திருமுறை 7 · 7.063 · 10

திருப்பதிகம்

அருளியவர்
சுந்தரர்
பண்
தக்கேசி
தலம்
முதுகுன்றம்
நாடு
நடுநாடு

1

மெய்யைமுற் றப்பொடிப் பூசியோர் நம்பி வேதம்நான் கும்விரித் தோதியோர் நம்பிகையிலோர் வெண்மழு ஏந்தியோர் நம்பி கண்ணு மூன்றுடை யாயொரு நம்பிசெய்யநம் பிசிறு செஞ்சடை நம்பி திரிபுரந் தீயெழச் செற்றதோர் வில்லால்எய்தநம் பியென்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
சொற்பிரிப்பு
மெய்யை முற்றப்‌ பொடிப் பூசி ஓர்‌ நம்பி, வேதம் நான்கும்‌ விரித்து ஓதி ஓர்‌ நம்பி,கையில்‌ ஒர்‌ வெண்‌ மழு ஏந்தி ஓர்‌ நம்பி, கண்ணு மூன்றும்‌ உடையாய்‌ ஒரு நம்பி,செய்ய நம்பி, சிறு செஞ்சடை நம்பி, திரிபுரம்‌ தீ எழச்‌ செற்றது ஓர்‌ வில்லால்‌எய்த நம்பி, என்னை ஆள்‌ உடை நம்பி எழுபிறப்பும்‌ எங்கள்‌ நம்பி கண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

திங்கள் நம்பிமுடி மேலடி யார்பால் சிறந்தநம் பிபிறந் தஉயிர்க் கெல்லாம்அங்கண் நம்பியருள் மால்விசும் பாளும் அமரர் நம்பிகும ரன்முதல் தேவர்தங்கள் நம்பிதவத் துக்கொரு நம்பி தாதை என்றுன் சரண்பணிந் தேத்தும்எங்கள் நம்பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
சொற்பிரிப்பு
திங்கள்‌ நம்பி, முடி மேல்‌; அடியார்பால்‌ சிறந்த நம்பி; பிறந்த உயிர்க்கு எல்லாம்‌அம்‌ கண்‌ நம்பி; அருள்‌ மால்‌ விசும்பு ஆளும்‌ அமரர்‌ நம்பி; குமரன்‌ முதல்‌ தேவர்‌தங்கள்‌ நம்பி; தவத்துக்கு ஒரு நம்பி; 'தாதை' என்று உன்‌ சரண்‌ பணிந்து ஏத்தும்‌எங்கள்‌ நம்பி; என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும்‌ எங்கள்‌ நம்பி கண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வருந்த அன்றுமத யானை உரித்த வழக்கு நம்பிமுழக் குங்கடல் நஞ்சம்அருந்தும் நம்பிஅம ரர்க்கமு தீந்த அருளென் நம்பிபொரு ளால்வரு நட்டம்புரிந்த நம்பிபுரி நூலுடை நம்பி பொழுதும் விண்ணும்முழு தும்பல வாகிஇருந்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
சொற்பிரிப்பு
வருந்த அன்று மதயானை உரித்த வழக்கு நம்பி, முழக்கும்‌ கடல்‌ நஞ்சம்‌அருந்தும்‌ நம்பி, அமரர்க்கு அமுது ஈந்த அருள்‌ என்‌ நம்பி, பொருளால்‌ வரு நட்டம்‌புரிந்த நம்பி, புரிநூல்‌ உடை நம்பி, பொழுதும்‌ விண்ணும்‌ முழுதும்‌ பல ஆகிஇருந்த நம்பி, என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும்‌ எங்கள்‌ நம்பி கண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஊறு நம்பிஅமு தாஉயிர்க் கெல்லாம் உரிய நம்பிதெரி யம்மறை அங்கங்கூறு நம்பிமுனி வர்க்கருங் கூற்றைக் குமைத்த நம்பிகுமை யாப்புலன் ஐந்துஞ்சீறு நம்பிதிரு வெள்ளடை நம்பி செங்கண்வெள் ளைச்செழுங் கோட்டெரு தென்றும்ஏறு நம்பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
சொற்பிரிப்பு
ஊறும்‌ நம்பி, அமுதா; உயிர்க்கு எல்லாம்‌ உரிய நம்பி; தெரிய(ம்‌) மறை அங்கம்‌,கூறும்‌ நம்பி, முனிவர்க்கு; அருங்கூற்றைக்‌ குமைத்த நம்பி; குமையாப்‌ புலன்‌ ஐந்தும்‌சீறும்‌ நம்பி; திரு வெள்ளடை நம்பி; செங்கண்‌ வெள்ளைச்‌ செழுங்‌ கோட்டு எருது என்றும்‌ஏறும்‌ நம்பி; என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும்‌ எங்கள்‌ நம்பி கண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

குற்ற நம்பிகுறு காரெயில் மூன்றைக் குலைத்த நம்பிசிலை யாவரை கையிற்பற்று நம்பிபர மானந்த வெள்ளம் பணிக்கும் நம்பிஎனப் பாடுத லல்லால்மற்று நம்பிஉனக் கென்செய வல்லேன் மதியி லேன்படு வெந்துயர் எல்லாம்எற்று நம்பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
சொற்பிரிப்பு
“குற்ற நம்பி, கார்‌ எயில்‌ மூன்றைக் குலைத்த நம்பி சிலையா வரை கையிற்பற்றும்‌ நம்பி, பரமானந்த வெள்ளம்‌ பணிக்கும்‌ நம்பி” எனப்‌ பாடுதல்‌ அல்லால்‌மற்று நம்பி! உனக்கு என்‌ செய வல்லேன்‌? மதியிலேன்‌ படு வெந்துயர்‌ எல்லாம்‌எற்றும்‌ நம்பி, என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும்‌ எங்கள்‌ நம்பி கண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

