கடும்‌ பிணித் தொடர்வு அறுத்தானை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பொறியுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொழிந்திழிந் தருவிகள் புன்புலங் கவரக்கறியுமா மிளகொடு கதலியும் உந்திக் கடலுற விளைப்பதே கருதித்தன் கைபோய்எறியுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்அறியுமா றறிகிலேன் எம்பெரு மானை அருவினை உள்ளன ஆசறுத் தானை.
சொற்பிரிப்பு
பொறியும்‌ மா சந்தனத் துண்டமோடு அகிலும்‌ பொழிந்து, இழிந்து, அருவிகள்‌ புன்புலம்‌ கவர,கறியும்‌ மா மிளகொடு கதலியும்‌ உந்தி, கடல்‌ உற விளைப்பதே கருதி, தன்‌ கை போய்‌எறியும்‌ மா காவிரித்‌ துருத்தியார்‌; வேள்விக்‌ குடி உளார்‌; அடிகளை, செடியனேன்‌ நாயேன்‌அறியும்‌ ஆறு அறிகிலேன்‌ எம் பெருமானை, அருவினை உள்ளன ஆசு அறுத்தானை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பொழிந்திழி மும்மதக் களிற்றின மருப்பும் பொன்மலர் வேங்கையின் நன்மலர் உந்திஇழிந்திழிந் தருவிகள் கடும்புனல் ஈண்டி எண்டிசை யோர்களும் ஆடவந் திங்கேசுழிந்திழி காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்ஒழிந்திலேன் பிதற்றுமா றெம்பெரு மானை உற்றநோய் இற்றையே உறவொழித் தானை.
சொற்பிரிப்பு
பொழிந்து இழி மும்மதக்‌ களிற்று இன மருப்பும்‌ பொன்மலர்‌ வேங்கையின்‌ நல்‌ மலர்‌ உந்தி,இழிந்துஇழிந்து, அருவிகள்‌ கடும்‌ புனல்‌ ஈண்டி, எண் திசையோர்களும்‌ ஆட வந்து இங்கேசுழிந்து இழி காவிரித்‌ துருத்தியார்‌; வேள்விக்‌ குடி உளார்‌; அடிகளை, செடியனேன்‌ நாயேன்‌ஒழிந்திலேன்‌, பிதற்றும்‌ ஆறு; எம் பெருமானை, உற்ற நோய்‌ இற்றையே உற ஒழித்தானை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

புகழுமா சந்தனத் துண்டமோ டகிலும் பொன்மணி வரன்றியும் நன்மலர் உந்திஅகழுமா அருங்கரை வளம்படப் பெருகி ஆடுவார் பாவந்தீர்த் தஞ்சனம் அலம்பித்திகழுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்இகழுமா றறிகிலேன் எம்பெரு மானை இழித்தநோய் இம்மையே ஒழிக்கவல் லானை.
சொற்பிரிப்பு
புகழும்‌ மா சந்தனத் துண்டமோடு அகிலும்‌ பொன்மணி வரன்றியும்‌, நல்‌ மலர்‌ உந்தி,அகழுமா அருங்‌கரை வளம்படப்‌ பெருகி, ஆடுவார்‌ பாவம்‌ தீர்த்து, அஞ்சனம்‌ அலம்பி,திகழும்‌ மா காவிரித்‌ துருத்தியார்‌; வேள்விக்‌ குடி உளார்‌; அடிகளை, செடியனேன்‌ நாயேன்‌இகழும்‌ ஆறு: அறிகிலேன்‌ எம் பெருமானை, இழித்த நோய்‌ இம்மையே ஒழிக்க வல்லானை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வரையின்மாங் கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருதுகரையுமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் காம்பீலி சுமந்தொளிர் நித்திலங் கைபோய்விரையுமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்உரையுமா றறிகிலேன் எம்பெரு மானை உலகறி பழவினை அறவொழித் தானை.
சொற்பிரிப்பு
வரையின்‌ மாங்கனியொடு வாழையின் கனியும்‌ வருடியும்‌, வணக்கியும்‌, மராமரம்‌ பொருது,கரையும்‌ மா கருங்கடல்‌ காண்பதே கருத்தாய்‌ , காம்‌பீலி. சுமந்து, ஒளிர் நித்திலம்‌ கை போய்‌,விரையும்‌ மா காவிரித்‌ துருத்தியார்‌; வேள்விக்‌ குடி உளார்‌; அடிகளை, செடியனேன்‌ நாயேன்‌உரையும்‌ ஆறு அறிகிலேன்‌ எம் பெருமானை, உலகு அறி பழவினை அற ஒழித்தானை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஊருமா தேசமே மனமுகந் துள்ளிப் புள்ளினம் பலபடிந் தொண்கரை உகளக்காருமா கருங்கடல் காண்பதே கருத்தாய்க் கவரிமா மயிர்சுமந் தொண்பளிங் கிடறித்தேருமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்ஆருமா றறிகிலேன் எம்பெரு மானை அம்மைநோய் இம்மையே ஆசறுத் தானை.
சொற்பிரிப்பு
ஊரும்‌ மா தேசமே மனம்‌ உகந்து, உள்ளி, புள்‌ இனம் பல படிந்து ஒண்‌ கரை உகள,காரும்‌ மா கருங்கடல்‌ காண்பதே கருத்தாய்‌, கவரி மாமயிர்‌ சுமந்து, ஒண்‌ பளிங்கு இடறி,தேரும்‌ மா காவிரித்‌ துருத்தியார்‌; வேள்விக்‌ குடி உளார்‌; அடிகளை, செடியனேன்‌ நாயேன்‌ஆரும்‌ ஆறு அறிகிலேன்‌ எம் பெருமானை, அம்மை நோய்‌ இம்மையே ஆசு அறுத்தானை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

