திருமுறை 7 · 7.061 · 11

திருக்கச்சியேகம்பம்

அருளியவர்
சுந்தரர்
பண்
தக்கேசி
தலம்
கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
நாடு
தொண்டைநாடு

1

ஆலந் தான்உகந் தமுதுசெய் தானை ஆதி யைஅம ரர்தொழு தேத்தும்சீலந் தான்பெரி தும்முடை யானைச் சிந்திப் பாரவர் சிந்தையு ளானைஏல வார்குழ லாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்றகால காலனைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
சொற்பிரிப்பு
ஆலம் தான்‌ உகந்து அமுது செய்தானை, ஆதியை, அமரர்‌ தொழுது ஏத்தும்‌சீலம் தான்‌ பெரிதும்‌ உடையானை, சிந்திப்பார்‌ அவர்‌ சிந்தை உளானை,ஏலவார் குழலாள்‌ உமை நங்கை என்றும்‌ ஏத்தி வழிபடப்பெற்றகாலகாலனை, கம்பன்‌ எம்மானை, காணக்‌ கண்‌ அடியேன்‌ பெற்றவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

உற்ற வர்க்குத வும்பெரு மானை ஊர்வ தொன்றுடை யான்உம்பர் கோனைப்பற்றி னார்க்கென்றும் பற்றவன் றன்னைப் பாவிப் பார்மனம் பாவிக்கொண் டானைஅற்ற மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்றகற்றை வார்சடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
சொற்பிரிப்பு
உற்றவர்க்கு உதவும்‌ பெருமானை, ஊர்வது ஒன்று உடையான்‌, உம்பர் கோனைப்பற்றினார்க்கு என்றும்‌ பற்றவன் தன்னை, பாவிப்பார் மனம் பாவிக் கொண்டானை,அற்றம்‌ இல்‌ புகழாள்‌ உமை நங்கை ஆதரித்து வழிபடப் பெற்றகற்றை வார்சடைக்‌ கம்பன்‌ எம்மானை, காணக்‌ கண்‌ அடியேன்‌ பெற்றவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

திரியும் முப்புரம் தீப்பிழம் பாகச் செங்கண் மால்விடை மேற்றிகழ் வானைக்கரியின் ஈருரி போர்த்துகந் தானைக் காம னைக்கன லாவிழித் தானைவரிகொள் வெள்வளை யாள்உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப் பெற்றபெரிய கம்பனை எங்கள்பி ரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
சொற்பிரிப்பு
திரியும்‌ முப்புரம்‌ தீப்பிழம்பு ஆகச்‌ செங்கண்‌ மால்விடை மேல்‌ திகழ்வானை,கரியின்‌ ஈர் உரி போர்த்து உகந்தானை, காமனைக்‌ கனலா விழித்தானை,வரி கொள்‌ வெள்வளையாள்‌ உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்றபெரிய கம்பனை, எங்கள்‌ பிரானை, காணக்‌ கண்‌ அடியேன்‌ பெற்றவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

குண்ட லந்திகழ் காதுடை யானைக் கூற்று தைத்த கொடுந்தொழி லானைவண்டலம்புமலர்க் கொன்றையி னானை வாள ராமதி சேர்சடை யானைக்கெண்டை யந்தடங் கண்ணுமை நங்கை கெழுமி யேத்தி வழிபடப் பெற்றகண்டம் நஞ்சுடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
சொற்பிரிப்பு
குண்டலம்‌ திகழ்‌ காது உடையானை, கூற்று உதைத்த கொடுந் தொழிலானை,வண்டு அலம்பும்‌ மலர்க் கொன்றையினானை வாள்‌அரா மதி சேர்‌ சடையானை,கெண்டை அம் தடங்கண்‌ உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்றகண்டம்‌ நஞ்சு உடைக்‌ கம்பன்‌ எம்மானை, காணக்‌ கண்‌ அடியேன்‌ பெற்றவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வெல்லும் வெண்மழு ஒன்றுடை யானை வேலை நஞ்சுண்ட வித்தகன் றன்னைஅல்லல் தீர்த்தருள் செய்யவல் லானை அரும றையவை அங்கம்வல் லானைஎல்லை யில்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்றநல்ல கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
சொற்பிரிப்பு
வெல்லும்‌ வெண்மழு ஒன்று உடையானை, வேலை நஞ்சு உண்ட வித்தகன் தன்னை,அல்லல்‌ தீர்த்து அருள் செய்ய வல்லானை, அருமறை அவை அங்கம்‌ வல்லானை,எல்லை இல்‌ புகழாள்‌ உமை நங்கை என்றும்‌ ஏத்தி வழிபடப்பெற்றநல்ல கம்பனை, எங்கள்‌ பிரானை, காணக்‌ கண்‌ அடியேன்‌ பெற்றவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

திங்கள் தங்கிய சடையுடை யானைத் தேவ தேவனைச் செழுங்கடல் வளரும்சங்க வெண்குழைக் காதுடை யானைச் சாம வேதம் பெரிதுகப் பானைமங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப் பெற்றகங்கை யாளனைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
சொற்பிரிப்பு
திங்கள்‌ தங்கிய சடை உடையானை தேவதேவனை, செழுங்‌கடல்‌ வளரும்‌சங்க வெண்குழைக்‌ காது உடையானை, சாமவேதம்‌ பெரிது உகப்பானை,மங்கை நங்கை மலைமகள்‌ கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்றகங்கையாளனை, கம்பன்‌ எம்மானை, காணக்‌ கண்‌ அடியேன்‌ பெற்றவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