அரித்த நம்பிஅடி கைதொழு வார்நோய் ஆண்ட நம்பிமுன்னை ஈண்டுல கங்கள்தெரித்த நம்பிஒரு சேவுடை நம்பி சில்பலிக் கென்றகந் தோறுமெய் வேடந்தரித்த நம்பிசம யங்களின் நம்பி தக்கன்றன் வேள்விபுக் கன்றிமை யோரைஇரித்த நம்பிஎன்னை ஆளுடை நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
சொற்பிரிப்பு
அரித்த நம்பி, அடி கைதொழுவார்‌ நோய்‌; ஆண்ட நம்பி, முன்னை; ஈண்டு உலகங்கள்‌தெரித்த நம்பி; ஒரு சே உடை நம்பி; சில்பலிக்கு என்று அகம்தோறும்‌ மெய்‌ வேடம்‌தரித்த நம்பி; சமயங்களின்‌ நம்பி; தக்கன் தன்‌ வேள்வி புக்கு அன்று இமையோரைஇரித்த நம்பி; என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும்‌ எங்கள்‌ நம்பி கண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பின்னை நம்பும்புயத் தான்நெடு மாலும் பிரமனும் என்றிவர் நாடியுங் காணாஉன்னை நம்பிஒரு வர்க்கெய்த லாமே உலகு நம்பிஉரை செய்யும தல்லால்முன்னைநம் பிபின்னும் வார்சடை நம்பி முழுதிவை இத்தனை யுந்தொகுத் தாண்டதென்னை நம்பிஎம் பிரானாய நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
சொற்பிரிப்பு
பின்னை நம்பும்‌ புயத்தான்‌ நெடுமாலும்‌ பிரமனும்‌ என்று இவர்‌ நாடியும்‌ காணாஉன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல்‌ ஆமே, உலகு நம்பி உரை செய்யும் அது அல்லால்‌?முன்னை நம்பி; பின்னும்‌ வார்சடை நம்பி; முழுது இவை இத்தனையும்‌ தொகுத்து ஆண்டதுஎன்னை? நம்பி! எம்பிரான்‌ ஆய நம்பி எழுபிறப்பும்‌ எங்கள்‌ நம்பி கண்டாயே,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சொல்லை நம்பிபொரு ளாய்நின்ற நம்பி தோற்றம் ஈறுமுத லாகிய நம்பிவல்லை நம்பிஅடி யார்க்கருள் செய்ய வருந்தி நம்பிஉனக் காட்செய கில்லார்அல்லல் நம்பிபடு கின்றதென் நாடி அணங்கொரு பாகம்வைத் தெண்கணம் போற்றஇல்ல நம்பியிடு பிச்சைகொள் நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
சொற்பிரிப்பு
சொல்லை நம்பி; பொருளாய்‌ நின்ற நம்பி; தோற்றம்‌, ஈறு, முதல்‌, ஆகிய நம்பி;வல்லை நம்பி, அடியார்க்கு அருள் செய்ய; வருந்தி நம்பி உனக்கு ஆட்செய கில்லார்‌அல்லல்‌ நம்பி! படுகின்றது என்‌? நாடி அணங்கு ஒருபாகம்‌ வைத்து, எண்கணம்‌ போற்ற,இல்லம்‌ நம்பி இடு பிச்சை கொள்‌ தம்பி எழுபிறப்பும்‌ எங்கள்‌ நம்பி கண்டாயே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

காண்டு நம்பிகழற் சேவடி என்றுங் கலந்துனைக் காதலித் தாட்செய்கிற் பாரைஆண்டு நம்பியவர் முன்கதி சேர அருளும் நம்பிகுரு மாப்பிறை பாம்பைத்தீண்டுநம் பிசென்னி யிற்கன்னி தங்கத் திருத்து நம்பிபொய்ச் சமண்பொரு ளாகிஈண்டு நம்பிஇமை யோர்தொழு நம்பி எழுபிறப் பும்எங்கள் நம்பிகண் டாயே.
சொற்பிரிப்பு
“காண்டும்‌, நம்பி கழல் சேவடி” என்றும்‌ கலந்து உனைக்‌ காதலித்து ஆட்செய்கிற்பாரைஆண்டு நம்பி அவர்‌ முன்கதி சேர அருளும்‌ நம்பி; குரு மாப்‌ பிறை பாம்பைத்‌தீண்டும்‌ நம்பி; சென்னியில்‌ கன்னி தங்கத்‌ திருத்தும்‌ நம்பி; பொய்ச்‌ சமண்‌ பொருள்‌ ஆகிஈண்டும்‌ நம்பி; இமையோர்‌ தொழும்‌ நம்பி எழுபிறப்பும்‌ எங்கள்‌ நம்பி கண்டாயே,
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

கரக்கும் நம்பிகசி யாதவர் தம்மை கசிந்தவர்க் கிம்மையோ டம்மையில் இன்பம்பெருக்கும் நம்பி பெருகக் கருத்தா...*............ ............ ............ ....................... ............ ............ ...........(இச்செய்யுளின் பிற்பகுதி கிடைக்கப்பெறவில்லை)
சொற்பிரிப்பு
கரக்கும்‌ நம்பி, கசியாதவர் தம்மை: கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில்‌ இன்பம்‌பெருக்கும்‌ நம்பி; பெருகக்‌ கருத்தா…