திருமுறை 7 · 7.065 · 10

திருநின்றியூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
தக்கேசி
தலம்
நின்றியூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

திருவும் வண்மையுந் திண்டிறல் அரசுஞ் சிலந்தி யார்செய்த செய்பணி கண்டுமருவு கோச்செங்க ணான்றனக் களித்த வார்த்தை கேட்டுநுன் மலரடி அடைந்தேன்பெருகு பொன்னிவந் துந்துபன் மணியைப் பிள்ளைப் பல்கணம் பண்ணையுள் நண்ணித்தெருவுந் தெற்றியும் முற்றமும் பற்றித் திரட்டுந் தென்றிரு நின்றியூ ரானே.
சொற்பிரிப்பு
திருவும்‌, வண்மையும்‌, திண்‌ திறல்‌ அரசும்‌, சிலந்தியார்‌ செய்த செய்பணி கண்டுமருவு கோச்செங்கணான்‌ தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன்‌ மலர்‌ அடி அடைந்தேன்‌பெருகு பொன்னி வந்து உந்து பல் மணியைப்‌ பிள்ளைப் பல்கணம்‌ பண்ணையுள்‌ நண்ணி,தெருவும்‌ தெற்றியும்‌ முற்றமும்‌ பற்றி, திரட்டும்‌ தென் திருநின்றியூரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அணிகொள் ஆடையம் பூண்மணி மாலை அமுது செய்தமு தம்பெறு சண்டிஇணைகொள் ஏழெழு நூறிரு பனுவல் ஈன்ற வன்றிரு நாவினுக் கரையன்கணைகொள் கண்ணப்பன் என்றிவர் பெற்ற காத லின்னருள் ஆதரித் தடைந்தேன்திணைகொள் செந்தமிழ் பைங்கிளி தெரியுஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.
சொற்பிரிப்பு
அணிகொள்‌ ஆடை, அம்‌ பூண்‌, மணி மாலை, அமுது செய்த அமுதம்‌, பெறு சண்டி;இணை கொள்‌ ஏழ்‌-எழு நூறு இரும்‌ பனுவல்‌ ஈந்தவன்‌ திரு நாவினுக்கு அரையன்‌;கணை கொள்‌ கண்ணப்பன்‌; என்று இவர்‌ பெற்ற காதல்‌ இன்‌ அருள்‌ ஆதரித்து அடைந்தேன்‌திணை கொள்‌ செந்தமிழ்‌ பைங்கிளி தெரியும்‌ ‌ செல்வத்‌ தென்திரு நின்‌றியூரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

மொய்த்த சீர்முந்நூற் றறுபது வேலி மூன்று நூறுவே தியரொடு நுனக்குஒத்த பொன்மணிக் கலசங்க ளேந்தி ஓங்கு நின்றியூர் என்றுனக் களிப்பப்பத்தி செய்தவப் பரசுரா மற்குப் பாதங் காட்டிய நீதிகண் டடைந்தேன்சித்தர் வானவர் தானவர் வணங்குஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.
சொற்பிரிப்பு
மொய்த்த சீர்‌ முந்நூற்று அறுபது வேலி மூன்று நூறு வேதியரொடு நுனக்குஒத்த பொன் மணிக் கலசங்கள்‌ ஏந்தி, ஓங்கும்‌ நின்றியூர்‌ என்று உனக்கு அளிப்ப,பத்தி செய்த அப்‌பரசுராமற்குப்‌ பாதம்‌ காட்டிய நீதி கண்டு அடைந்தேன்‌சித்தர்‌, வானவர்‌, தானவர்‌, வணங்கும்‌ செல்வத்‌ தென்திரு நின்‌றியூரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

