1
நீறு தாங்கிய திருநுத லானை நெற்றிக் கண்ணனை நிரைவளை மடந்தைகூறு தாங்கிய கொள்கையி னானைக் குற்றம் இல்லியைக் கற்றையஞ் சடைமேல்ஆறு தாங்கிய அழகனை அமரர்க் கரிய சோதியை வரிவரால் உகளுஞ்சேறு தாங்கிய திருத்தினை நகருட் சிவக்கொ ழுந்தினைச் சென்றடை மனனே.
சொற்பிரிப்பு
நீறு தாங்கிய திருநுதலானை, நெற்றிக் கண்ணனை, நிரை வளை மடந்தைகூறு தாங்கிய கொள்கையினானை, குற்றம் இல்லியை, கற்றை அம் சடைமேல்ஆறு தாங்கிய அழகனை, அமரர்க்கு அரிய சோதியை, வரிவரால் உகளும்சேறு தாங்கிய திருத்தினை நகருள் சிவக்கொழுந்தினைச் சென்று அடை, மனனே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.