திருமுறை 7 · 7.062 · 10

திருக்கோலக்கா

அருளியவர்
சுந்தரர்
பண்
தக்கேசி
தலம்
கோலக்கா
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

புற்றில் வாளர வார்த்த பிரானைப் பூத நாதனைப் பாதமே தொழுவார்பற்று வான்துணை எனக்கெளி வந்த பாவ நாசனை மேவரி யானைமுற்ற லார்திரி புரமொரு மூன்றும் பொன்ற வென்றிமால் வரைஅரி அம்பாக்கொற்ற வில்லங்கை ஏந்திய கோனைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
புற்றில்‌ வாள்‌ அரவு ஆர்த்த பிரானை; பூத நாதனை; பாதமே தொழுவார்‌பற்று வான் துணை; எனக்கு எளிவந்த பாவநாசனை; மேவ அரியானைமுற்றலார்‌ திரிபுரம்‌ ஒரு மூன்றும்‌ பொன்ற, வென்றி மால்வரை அரி அம்பா,கொற்ற வில்‌ அம்‌ கை ஏந்திய கோனை; கோலக்காவினில்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

அங்கம் ஆறும்மா மறைஒரு நான்கும் ஆய நம்பனை வேய்புரை தோளிதங்கு மாதிரு உருவுடை யானைத் தழல்ம திச்சடை மேற்புனைந் தானைவெங்கண் ஆனையின் ஈருரி யானை விண்ணு ளாரொடு மண்ணுளார் பரசுங்கொங்கு லாம்பொழிற் குரவெறி கமழுங் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
அங்கம்‌ ஆறும்‌ மாமறை ஒரு நான்கும்‌ ஆய நம்பனை, வேய்‌ புரை தோளிதங்கு மா திரு உரு உடையானை, தழல் மதிச்‌ சடைமேல்‌ புனைந்தானை,வெங்‌கண்‌ ஆனையின்‌ ஈர்‌உரியானை, விண் உளாரொடு மண்‌ உளார்‌ பரசும்‌,கொங்கு உலாம்‌ பொழில்‌ குர வெறி கமழும்‌ கோலக்காவினில்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பாட்ட கத்திசை யாகிநின் றானைப் பத்தர் சித்தம் பரிவினி யானைநாட்ட கத்தேவர் செய்கையு ளானை நட்ட மாடியை நம்பெரு மானைக்காட்ட கத்துறு புலியுரி யானை கண்ணோர் மூன்றுடை அண்ணலை அடியேன்கோட்ட கப்புன லார்செழுங் கழனிக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
பாட்டு அகத்‌து இசை ஆகி நின்றானை, பத்தர் சித்தம் பரிவு இனியானைநாட்டகத் தேவர்‌ செய்கை உளானை, நட்டம்‌ ஆடியை, நம் பெருமானை,காட்டகத்து உறு புலி உரியானை, கண் ஓர் மூன்று உடை அண்ணலை, அடியேன்‌கோட்டகப்‌ புனல்‌ ஆர்‌ செழுங்‌ கழனிக்‌ கோலக்காவினில்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஆத்தம் என்றெனை ஆளுகந் தானை அமரர் நாதனைக் குமரனைப் பயந்தவார்த்த யங்கிய முலைமட மானை வைத்து வான்மிசைக் கங்கையைக் கரந்ததீர்த்த னைச்சிவ னைச்செழுந் தேனைத் தில்லை அம்பலத் துள்நிறைந் தாடுங்கூத்த னைக்குரு மாமணி தன்னைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
“ஆத்தம்‌” என்று எனை ஆள்‌ உகந்தானை, அமரர் நாதனை, குமரனைப்‌ பயந்தவார்த்‌ தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசைக்‌ கங்கையைக்‌ கரந்ததீர்த்தனை, சிவனை, செழுந்தேனை, தில்லை அம்பலத்துள்‌ நிறைந்து ஆடும்‌கூத்தனை, குரு மாமணி தன்னை, கோலக்காவினில்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அன்று வந்தெனை அகலிடத் தவர்முன் ஆள தாகஎன் றாவணங் காட்டிநின்று வெண்ணெய்நல் லூர்மிசை ஒளித்த நித்தி லத்திரள் தொத்தினை முத்திக்கொன்றி னான்றனை உம்பர் பிரானை உயரும் வல்லர ணங்கெடச் சீறுங்குன்ற வில்லியை மெல்லிய லுடனே கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன்‌, “ஆள்‌ அது ஆக!" என்று ஆவணம்‌ காட்டி,நின்று வெண்ணெய்‌ நல்லூர் மிசை ஒளித்த நித்திலத்திரள்‌ தொத்தினை; முத்திக்குஒன்றினான்‌ தனை; உம்பர் பிரானை; உயரும்‌ வல்‌ அரணம்‌ கெடச்‌ சீறும்‌குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

