திருமுறை 7 · 7.073 · 11

திருவாரூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
காந்தாரம்
தலம்
ஆரூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கரையுங் கடலும் மலையுங் காலையும் மாலையும் எல்லாம்உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திர லோகன்வரையின் மடமகள் கேள்வன் வானவர் தானவர்க் கெல்லாம்அரையனி ருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
சொற்பிரிப்பு
கரையும்‌, கடலும்‌, மலையும்‌, காலையும்‌, மாலையும்‌, எல்லாம்‌உரையில்‌ விரவி வருவான்‌; ஒருவன்‌; உருத்திர லோகன்‌;வரையின் மடமகள்‌ கேள்வன்‌; வானவர் தானவர்க்கு எல்லாம்‌அரையன்‌; இருப்பதும்‌ ஆரூர்‌; அவர் ‌ எம்மையும்‌ ஆள்வரோ? கேளீர்‌!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

தனியனென் றெள்கி அறியேன் தம்மைப் பெரிது முகப்பன்முனிபவர் தம்மை முனிவன் முகம்பல பேசி மொழியேன்கனிகள் பலவுடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின்இனிய னிருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
சொற்பிரிப்பு
“தனியன்‌”' என்று எள்கி அறியேன்‌; தம்மைப்‌ பெரிதும்‌ உகப்பன்‌;முனிபவர் தம்மை முனிவன்‌; முகம் பல பேசி மொழியேன்‌;கனிகள் பல உடைச்‌ சோலைக்‌ காய்க்குலை ஈன்ற கமுகின்இனியன்‌ இருப்பதும்‌ ஆரூர்‌; அவர் ‌ எம்மையும்‌ ஆள்வரோ? கேளீர்‌!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சொல்லிற் குலாவன்றிச் சொல்லேன் தொடர்ந்தவர்க் குந்துணை அல்லேன்கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும்புல வாணர்அல்லல் பெரிதும் அறுப்பான் அருமறை ஆறங்கம் ஓதும்எல்லை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
சொற்பிரிப்பு
சொல்லில்‌ குலா அன்றிச்‌ சொல்லேன்‌; தொடர்ந்தவர்க்கும்‌ துணை அல்லேன்‌;கல்லில்‌ வலிய மனத்தேன்‌; கற்ற பெரும்‌ புலவாணர்‌அல்லல்‌ பெரிதும்‌ அறுப்பான்‌, அருமறை ஆறு அங்கம்‌ ஓதும்‌எல்லை, இருப்பதும்‌ ஆரூர்‌; அவர் ‌ எம்மையும்‌ ஆள்வரோ? கேளீர்‌!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நெறியும் அறிவுஞ் செறிவும் நீதியும் நான்மிகப் பொல்லேன்மிறையுந் தறியும் உகப்பன் வேண்டிற்றுச் செய்து திரிவன்பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்தஇறைவன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
சொற்பிரிப்பு
நெறியும்‌, அறிவும்‌, செறிவும்‌, நீதியும்‌, நான்‌ மிகப்‌ பொல்லேன்‌:மிறையும்‌ தறியும்‌ உகப்பன்‌; வேண்டிற்றுச்‌ செய்து திரிவேன்‌;பிறையும்‌ அரவும்‌ புனலும் ‌ பிறங்கிய செஞ்சடை வைத்தஇறைவன்‌ இருப்பதும்‌ ஆரூர்‌; அவர் ‌ எம்மையும்‌ ஆள்வரோ? கேளீர்‌!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண் டகஞ்செய்து வாழ்வேன்வேதியர் தம்மை வெகுளேன் வெகுண்டவர்க் குந்துணை ஆகேன்சோதியிற் சோதிஎம் மானைச் சுண்ணவெண் ணீறணிந் திட்டஆதி இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
சொற்பிரிப்பு
நீதியில்‌ ஒன்றும்‌ வழுவேன்‌; நிட்கண்டகம்‌ செய்து வாழ்வேன்‌;வேதியர் தம்மை வெகுளேன்‌; வெகுண்டவர்க்கும்‌ துணை ஆகேன்‌;சோதியில்‌ சோதி எம்மானை, சுண்ண வெண்‌ நீறு அணிந்திட்டஆதி, இருப்பதும்‌ ஆரூர்‌; அவர் ‌ எம்மையும்‌ ஆள்வரோ? கேளீர்‌!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அருத்தம் பெரிதும் உகப்பன் அலவலை யேன்அலந் தார்கள்ஒருத்தர்க் குதவியேன் அல்லேன் உற்றவர்க் குந்துணை அல்லேன்பொருத்தமே லொன்று மிலாதேன் புற்றெடுத் திட்டிடங் கொண்டஅருத்தன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
சொற்பிரிப்பு
அருத்தம்‌ பெரிதும்‌ உகப்பேன்‌; அலவலையேன்‌; அலந்தார்கள்‌ஒருத்தர்க்கு உதவியேன்‌ அல்லேன்‌; உற்றவர்க்கும் துணை அல்லேன்‌;பொருத்தமேல்‌ ஒன்றும்‌ இலாதேன்‌; புற்று எடுத்திட்டு இடம்கொண்டஅருத்தன்‌ இருப்பதும்‌ ஆரூர்‌; அவர் ‌ எம்மையும்‌ ஆள்வரோ? கேளீர்‌!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சந்தம் பலஅறுக் கில்லேன் சார்ந்தவர் தம்மடிச் சாரேன்முந்திப் பொருவிடை யேறி மூவுல குந்திரி வானேகந்தங் கமழ்கொன்றை மாலைக் கண்ணியன் விண்ணவ ரேத்தும்எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
சொற்பிரிப்பு
சந்தம் பல அறுக்கில்லேன்‌ ; சார்ந்தவர் தம்‌ அடிச்‌ சாரேன்‌;முந்திப்‌ பொரு விடை ஏறி மூ உலகும்‌ திரிவானே,கந்தம்‌ கமழ்‌ கொன்றை மாலைக் கண்ணியன், விண்ணவர்‌ ஏத்தும்‌எந்தை, இருப்பதும்‌ ஆரூர்‌; அவர் ‌ எம்மையும்‌ ஆள்வரோ? கேளீர்‌!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நெண்டிக் கொண்டேயுங் கிலாய்ப்பன் நிச்சய மேயிது திண்ணம்மிண்டர்க்கு மிண்டலாற் பேசேன் மெய்ப்பொரு ளன்றி உணரேன்பண்டங் கிலங்கையர் கோனைப் பருவரைக் கீழடர்த் திட்டஅண்டன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
சொற்பிரிப்பு
நெண்டிக் கொண்டேயும்‌ கிலாய்ப்பன்‌; நிச்சயமே; இது திண்ணம்‌;மிண்டர்க்கு மிண்டு அலால்‌ பேசேன்‌ ; மெய்ப்பொருள்‌ அன்றி உணரேன்‌;பண்டு அங்கு இலங்கையர் கோனைப்‌ பருவரைக் கீழ்‌ அடர்த்திட்டஅண்டன்‌ இருப்பதும்‌ ஆரூர்‌; அவர் ‌ எம்மையும்‌ ஆள்வரோ? கேளீர்‌!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

