1
கங்கை வார்சடை யாய்கண நாதா கால காலனே காமனுக் கனலேபொங்கு மாகடல் விடமிடற் றானே பூத நாதனே புண்ணியா புனிதாசெங்கண் மால்விடை யாய்தெளி தேனே தீர்த்த னேதிரு வாவடு துறையுள்அங்க ணாஎனை அஞ்சலென் றருளாய் ஆரெ னக்குற வமரர்கள் ஏறே.
சொற்பிரிப்பு
கங்கை வார் சடையாய்! கணநாதா! காலகாலனே! காமனுக்கு அனலே!பொங்கு மாகடல் விடம் மிடற்றானே! பூதநாதனே! புண்ணியா! புனிதா!செங்கண் மால்விடையாய்! தெளி தேனே! தீர்த்தனே! திரு ஆவடுதுறையுள்அங்கணா! எனை, அஞ்சல்! என்று அருளாய்! ஆர் எனக்கு உறவு? அமரர்கள் ஏறே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.