விண்ண வர்தொழு தேத்தநின் றானை வேதந் தான்விரித் தோதவல் லானைநண்ணி னார்க்கென்றும் நல்லவன் றன்னை நாளும் நாம்உகக் கின்றபி ரானைஎண்ணில் தொல்புக ழாள்உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப் பெற்றகண்ணும் மூன்றுடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
சொற்பிரிப்பு
விண்ணவர்‌ தொழுது ஏத்த நின்றானை, வேதம் தான்‌ விரித்து ஓத வல்லானை,நண்ணினார்க்கு என்றும்‌ நல்லவன் தன்னை, நாளும்‌ நாம்‌ உகக்கின்ற பிரானை,எண்‌ இல்‌ தொல்புகழாள்‌ உமை நங்கை என்றும்‌ ஏத்தி வழிபடப் பெற்றகண்ணு மூன்று உடைக்‌ கம்பன்‌ எம்மானை,காணக்‌ கண்‌ அடியேன்‌ பெற்றவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

சிந்தித் தென்றும் நினைந்தெழு வார்கள் சிந்தை யில்திக ழுஞ்சிவன் றன்னைப்பந்தித் தவினைப் பற்றறுப் பானைப் பாலோ டானஞ்சும் ஆட்டுகந் தானைஅந்த மில்புக ழாள்உமை நங்கை ஆத ரித்து வழிபடப் பெற்றகந்த வார்சடைக் கம்பனெம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
சொற்பிரிப்பு
சிந்தித்து என்றும்‌ நினைந்து எழுவார்கள்‌ சிந்தையில்‌ திகழும்‌ சிவன் தன்னை,பந்தித்த வினைப் பற்று அறுப்பானை, பாலொடு ஆன்‌ அஞ்சும்‌ ஆட்டு உகந்தானை,அந்தம்‌ இல்‌ புகழாள்‌ உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்றகந்த வார்சடைக்‌ கம்பன்‌ எம்மானை, காணக்‌ கண்‌ அடியேன்‌ பெற்றவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

வரங்கள் பெற்றுழல் வாளரக் கர்தம் வாலி யபுரம் மூன்றெரித் தானைநிரம்பி யதக்கன் றன்பெரு வேள்வி நிரந்த ரஞ்செய்த நிட்கண் டகனைப்பரந்த தொல்புக ழாள்உமை நங்கை பரவி யேத்தி வழிபடப் பெற்றகரங்கள் எட்டுடைக் கம்பன்எம் மானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
சொற்பிரிப்பு
வரங்கள்‌ பெற்று உழல்‌ வாள்‌ அரக்கர் தம்‌ வாலிய புரம் மூன்று எரித்தானை,நிரம்பிய தக்கன் தன்‌ பெருவேள்வி நிரந்தரம்‌ செய்த நிட்கண்டகனை,பரந்த தொல் புகழாள்‌ உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்றகரங்கள்‌ எட்டு உடைக்‌ கம்பன்‌ எம்மானை, காணக்‌ கண்‌ அடியேன்‌ பெற்றவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

எள்க லின்றி இமையவர் கோனை ஈச னைவழி பாடுசெய் வாள்போல்உள்ளத் துள்கி உகந்துமை நங்கை வழிபடச் சென்று நின்றவா கண்டுவெள்ளங் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடித் தழுவவெளிப் பட்டகள்ளக் கம்பனை எங்கள் பிரானைக் காணக் கண்அடி யேன்பெற்ற வாறே.
சொற்பிரிப்பு
எள்கல்‌ இன்றி இமையவர் கோனை, ஈசனை, வழிபாடு செய்வாள்‌ போல்‌உள்ளத்து உள்கி, உகந்து, உமை நங்கை வழிபடச்‌ சென்று நின்றவா கண்டு,வெள்ளம்‌ காட்டி வெருட்டிட, அஞ்சி வெருவி ஓடித்‌ தழுவ வெளிப்பட்டகள்ளக்‌ கம்பனை, எங்கள்‌ பிரானை, . காணக்‌ கண்‌ அடியேன்‌ பெற்றவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

பெற்றம் ஏறுகந் தேறவல் லானைப் பெரிய எம்பெரு மான்என்றெப் போதும்கற்ற வர்பர வப்படு வானைக் காணக் கண்அடி யேன்பெற்ற தென்றுகொற்ற வன்கம்பன் கூத்தன்எம் மானைக் குளிர்பொ ழில்திரு நாவலா ரூரன்நற்றமிழ் இவைஈ ரைந்தும் வல்லார் நன்னெ றிஉல கெய்துவர் தாமே.
சொற்பிரிப்பு
பெற்றம்‌ ஏறு உகந்து ஏற வல்லானை, “பெரிய எம்பெருமான்‌” என்று எப்போதும்‌கற்றவர்‌ பரவப்படுவானை “காணக்‌ கண்‌ அடியேன்‌ பெற்றது” என்றுகொற்றவன்‌, கம்பன்‌, கூத்தன்‌ எம்மானை, குளிர்பொழில்‌ திருநாவல்‌ ஆரூரன்‌நல்‌-தமிழ்‌ இவை ஈர்‌-ஐந்தும்‌ வல்லார்‌, நன்நெறி உலகு எய்துவர் தாமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.