1
செம்பொன் மேனிவெண் ணீறணி வானைக் கரிய கண்டனை மால்அயன் காணாச்சம்பு வைத்தழல் அங்கையி னானைச் சாம வேதனைத் தன்னொப்பி லானைக்கும்ப மாகரி யின்னுரி யானைக் கோவின் மேல்வருங் கோவினை எங்கள்நம்ப னைநள் ளாறனை அமுதை நாயி னேன்மறந் தென்நினைக் கேனே.
சொற்பிரிப்பு
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை, கரிய கண்டனை, மால் அயன் காணாச்சம்புவை, தழல் அங்கையினானை, சாமவேதனை, தன் ஒப்பு இலானை,கும்ப மாகரியின் உரியானை, கோவின் மேல் வரும் கோவினை, எங்கள்நம்பனை, நள்ளாறனை, அமுதை, நாயினேன் மறந்து என் நினைக்கேனே?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.