1
மறைய வனொரு மாணிவந் தடைய வார மாய்அவன் ஆருயிர் நிறுத்தக்கறைகொள் வேலுடைக் காலனைக் காலாற் கடந்த காரணங் கண்டுகண் டடியேன்இறைவன் எம்பெரு மானென்றெப் போதும் ஏத்தி ஏத்திநின் றஞ்சலி செய்துன்அறைகொள் சேவடிக் கன்பொடும் அடைந்தேன் ஆவ டுதுறை ஆதிஎம் மானே.
சொற்பிரிப்பு
மறையவன் ஒரு மாணி வந்து அடைய, வாரமாய், அவன் ஆர் உயிர் நிறுத்தக்கறை கொள் வேல் உடைக் காலனைக் காலால் கடந்த காரணம் கண்டுகண்டு, அடியேன்,“இறைவன், எம்பெருமான்” என்று எப்போதும் ஏத்திஏத்தி நின்று அஞ்சலி செய்து, உன்அறை கொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.