திருமுறை 7 · 7.058 · 10

திருக்கழுமலம்

அருளியவர்
சுந்தரர்
பண்
தக்கேசி
தலம்
சீர்காழி - 12-கழுமலம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சாதலும் பிறத்தலுந் தவிர்த்தெனை வகுத்துத் தன்னருள் தந்தஎந் தலைவனை மலையின்மாதினை மதித்தங்கோர் பால்கொண்ட மணியை வருபுனல் சடையிடை வைத்தஎம் மானைஏதிலென் மனத்துக்கோர் இரும்புண்ட நீரை எண்வகை ஒருவனை எங்கள்பி ரானைக்காதில்வெண் குழையனைக் கடல்கொள மிதந்த கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
சாதலும்‌ பிறத்தலும்‌ தவிர்த்து, எனை வகுத்து, தன்‌ அருள்‌ தந்த எம்‌ தலைவனை: மலையின்‌மாதினை மதித்து, அங்கு ஓர் பால்‌ கொண்ட மணியை; வருபுனல்‌ சடைஇடை வைத்த எம்மானை;ஏதிலென்‌ மனத்துக்கு ஓர்‌ இரும்பு உண்ட நீரை; எண்வகை ஒருவனை; எங்கள்‌ பிரானை;காதில்‌ வெண்குழையனை: கடல்‌ கொள மிதந்த கழுமல வளநகர்க்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

மற்றொரு துணையினி மறுமைக்குங் காணேன் வருந்தலுற் றேன்மற வாவரம் பெற்றேன்சுற்றிய சுற்றமுந் துணையென்று கருதேன் துணையென்று நான்தொழப் பட்டஒண் சுடரைமுத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளுங் காட்டிக்கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும்‌ காணேன்‌; வருந்தல்‌ உற்றேன்‌; மறவா வரம்‌ பெற்றேன்‌;சுற்றிய சுற்றமும்‌ துணை என்று கருதேன்‌; துணை என்று நான்‌ தொழப்பட்ட ஒண்சுடரை,முத்தியும்‌ ஞானமும்‌ வானவர்‌ அறியா முறைமுறை பலபல நெறிகளும்‌ காட்டிக்‌கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வளநகர்க்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

திருத்தினை நகர்உறை சேந்தன் அப்பன்என் செய்வினை அறுத்திடுஞ் செம்பொனை அம்பொன்ஒருத்தனை அல்லதிங் காரையும் உணரேன் உணர்வுபெற் றேன்உய்யுங் காரணந் தன்னால்விருத்தனைப் பாலனைக் கனவிடை விரவி விழித்தெங்குங் காணமாட் டாதுவிட் டிருந்தேன்கருத்தனை நிருத்தஞ்செய் காலனை வேலைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
திருத்‌தினை நகர்‌ உறை சேந்தன்‌ அப்பன்‌, என்‌ செய்வினை அறுத்திடும்‌ செம்பொனை அம்பொன் ‌ஒருத்தனை, அல்லது இங்கு ஆரையும்‌ உணரேன்‌; உணர்வு பெற்றேன்‌, உய்யும்‌ காரணம் தன்னால்‌;விருத்தனைப் பாலனைக், கனவிடை விரவி விழித்தெங்கும் காணமாட்டாது விட்டிருந்தேன்‌;கருத்தனை, நிருத்தம்‌ செய்‌ காலனை வேலைக் கழுமல வளநகர்க்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மழைக்கரும் பும்மலர்க் கொன்றையி னானை வளைக்கலுற் றேன்மற வாமனம் பெற்றேன்பிழைத்தொரு கால்இனிப் போய்ப்பிற வாமைப் பெருமைபெற் றேன்பெற்ற தார்பெறு கிற்பார்குழைக்கருங் கண்டனைக் கண்டுகொள் வானே பாடுகின் றேன்சென்று கூடவும் வல்லேன்கழைக்கரும் புங்கத லிப்பல சோலைக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
மழைக்கு அரும்பும்‌ மலர்க் கொன்றையினானை வளைக்கல்‌ உற்றேன்‌; மறவா மனம்‌ பெற்றேன்‌;பிழைத்து ஒரு கால்‌ இனிப்‌ போய்ப்‌ பிறவாமைப்‌ பெருமை பெற்றேன்‌; பெற்றது ஆர்‌ பெறுகிற்பார்‌?குழைக்‌ கருங்கண்டனைக்‌ கண்டு கொள்வானே பாடுகின்றேன்‌; சென்று கூடவும்‌ வல்லேன்‌;கழைக் கரும்பும்‌ கதலிப்‌ பலசோலை கழுமல வளநகர்க்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