புலங்களை வளம்படப் போக்கறப் பெருகிப் பொன்களே சுமந்தெங்கும் பூசல்செய் தார்ப்பஇலங்குமார் முத்தினோ டினமணி இடறி இருகரைப் பெருமரம் பீழ்ந்துகொண் டெற்றிக்கலங்குமா காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் செடியனேன் நாயேன்விலங்குமா றறிகிலேன் எம்பெரு மானை மேலைநோய் இம்மையே வீடுவித் தானை.
சொற்பிரிப்பு
புலங்களை வளம்படப்‌ போக்கு அறப்‌ பெருகி, பொன்களே சுமந்து, எங்கும்‌ பூசல்‌ செய்து ஆர்ப்ப,இலங்கும்‌ ஆர்‌ முத்தினோடு இன மணி இடறி, இருகரைப்‌ பெரு மரம்‌ பீழ்ந்து கொண்டு எற்றி,கலங்கு மா காவிரித்‌ துருத்தியார்‌; வேள்விக்‌ குடி உளார்‌; அடிகளை, செடியனேன்‌ நாயேன்‌விலங்கும்‌ ஆறு அறிகிலேன்‌ எம் பெருமானை, மேலை நோய்‌ இம்மையே வீடுவித்தானை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

மங்கையோர் கூறுகந் தேறுகந் தேறி மாறலார் திரிபுரம் நீறெழச் செற்றஅங்கையான் கழலடி அன்றிமற் றறியான் அடியவர்க் கடியவன் தொழுவனா ரூரன்கங்கையார் காவிரித் துருத்தியார் வேள்விக் குடியுளார் அடிகளைச் சேர்த்திய பாடல்தங்கையால் தொழுதுதம் நாவின்மேற் கொள்வார் தவநெறி சென்றம ருலகம்ஆள் பவரே.
சொற்பிரிப்பு
மங்கை ஓர் கூறு உகந்து, ஏறு உகந்து ஏறி, மாறலார்‌ திரிபுரம்‌ நீறு எழச்‌ செற்றஅம்‌ கையான்‌ கழல்‌ அடி அன்றி, மற்று அறியான்‌ அடியவர்க்கு அடியவன்‌, தொழுவன்‌, ஆரூரன்‌கங்கை ஆர்‌ காவிரித்‌ துருத்தியார்‌ வேள்விக்‌ குடி உளார்‌, அடிகளைச்‌ சேர்த்திய பாடல்‌தம்‌ கையால்‌ தொழுது, தம்‌ நாவின் மேல்‌ கொள்வார்‌ தவநெறி சென்று அமருலகம்‌ ஆள்பவரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.