திருமுறை 7 · 7.069 · 11

வடதிருமுல்லைவாயில்

அருளியவர்
சுந்தரர்
பண்
தக்கேசி
தலம்
வடதிருமுல்லைவாயில்
நாடு
தொண்டைநாடு

1

திருவுமெய்ப் பொருளுஞ் செல்வமும் எனக்குன் சீருடைக் கழல்கள்என் றெண்ணிஒருவரை மதியா துறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய்த் திரிவேன்முருகமர் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் வாயினால் உன்னைப்பரவிடும் அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே.
சொற்பிரிப்பு
திருவும்‌ மெய்ப்பொருளும்‌ செல்வமும்‌, எனக்கு உன்‌ சீர்‌ உடைக்‌ கழல்கள்‌ என்று எண்ணி,ஒருவரை மதியாது உறாமைகள்‌ செய்தும்‌, ஊடியும்‌, உறைப்பனாய்த்‌ திரிவேன்‌;முருகு அமர்‌ சோலை சூழ்‌ திரு முல்லை வாயிலாய்‌! வாயினால்‌ உன்னைப்‌பரவிடும்‌ அடியேன்‌ படு துயர்‌ களையாய்‌, பாசுபதா! பரஞ்சுடரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கூடிய இலயஞ் சதிபிழை யாமைக் கொடியிடை உமையவள் காணஆடிய அழகா அருமறைப் பொருளே அங்கணா எங்குற்றாய் என்றுதேடிய வானோர் சேர்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால்பாடிய அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே.
சொற்பிரிப்பு
கூடிய இலயம்‌ சதி பிழையாமை, கொடி இடை உமை அவள்‌ காண,ஆடிய அழகா! அருமறைப் பொருளே! அங்கணா! எங்கு உற்றாய்‌? என்றுதேடிய வானோர்‌ சேர்‌ திரு முல்லை வாயிலாய்‌! திருப்‌புகழ்‌ விருப்பால்‌பாடிய அடியேன்‌ படு துயர்‌ களையாய்‌, பாசுபதா! பரஞ்சுடரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

விண்பணிந் தேத்தும் வேதியா மாதர் வெருவிட வேழமன் றுரித்தாய்செண்பகச் சோலை சூழ்திரு முல்லை வாயிலாய் தேவர்தம் மரசேதண்பொழில் ஒற்றி மாநகர் உடையாய் சங்கிலிக் காஎன்கண் கொண்டபண்பநின் னடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே.
சொற்பிரிப்பு
விண்‌ பணிந்து ஏத்தும்‌ வேதியா! மாதர்‌ வெருவிட, வேழம்‌ அன்று உரித்தாய்‌!செண்பகச் சோலை சூழ்‌ திரு முல்லை வாயிலாய்‌! தேவர் தம்‌ அரசே!தண் பொழில்‌ ஒற்றி மா நகர்‌ உடையாய்‌! சங்கிலிக்கா என்‌ கண்‌ கொண்டபண்ப! நின்‌ அடியேன்‌ படு துயர்‌ களையாய்‌, பாசுபதா! பரஞ்சுடரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பொன்னலங் கழனிப் புதுவிரை மருவிப் பொறிவரி வண்டிசை பாடஅந்நலங் கமலத் தவிசின்மேல் உறங்கும் அலவன்வந் துலவிட அள்ளல்செந்நெலங் கழனி சூழ்திரு முல்லை வாயிலாய் திருப்புகழ் விருப்பால்பன்னலந் தமிழாற் பாடுவேற் கருளாய் பாசுப தாபரஞ் சுடரே.
சொற்பிரிப்பு
பொன்‌ நலம்‌ கழனிப்‌ புது விரை மருவி, பொறி வரி வண்டு இசை பாட,அம்‌ நலம்‌ கமலத் தவிசின் மேல்‌ உறங்கும்‌ அலவன்‌ வந்து உலவிட, அள்ளல்‌செந்நெல்‌ அம் கழனி சூழ்‌ திரு முல்லை வாயிலாய்‌! திருப்‌புகழ்‌ விருப்பால்‌பன்னல்‌ அம்‌ தமிழால்‌ பாடுவேற்கு அருளாய்‌, பாசுபதா! பரஞ்சுடரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

சந்தன வேருங் காரகிற் குறடும் தண்மயிற் பீலியுங் கரியின்தந்தமுந் தரளக் குவைகளும் பவளக் கொடிகளுஞ் சுமந்துகொண் டுந்திவந்திழி பாலி வடகரை முல்லை வாயிலாய் மாசிலா மணியேபந்தனை கெடுத்தென் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே.
சொற்பிரிப்பு
சந்தன வேரும்‌, கார்‌ அகில் குறடும்‌, தண்‌ மயில் பீலியும்‌, கரியின்‌தந்தமும்‌, தரளக் குவைகளும்‌, பவளக்‌ கொடிகளும்‌, சுமந்து கொண்டு உந்தி .வத்து இழி பாலி வடகரை முல்லை வாயிலாய்‌! மாசு இலா மணியே!பந்தனை கெடுத்து என்‌ படு துய‌ர் களையாய்‌, பாசுபதா! பரஞ்சுடரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மற்றுநான் பெற்ற தார்பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசிக்குற்றமே செயினுங் குணமெனக் கொள்ளுங் கொள்கையால் மிகைபல செய்தேன்செற்றுமீ தோடுந் திரிபுரம் எரித்த திருமுல்லை வாயிலாய் அடியேன்பற்றிலேன் உற்ற படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே.
சொற்பிரிப்பு
மற்று நான்‌ பெற்றது ஆர்‌ பெற வல்லார்‌? வள்ளலே! கள்ளமே பேசிக்‌குற்றமே செயினும்‌, குணம்‌ எனக்‌ கொள்ளும்‌ கொள்கையால்‌ மிகை பல செய்தேன்‌;செற்று மீது ஒடும்‌ திரிபுரம்‌ எரித்த திரு முல்லை வாயிலாய்‌! அடியேன்‌பற்று இலேன்‌; உற்ற படு துயர்‌ களையாய்‌, பாசுபதா! பரஞ்சுடரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

