திருமுறை 7 · 7.071 · 10

திருமறைக்காடு

அருளியவர்
சுந்தரர்
பண்
காந்தாரம்
தலம்
மறைக்காடு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

யாழைப்பழித் தன்னமொழி மங்கையொரு பங்கன்பேழைச்சடை முடிமேற்பிறை வைத்தான்இடம் பேணில்தாழைப்பொழி லூடேசென்று பூழைத்தலை நுழைந்துவாழைக்கனி கூழைக்குரங் குண்ணும்மறைக் காடே.
சொற்பிரிப்பு
யாழைப் பழித்தன்ன மொழி மங்கை ஒரு பங்கன்,பேழைச்‌ சடைமுடி மேல்‌ பிறை வைத்தான்‌, இடம்‌ பேணில்‌தாழைப் பொழில்‌ ஊடே சென்று பூழைத் தலை நுழைந்துவாழைக் கனி கூழைக் குரங்கு உண்ணும்‌ மறைக்காடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

சிகரத்திடை இளவெண்பிறை வைத்தான்இடந் தெரியில்முகரத்திடை முத்தின்னொளி பவளத்திரள் ஓதத்தகரத்திடை தாழைத்திரள் ஞாழற்றிரள் நீழல்மகரத்தொடு சுறவங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே.
சொற்பிரிப்பு
சிகரத்து இடை இள வெண்பிறை வைத்தான்‌ இடம்‌, தெரியில்‌முகரத்து இடை முத்தின்‌ ஒளி பவளத் திரள்‌, ஓதம்‌,தகரத்து இடை தாழைத் திரள் ‌ ஞாழல்‌ திரள்‌ நீழல்‌,மகரத்தொடு சுறவம்‌, கொணர்ந்து எற்றும்‌ மறைக்காடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

அங்கங்களும் மறைநான்குடன் விரித்தானிடம் அறிந்தோம்தெங்கங்களும் நெடும்பெண்ணையும் பழம்வீழ்மணற் படப்பைச்சங்கங்களும் இலங்கிப்பியும் வலம்புரிகளும் இடறிவங்கங்களும் உயர்கூம்பொடு வணங்கும்மறைக் காடே.
சொற்பிரிப்பு
அங்கங்களும்‌ மறை நான்குடன் ‌ விரித்தான்‌ இடம்‌ அறிந்தோம்‌தெங்கங்களும்‌ நெடும் பெண்ணையும் ‌ பழம்‌ வீழ்‌ மணல்‌ படப்பை,சங்கங்களும்‌ இலங்கு இப்பியும் ‌ வலம்புரிகளும்‌ இடறி,வங்கங்களும்‌ உயர் கூம்பொடு வணங்கும்‌ மறைக்காடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

நரைவிரவிய மயிர்தன்னொடு பஞ்சவடி மார்பன்உரைவிரவிய உத்தமனிடம் உணரல்லுறு மனமேகுரைவிரவிய குலசேகரக் கொண்டற்றலை விண்டவரைபுரைவன திரைபொருதிழிந் தெற்றும்மறைக் காடே.
சொற்பிரிப்பு
நரை விரவிய மயிர் தன்னொடு பஞ்சவடி மார்பன்‌,உரை விரவிய உத்தமன்‌, இடம்‌ உணரல்‌ உறு, மனமே!குரை விரவிய குலை சேகரக் ‌ கொண்டல்‌ தலை விண்டவரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும்‌ மறைக்காடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சங்கைப்பட நினையாதெழு நெஞ்சேதொழு தேத்தக்கங்கைச்சடை முடியுடையவர்க் கிடமாவது பரவைஅங்கைக்கடல் அருமாமணி உந்திக்கரைக் கேற்றவங்கத்தொடு சுறவங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே.
சொற்பிரிப்பு
சங்கைப்‌ பட நினையாது எழு, நெஞ்சே, தொழுது ஏத்த!கங்கைச்‌ சடைமுடி உடையவர்க்கு இடம்‌ ஆவது பரவைஅங்கக்‌ கடல்‌. அரு மா மணி உந்திக்‌ கரைக்கு ஏற்ற,வங்கத்தொடு சுறவம்‌ கொணர்ந்து எற்றும்‌ மறைக்காடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அடல்விடையினன் மழுவாளினன் அலராலணி கொன்றைப்படருஞ்சடை முடியுடையவர்க் கிடமாவது பரவைக்கடலிடையிடை கழியருகினிற் கடிநாறுதண் கைதைமடலிடையிடை வெண்குருகெழு மணிநீர்மறைக் காடே.
சொற்பிரிப்பு
அடல்‌ விடையினன்‌, மழு வாளினன்‌, அலரால்‌ அணி கொன்றைப்‌'படரும்‌ சடைமுடி உடையவர்க்கு இடம்‌ ஆவது பரவைக்‌கடல்‌ இடை இடை கழி அருகினில் ‌ கடி நாறு தண்‌ கைதைமடல்‌ இடை இடை வெண்குருகு எழு மணிநீர்‌ மறைக்காடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

