1
ஊனங் கத்துயிர்ப் பாயுல கெல்லாம் ஓங்கா ரத்துரு வாகிநின் றானைவானங் கைத்தவர்க் கும்மளப் பரிய வள்ள லையடி யார்கள்தம் உள்ளத்தேனங் கைத்தமு தாகியுள் ளூறுந் தேச னைத்திளைத் தற்கினி யானைமானங் கைத்தலத் தேந்தவல் லானை வலிவ லந்தனில் வந்துகண் டேனே.
சொற்பிரிப்பு
ஊன் அங்கத்து உயிர்ப்பாய், உலகு எல்லாம் ஓங்காரத்து உரு ஆகி நின்றானை;வானம் கைத்தவர்க்கும் அளப்ப (அ)ரிய வள்ளலை; அடியார்கள் தம் உள்ளத்தேன், அங்கத்து அமுது, ஆகி, உள் ஊறும் தேசனை; திளைத்தற்கு இனியானை;மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை; வலிவலம் தனில் வந்து கண்டேனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.