1
எனக்கினித் தினைத்தனைப் புகலிடம் அறிந்தேன்பனைக்கனிப் பழம்படும் பரவையின் கரைமேல்எனக்கினி யவன்தமர்க் கினியவன் எழுமையும்மனக்கினி யவன்றன திடம்வலம் புரமே.
சொற்பிரிப்பு
எனக்கு இனித் தினைத்தனைப் புகல் இடம் அறிந்தேன்;பனைக் கனி பழம் படும் பரவையின் கரைமேல்எனக்கு இனியவன், தமர்க்கு இனியவன், எழுமையும்மனக்கு இனியவன் தனது இடம் வலம்புரமே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.