முளைவளரிள மதியுடையவன் முன்செய்தவல் வினைகள்களைகளைந்தெனை ஆளல்லுறு கண்டன்னிடஞ் செந்நெல்வளைவிளைவயற் கயல்பாய்தரு குணவார்மணற் கடல்வாய்வளைவளையொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே.
சொற்பிரிப்பு
முளை வளர்‌ இள மதி உடையவன்‌, முன்‌ செய்த வல்வினைகள்‌களை களைந்து எனை ஆளல்‌ உறு கண்டன்‌, இடம்‌ செந்நெல்‌வளை விளை வயல்‌ கயல்‌ பாய்தரு குண, வார்‌ மணல்‌, கடல்வாய்‌வளை வளையொடு சலஞ்சலம்‌ கொணர்ந்து எற்றும்‌ மறைக்காடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நலம்பெரியன சுரும்பார்ந்தன நங்கோனிடம் அறிந்தோம்கலம்பெரியன சாருங்கடற் கரைபொருதிழி கங்கைச்சலம்புரிசடை முடியுடையவர்க் கிடமாவது பரவைவலம்புரியொடு சலஞ்சலங்கொணர்ந் தெற்றும்மறைக் காடே.
சொற்பிரிப்பு
நலம்‌ பெரியன, சுரும்பு ஆர்ந்தன, நம் கோன்‌ இடம்‌ அறிந்தோம்‌;கலம்‌ பெரியன சாரும்‌ கடல்‌ கரை பொருது இழி கங்கைச்‌சலம்‌ புரி சடைமுடி உடையவர்க்கு இடம்‌ ஆவது பரவைவலம்புரியொடு சலஞ்சலம்‌ கொணர்ந்து எற்றும்‌ மறைக்காடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

குண்டாடியுஞ் சமணாடியுங் குற்றுடுக்கையர் தாமுங்கண்டார்கண்ட காரணம்மவை கருதாதுகை தொழுமின்எண்டோ ளினன் முக்கண்ணினன் ஏழிசையினன் அறுகால்வண்டாடுதண் பொழில்சூழ்ந்தெழு மணிநீர்மறைக் காடே.
சொற்பிரிப்பு
குண்டாடியும்‌ சமண்‌ ஆடியும் ‌ குற்று உடுக்கையர் தாமும்‌கண்டார்‌ கண்ட காரணம்‌ அவை கருதாது கைதொழுமின்‌எண்தோளினன்‌, முக்கண்ணினன்‌, ஏழ்‌ இசையினன்‌, அறுகால்‌வண்டு ஆடு தண்பொழில்‌ சூழ்ந்து எழு மணிநீர்‌ மறைக்காடே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பாரூர்பல புடைசூழ்வள வயல்நாவலர் வேந்தன்வாரூர்வன முலையாள்உமை பங்கன்மறைக் காட்டைஆரூரன தமிழ்மாலைகள் பாடும்மடித் தொண்டர்நீரூர்தரு நிலனோடுயர் புகழாகுவர் தாமே.
சொற்பிரிப்பு
பார்‌ ஊர் பல புடை சூழ்‌ வள வயல்‌ நாவலர் வேந்தன்‌வார்‌ ஊர்‌ வனமுலையாள்‌ உமை பங்கன்‌ மறைக்காட்டைஆரூரன தமிழ் மாலைகள்‌ பாடும்‌ அடித்தொண்டர்‌நீர்‌ ஊர் தரு நிலனோடு உயர் ‌ புகழ்‌ ஆகுவர்‌, தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.