நமர்பிறர் என்ப தறியேன் நான்கண்ட தேகண்டு வாழ்வேன்தமரம் பெரிதும் உகப்பன் தக்கவா றொன்றும் இலாதேன்குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும்அமரன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
சொற்பிரிப்பு
நமர்‌, பிறர்‌, என்பது அறியேன்‌; நான்‌ கண்டதே கண்டு வாழ்வேன்‌;தமரம்‌ பெரிதும்‌ உகப்பன்‌ ; தக்க ஆறு ஒன்றும்‌ இலாதேன்‌;குமரன்‌, திருமால்‌, பிரமன் ‌ கூடிய தேவர்‌ வணங்கும்‌அமரன்‌ இருப்பதும்‌ ஆரூர்‌; அவர் ‌ எம்மையும்‌ ஆள்வரோ? கேளீர்‌!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

ஆசை பலஅறுக் கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன்பேசிற் சழக்கலாற் பேசேன் பிழைப்புடை யேன்மனந் தன்னால்ஓசை பெரிதும் உகப்பேன் ஒலிகடல் நஞ்சமு துண்டஈசன் இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்.
சொற்பிரிப்பு
ஆசை பல அறுக்கில்லேன்‌; ஆரையும்‌ அன்றி உரைப்பேன்‌;பேசில்‌ சழக்கு அலால்‌ பேசேன்‌; பிழைப்பு உடையேன்‌, மனம் தன்னால்‌;ஓசை பெரிதும்‌ உகப்பேன்‌; ஒலிகடல் நஞ்சு அமுது உண்டஈசன்‌ இருப்பதும்‌ ஆரூர்‌; அவர் ‌ எம்மையும்‌ ஆள்வரோ? கேளீர்‌!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

எந்தை இருப்பதும் ஆரூர்அவர் எம்மையும் ஆள்வரோ என்றுசிந்தை செயுந்திறம் வல்லான் திருமரு வுந்திரள் தோளான்மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவலா ரூரன்சந்தம் இசையொடும் வல்லார் தாம்புகழ் எய்துவார் தாமே.
சொற்பிரிப்பு
“எந்தை இருப்பதும்‌ ஆரூர்‌; அவர் ‌ எம்மையும்‌ ஆள்வரோ? என்றுசிந்தை செயும்‌ திறம்‌ வல்லான்‌, திரு மருவும்‌ திரள் தோளான்‌,மந்த முழவம்‌ இயம்பும்‌ வளவயல்‌ நாவல்‌ ஆரூரன்‌சந்தம்‌ இசையொடும்‌ வல்லார் தாம்‌ புகழ்‌ எய்துவர் தாமே,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.