1
தலைக்க லன்றலை மேல்தரித் தானைத் தன்னைஎன் னைநினைக் கத்தரு வானைக்கொலைக்கை யானைஉரி போர்த்துகந் தானைக் கூற்றுதைத் தகுரை சேர்கழ லானைஅலைத்த செங்கண்விடை ஏறவல் லானை ஆணை யால்அடி யேன்அடி நாயேன்மலைத்தசெந் நெல்வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே.
சொற்பிரிப்பு
தலைக்கலன் தலைமேல் தரித்தானை; தன்னை என்னை நினைக்கத் தருவானை,கொலைக் கை யானை உரி போர்த்து உகந்தானை, கூற்று உதைத்த குரை சேர் கழலானை,அலைத்த செங்கண் விடை ஏற வல்லானை, ஆணையால் அடியேன் அடி நாயேன்மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை, மறந்து என் நினைக்கேனே?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.