காற்றுத் தீப்புன லாகிநின் றானைக் கடவு ளைக்கொடு மால்விடை யானைநீற்றுத் தீயுரு வாய்நிமிர்ந் தானை நிரம்பு பல்கலை யின்பொ ருளாலேபோற்றித் தன்கழல் தொழுமவன் உயிரைப் போக்கு வான்உயிர் நீக்கிடத் தாளாற்கூற்றைத் தீங்குசெய் குரைகழ லானைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
காற்றுத்‌ தீப்‌ புனல்‌ ஆகி நின்றானை, கடவுளை, கொடு மால் விடையானை,நீற்றுத்‌ தீ உருவாய்‌ நிமிர்ந்தானை, நிரம்பு பல்கலையின்‌ பொருளாலேபோற்றித்‌ தன்‌ கழல்‌ தொழுமவன்‌ உயிரைப்‌ போக்குவான்‌ உயிர்‌ நீக்கிடத்‌ தாளால்‌கூற்றைத்‌ தீங்கு செய்‌ குரைகழலானை, கோலக்காவினில்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அன்ற யன்சிரம் அரிந்ததிற் பலிகொண் டமர ருக்கருள் வெளிப்படுத் தானைத்துன்று பைங்கழ லிற்சிலம் பார்த்த சோதி யைச்சுடர் போலொளி யானைமின்ற யங்கிய இடைமட மங்கை மேவும் ஈசனை வாசமா முடிமேற்கொன்றை யஞ்சடைக் குழகனை அழகார் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
அன்று அயன் சிரம்‌ அரிந்து, அதில்‌ பலி கொண்டு, அமரருக்கு அருள்‌ வெளிப்படுத்தானை;துன்று பைங்கழலில்‌ சிலம்பு ஆர்த்த சோதியை: சுடர்‌ போல்‌ ஒளியானை;மின் தயங்கிய இடை மட மங்கை மேவும்‌ ஈசனை; வாசம்‌ மா முடிமேல்‌கொன்றை அம்‌ சடைக்‌ குழகனை; அழகு ஆர்‌ கோலக்காவினில்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நாளும் இன்னிசை யாற்றமிழ் பரப்பும் ஞான சம்பந்த னுக்குல கவர்முன்தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்குந் தன்மை யாளனை என்மனக் கருத்தைஆளும் பூதங்கள் பாடநின் றாடும் அங்க ணன்றனை எண்கணம் இறைஞ்சுங்கோளி லிப்பெருங் கோயிலுள் ளானைக் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
நாளும்‌ இன்‌ இசையால்‌ தமிழ்‌ பரப்பும்‌ ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்‌தாளம்‌ ஈந்து, அவன்‌ பாடலுக்கு இரங்கும்‌ தன்மையாளனை; என்‌ மனக்‌ கருத்தை;ஆளும்‌ பூதங்கள்‌ பாட, நின்று ஆடும்‌ அங்கணன் தனை; எண்கணம்‌ இறைஞ்சும்‌கோளிலிப்‌ பெருங்கோயில்‌ உள்ளானை; கோலக்காவினில்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

அரக்கன் ஆற்றலை அழித்தவன் பாட்டுக் கன்றி ரங்கிய வென்றியி னானைப்பரக்கும் பாரளித் துண்டுகந் தவர்கள் பரவி யும்பணி தற்கரி யானைச்சிரக்கண் வாய் செவி மூக்குயர் காயம் ஆகித் தீவினை தீர்த்தஎம் மானைக்குரக்கி னங்குதி கொண்டுகள் வயல்சூழ் கோலக் காவினிற் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
அரக்கன்‌ ஆற்றலை அழித்து அவன்‌ பாட்டுக்‌கு அன்று இரங்கிய வென்றியினானைப்பரக்கும்‌ பார்‌ அளித்து உண்டு உகந்தவர்கள்‌ பரவியும்‌ பணிதற்கு அரியானை,சிரக்‌ கண்‌ வாய்‌ செவி மூக்கு உயர்‌ காயம்‌ ஆகித்‌ தீவினை தீர்த்த எம்மானை,குரக்கு இனம்‌ குதிகொண்டு உகள்‌ வயல்‌ சூழ்‌ கோலக்காவினில்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கோட ரம்பயில் சடையுடைக் கரும்பைக் கோலக் காவுளெம் மானைமெய்ம் மானப்பாட ரங்குடி அடியவர் விரும்பப் பயிலும் நாவலா ரூரன்வன் றொண்டன்நாடி ரங்கிமுன் அறியுமந் நெறியால் நவின்ற பத்திவை விளம்பிய மாந்தர்காட ரங்கென நடம்நவின் றான்பாற் கதியும் எய்துவர் பதியவர்க் கதுவே.
சொற்பிரிப்பு
கோடரம்‌ பயில்‌ சடை உடைக்‌ கரும்பை, கோலக்காவுள்‌ எம்மானை, மெய்ம்‌ மானப்‌பாடர்‌ அம்‌ குடி அடியவர்‌ விரும்பப்‌ பயிலும்‌ நாவல்‌ ஆரூரன்‌ வன்தொண்டன்‌நாடு இரங்கி முன்‌ அறியும்‌ அந்‌நெறியால்‌ நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர்‌காடு அரங்கு என நடம்‌ நவின்றான்பால்‌ கதியும்‌ எய்துவர்‌; பதி அவர்க்கு அதுவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.