மணிகெழு செவ்வாய் வெண்ணகைக் கரிய வார்குழல் மாமயிற் சாயல்அணிகெழு கொங்கை அங்கயற் கண்ணார் அருநடம் ஆடல் அறாததிணிபொழில் தழுவு திருமுல்லை வாயிற் செல்வனே எல்லியும் பகலும்பணியது செய்வேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே.
சொற்பிரிப்பு
மணி கெழு செவ்வாய்‌, வெண்நகை, கரிய வார்குழல்‌, மா மயில் சாயல்‌,அணி கெழு கொங்கை, அம்‌ கயல் கண்ணார்‌ அருநடம்‌ ஆடல்‌ அறாததிணி பொழில்‌ தழுவு திரு முல்லை வாயில்‌ செல்வனே ! எல்லியும்‌ பகலும்‌பணி அது செய்வேன்‌ படு துயர்‌ களையாய்‌; பாசுபதா! பரஞ்சுடரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நம்பனே அன்று வெண்ணெய்நல் லூரில் நாயினேன் தன்னையாட் கொண்டசம்புவே உம்ப ரார்தொழு தேத்துந் தடங்கடல் நஞ்சுண்ட கண்டாசெம்பொன்மா ளிகைசூழ் திருமுல்லை வாயில் தேடியான் திரிதர்வேன் கண்டபைம்பொனே அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே.
சொற்பிரிப்பு
நம்பனே! அன்று வெண்ணெய்‌ நல்லூரில்‌ நாயினேன் தன்னை ஆட்கொண்டசம்புவே! உம்பரார்‌ தொழுது ஏத்தும்‌ தடங்கடல்‌ நஞ்சு உண்‌ட கண்டா!செம்பொன்‌ மாளிகை சூழ்‌ திரு முல்லை வாயில்‌ தேடி, யான்‌ திரிதர்வேன்‌, கண்டபைம்பொனே! அடியேன்‌ படு துயர்‌ களையாய்‌, பாசுபதா! பரஞ்சுடரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மட்டுலா மலர்கொண் டடியிணை வணங்கும் மாணிதன் மேல்மதி யாதேகட்டுவான் வந்த காலனை மாளக் காலினால் ஆருயிர் செகுத்தசிட்டனே செல்வத் திருமுல்லை வாயிற் செல்வனே செழுமறை பகர்ந்தபட்டனே அடியேன் படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே.
சொற்பிரிப்பு
மட்டு உலாம்‌ மலர்‌ கொண்டு அடி இணை வணங்கும்‌ மாணி தன் மேல்‌ மதியாதேகட்டுவான்‌ வந்த காலனை, மாளக்‌ காலினால்‌ ஆர்‌ உயிர்‌ செகுத்தசிட்டனே! செல்வத்‌ திரு முல்லை வாயில்‌ செல்வனே! செழுமறை பகர்ந்தபட்டனே! அடியேன்‌ படு துயர்‌ களையாய்‌, பாசுபதா! பரஞ்சுடரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

சொல்லரும் புகழான் தொண்டைமான் களிற்றைச் சூழ்கொடி முல்லையாற் கட்டிட்டெல்லையில் இன்பம் அவன்பெற வெளிப்பட் டருளிய இறைவனே என்றும்நல்லவர் பரவுந் திருமுல்லை வாயில் நாதனே நரைவிடை ஏறீபல்கலைப் பொருளே படுதுயர் களையாய் பாசுப தாபரஞ் சுடரே.
சொற்பிரிப்பு
சொல்ல (அ)ரும்‌ புகழான்‌ தொண்டைமான்‌ களிற்றைச்‌ சூழ்‌ கொடி முல்லையால்‌ கட்டிட்டு,எல்லை இல்‌ இன்பம்‌ அவன்‌ பெற வெளிப்பட்டு, அருளிய இறைவனே! என்றும்‌நல்லவர்‌ பரவும்‌ திரு முல்லை வாயில்‌ நாதனே! நரைவிடை ஏறி!பல்கலைப் பொருளே! படு துயர்‌ களையாய்‌, பாசுபதா! பரஞ்சுடரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

விரைதரு மலர்மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்டஎம் மானைத்திரைதரு புனல்சூழ் திருமுல்லை வாயிற் செல்வனை நாவலா ரூரன்உரைதரு மாலையோர் அஞ்சினோ டஞ்சும் உள்குளிர்ந் தேத்த வல்லார்கள்நரைதிரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க் கரசே.
சொற்பிரிப்பு
விரை தரு மலர்மேல்‌ அயனொடு மாலும்‌ வெருவிட நீண்ட எம்மானை,திரை தரு புனல்‌ சூழ்‌ திரு முல்லை வாயில்‌ செல்வனை, நாவல்‌ ஆரூரன்‌உரை தரு மாலை ஓர்‌ அஞ்சினோடு அஞ்சும்‌ உள்‌ குளிர்ந்து ஏ்த்த வல்லார்கள்‌,நரை திரை மூப்பும்‌ நடலையும்‌ இன்றி நண்ணுவர்‌, விண்ணவர்க்கு அரசே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.