இரவி நீள்சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன்முலைக் கலசங்க ளேந்திச்சுரபி பால்சொரிந் தாட்டிநின் பாதந் தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டுப்பரவி உள்கிவன் பாசத்தை அறுத்துப் பரம வந்துநுன் பாதத்தை அடைந்தேன்நிரவி நித்திலம் அத்தகு செம்பொன் அளிக்குந் தென்றிரு நின்றியூ ரானே.
சொற்பிரிப்பு
இரவி நீள்‌ சுடர்‌ எழுவதன்‌ முன்னம்‌ எழுந்து, தன்‌ முலைக் கலசங்கள்‌ ஏந்தி,சுரபி பால்‌ சொரிந்து, ஆட்டி, நின்‌ பாதம்‌ தொடர்ந்த வார்த்தை திடம்படக் கேட்டு,பரவி உள்கி, வன்‌ பாசத்தை அறுத்து, பரம! வந்து, நுன்‌ பாதத்தை அடைந்தேன்‌.நிரவி நித்திலம்‌, அத்‌தகு செம்பொன்‌, அளிக்கும்‌ தென் திருநின்றியூரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வந்தோர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடுநீ ஆள்கென அருளிச்சந்தி மூன்றிலுந் தாபரம் நிறுத்திச் சகளி செய்திறைஞ் சகத்தியர் தமக்குச்சிந்து மாமணி அணிதிருப் பொதியிற் சேர்வு நல்கிய செல்வங்கண் டடைந்தேன்செந்தண் மாமலர்த் திருமகள் மருவுஞ் செல்வத் தென்றிரு நின்றியூ ரானே.
சொற்பிரிப்பு
வந்து ஓர்‌ இந்திரன்‌ வழிபட மகிழ்ந்து, “வான நாடு நீ ஆள்க!” என அருளி,சந்தி மூன்றிலும்‌ தாபரம்‌ நிறுத்திச்‌ சகளி செய்து இறைஞ்சு அகத்தியர் தமக்குச்‌சிந்து மா மணி அணி திருப்‌ பொதியில்‌ சேர்வு நல்கிய செல்வம்‌ கண்டு அடைந்தேன்‌செந்‌தண்‌ மா மலர்த்‌ திருமகள்‌ மருவும்‌ செல்வத்‌ தென்‌ திரு நின்றியூரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

காது பொத்தரைக் கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்பருஞ் சீயங்கோதில் மாதவர் குழுவுடன் கேட்பக் கோல ஆல்நிழற் கீழறம் பகரவேதஞ் செய்தவர் எய்திய இன்பம் யானுங் கேட்டுநின் இணையடி அடைந்தேன்நீதி வேதியர் நிறைபுகழ் உலகில் நிலவு தென்றிரு நின்றியூ ரானே.
சொற்பிரிப்பு
காது பொத்தரைக்‌ கின்னரர்‌, உழுவை, கடிக்கும்‌ பன்னகம்‌, பிடிப்ப (அ)ரும்‌ சீயம்‌,கோது இல்‌ மாதவர் குழு உடன்‌, கேட்பக்‌ கோல ஆல் நிழல் கீழ்‌ அறம்‌ பகர;வேதம்‌ செய்தவர்‌ எய்திய இன்பம்‌ யானும்‌ கேட்டு, நின்‌ இணையடி அடைந்தேன்நீதி வேதியர்‌ நிறை புகழ் உலகில் நிலவு தென்திரு நின்றியூரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கோடு நான்குடைக் குஞ்சரங் குலுங்க நலங்கொள் பாதம்நின் றேத்திய பொழுதேபீடு விண்மிசைப் பெருமையும் பெற்ற பெற்றி கேட்டுநின் பொற்கழல் அடைந்தேன்பேடை மஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளைக் கிள்ளையும் எனப்பிறை நுதலார்நீடு மாடங்கள் மாளிகை தோறும் நிலவு தென்றிரு நின்றியூ ரானே.
சொற்பிரிப்பு
கோடு நான்குடைக்‌ குஞ்சரம்‌ குலுங்க, நலம்‌ கொள்‌ பாதம்‌ நின்று ஏத்திய பொழுதேபீடு விண்மிசைப்‌ பெருமையும்‌ பெற்ற பெற்றி கேட்டு நின்‌ பொன்கழல்‌ அடைந்தேன்‌பேடை மஞ்ஞையும்‌, பிணைகளின்‌ கன்றும்‌, பிள்ளைக் கிள்ளையும்‌, எனப்‌ பிறை நுதலார்‌நீடு மாடங்கள்‌ மாளிகை தோறும்‌ நிலவு தென் திருநின்றியூரானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

9 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 10-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை