1
பொன்னும் மெய்ப்பொரு ளும்தரு வானைப் போக முந்திரு வும்புணர்ப் பானைப்பின்னை என்பிழை யைப்பொறுப் பானைப் பிழையெ லாந்தவி ரப்பணிப் பானைஇன்ன தன்மையன் என்றறி வொண்ணா எம்மா னைஎளி வந்தபி ரானைஅன்னம் வைகும் வயற்பழ னத்தணி ஆரூரானை மறக்கலு மாமே.
சொற்பிரிப்பு
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை, போகமும் திருவும் புணர்ப்பானை,பின்னை என் பிழையைப் பொறுப்பானை பிழை எலாம் தவிரப் பணிப்பானை,இன்ன தன்மையன் என்று அறிவு, ஒண்ணா எம்மானை, எளிவந்த பிரானை,அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை, மறக்கலும் ஆமே?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.