குண்டலங் குழைதிகழ் காதனே என்றுங் கொடுமழு வாட்படைக் குழகனே என்றும்வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும் வாய்வெரு வித்தொழு தேன்விதி யாலேபண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப் பசுபதி பதிவின விப்பல நாளுங்கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
“குண்டலம்‌ குழை திகழ்‌ காதனே!” என்றும்‌, “கொடு மழு வாள் படைக்‌ குழகனே!” என்றும்‌,“வண்டு அலம்பும்‌ மலர்க் கொன்றையன்‌!' என்றும்‌, வாய்‌ வெருவித்‌ தொழுதேன்‌, விதியாலே;பண்டை நம்‌ பல மனமும்‌ களைந்து ஒன்றாய்ப்‌, பசுபதி பதி வினவிப் பல நாளும்கண்டல்‌ அம்‌ கழிக்‌ கரை ஓதம்‌ வந்து உலவும்‌ கழுமல வளநகர்க்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வரும்பெரும் வல்வினை என்றிருந் தெண்ணி வருந்தலுற் றேன்மற வாமனம் பெற்றேன்விரும்பிஎன் மனத்திடை மெய்குளிர்ப் பெய்தி வேண்டிநின் றேதொழு தேன்விதி யாலேஅரும்பினை அலரினை அமுதினைத் தேனை ஐயனை அறவனென் பிறவிவேர் அறுக்குங்கரும்பினைப் பெருஞ்செந்நெல் நெருங்கிய கழனிக் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
“வரும்‌, பெரும்‌ வல்வினை” என்று இருந்து எண்ணி, வருந்தல்‌ உற்றேன்‌; மறவா மனம்‌ பெற்றேன்‌;விரும்பி, என்‌ மனத்துஇடை மெய்‌ குளிர்ப்பு எய்தி, வேண்டி நின்றே தொழுதேன்‌, விதியாலே;அரும்பினை, அலரினை, அமுதினை, தேனை, ஐயனை, அறவன்‌, என்‌ பிறவி வேர்‌ அறுக்கும்‌கரும்பினை, பெருஞ்‌ செந்நெல்‌ நெருங்கிய கழனி கழுமல வளநகர்க்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற் றிருந்தேன்முயல்பவர் பின்சென்று முயல்வலை யானை படுமென மொழிந்தவர் வழிமுழு தெண்ணிப்புயலினைத் திருவினைப் பொன்னின தொளியை மின்னின துருவை என்னிடைப் பொருளைக்கயலினஞ் சேலொடு வயல்விளை யாடுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
அயலவர்‌ பரவவும்‌, அடியவர்‌ தொழவும்‌, அன்பர்கள்‌ சாயலுள்‌ அடையல் உற்று இருந்தேன்‌முயல்பவர்‌ பின்‌ சென்று, “முயல்‌ வலை யானை படும்‌'” என மொழிந்தவர்‌ வழி முழுது எண்ணி;புயலினை, திருவினை, பொன்னினது ஒளியை, மின்னினது உருவை, என்‌னிடைப்‌ பொருளை,கயல்‌ இனம்‌ சேலொடு வயல்‌ விளையாடும்‌ கழுமல வளநகர்க்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

நினைதரு பாவங்கள் நாசங்க ளாக நினைந்துமுன் தொழுதெழப் பட்டஒண் சுடரைமனைதரு மலைமகள் கணவனை வானோர் மாமணி மாணிக்கத் தைம்மறைப் பொருளைப்புனைதரு புகழினை எங்கள தொளியை இருவரும் ஒருவனென் றுணர்வரி யவனைக்கனைதரு கருங்கடல் ஓதம்வந் துலவுங் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
நினைதரு பாவங்கள்‌ நாசங்கள்‌ ஆக, நினைந்து முன்‌ தொழுது எழப்பட்ட ஒண் சுடரை;மனை தரு மலைமகள்‌ கணவனை; வானோர்‌ மாமணி மாணிக்கத்தை ; மறைப்பொருளைப்;புனை தரு புகழினை; எங்களது ஒளியை; இருவரும்‌ “ஒருவன்‌” என்று உணர்வு அரியவனை;கனைதரு கருங்கடல்‌ ஓதம்‌ வந்து உலவும்‌ கழுமல வளநகர்க்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மறையிடைத் துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாயத்துறையுறக் குளித்துள தாகவைத் துய்த்த உண்மை யெனுந்தக வின்மையை ஓரேன்பிறையுடைச் சடையனை எங்கள்பி ரானைப் பேரரு ளாளனைக் காரிருள் போன்றகறையணி மிடறுடை அடிகளை அடியேன் கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே.
சொற்பிரிப்பு
மறை இடைத்‌ துணிந்தவர்‌ மனையிடை இருப்ப, வஞ்சனை செய்தவர்‌ பொய்கையும்‌ மாய,துறை உறக்‌ குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும்‌ தகவின்மையை ஓரேன்‌;பிறை உடைச்‌ சடையனை, எங்கள்‌ பிரானை, பேரருளாளனை, கார்‌ இருள்‌ போன்றகறை அணி மிடறு உடை அடிகளை, அடியேன்‌ கழுமல வளநகர்க்‌ கண்டு கொண்டேனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

செழுமலர்க் கொன்றையுங் கூவிள மலரும் விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்டழுமலர்க் கண்ணிணை அடியவர்க் கல்லால் அறிவரி தவன்றிரு வடியிணை இரண்டுங்கழுமல வளநகர்க் கண்டுகொண் டூரன் சடையன்றன் காதலன் பாடிய பத்துந்தொழுமலர் எடுத்தகை அடியவர் தம்மைத் துன்பமும் இடும்பையுஞ் சூழகி லாவே.
சொற்பிரிப்பு
செழுமலர்க் கொன்றையும்‌ கூவிள மலரும்‌ விரவிய சடைமுடி அடிகளை நினைந்திட்டுஅழும்‌ மலர்க்கண்‌ இணை அடியவர்க்கு அல்லால்‌, அறிவு அரிது, அவன்‌ திருவடியிணை இரண்டும்‌;கழுமல வளநகர்க்‌ கண்டு கொண்டு, ஊரன்‌ சடையன் தன்‌ காதலன்‌ பாடிய பத்தும்‌தொழு மலர்‌ எடுத்த கை அடியவர் தம்மைத்‌ துன்பமும்‌ இடும்பையும்‌ சூழகிலாவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.