திருமுறை 7 · 7.056 · 11

திருநீடூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
தக்கேசி
தலம்
நீடூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

ஊர்வ தோர்விடை ஒன்றுடை யானை ஒண்ணு தல்தனிக் கண்ணுத லானைக்கார தார்கறை மாமிடற் றானைக் கருத லார்புரம் மூன்றெரித் தானைநீரில் வாளை வரால்குதி கொள்ளும் நிறைபு னற்கழ னிச்செல்வ நீடூர்ப்பாரு ளார்பர வித்தொழ நின்ற பரம னைப்பணி யாவிட லாமே.
சொற்பிரிப்பு
ஊர்வது ஓர்‌ விடை ஒன்றுடையானை, ஒண்‌ நுதல்‌ தனிக்‌ கண் நுதலானை,கார்‌ அது ஆர்‌ கறை மா மிடற்றானை, கருதலார்‌ புரம் மூன்று எரித்தானை,நீரில்‌ வாளை, வரால்‌, குதிகொள்ளும்‌ திறை புனல்‌ கழனிச்‌ செல்வம்‌ நீடூர்ப்‌பார்‌ உளார்‌ பரவித்‌, தொழ நின்ற பரமனை, பணியா விடல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

துன்னு வார்சடைத் தூமதி யானைத் துயக்கு றாவகை தோன்றுவிப் பானைப்பன்னு நான்மறை பாடவல் லானைப் பார்த்த னுக்கருள் செய்தபி ரானைஎன்னை இன்னருள் எய்துவிப் பானை ஏதி லார்தமக் கேதிலன் றன்னைப்புன்னை மாதவி போதலர் நீடூர்ப் புனித னைப்பணி யாவிட லாமே.
சொற்பிரிப்பு
துன்னு வார்சடைத்‌ தூ மதியானை, துயக்கு உறு வகை தோன்றுவிப்பானை,பன்னு நால்மறை பாட வல்லானை, பார்த்தனுக்கு அருள்‌ செய்த பிரானை,என்னை இன்‌அருள்‌ எய்துவிப்பானை, ஏதிலார் தமக்கு ஏதிலன் தன்னை,புன்னை, மாதவிப் போது, அலர்‌ நீடூர்ப்‌ புனிதனை, பணியா விடல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

கொல்லும் மூவிலை வேலுடை யானைக் கொடிய காலனை யுங்குமைத் தானைநல்ல வாநெறி காட்டுவிப் பானை நாளும் நாம்உகக் கின்ற பிரானைஅல்ல லில்லரு ளேபுரி வானை ஆடு நீர்வயல் சூழ்புனல் நீடூர்க்கொல்லை வெள்ளெரு தேறவல் லானைக் கூறி நாம்பணி யாவிட லாமே.
சொற்பிரிப்பு
கொல்லும்‌ மூ இலை வேல்‌ உடையானை, கொடிய காலனையும்‌ குமைத்தானை,நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும்‌ நாம்‌ உகக்கின்ற பிரானை,அல்லல்‌ இல்‌ அருளே புரிவானை, ஆரும்‌ நீர்‌ வயல்‌ சூழ்‌ புனல்‌ நீடூர்க்‌கொல்லை வெள் எருது ஏற வல்லானை, கூறி நாம்‌ பணியா விடல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

தோடு காதிடு தூநெறி யானைத் தோற்ற முந்துறப் பாயவன் றன்னைப்பாடு மாமறை பாடவல் லானைப் பைம்பொ ழிற்குயில் கூவிட மாடேஆடு மாமயில் அன்னமோ டாட அலைபு னற்கழ னித்திரு நீடூர்வேட னாயபி ரானவன் றன்னை விரும்பி நாம்பணி யாவிட லாமே.
சொற்பிரிப்பு
தோடு காது இடு தூ நெறியானை, தோற்றமும்‌ துறப்பு ஆயவன் தன்னை,பாடு மாமறை பாட வல்லானை, பைம்பொழில்‌ குயில்‌ கூவிட, மாடேஆடு மா மயில்‌ அன்னமோடு ஆட, அலை புனல்‌ கழனி திரு நீடூர்‌வேடன்‌ ஆய பிரான்‌அவன் தன்னை, விரும்பி நாம்‌ பணியா விடலாமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

குற்றம் ஒன்றடி யார்இல ரானாற் கூடு மாறத னைக்கொடுப் பானைக்கற்ற கல்வியி லும்மினி யானைக் காணப் பேணும வர்க்கெளி யானைமுற்ற அஞ்சுந் துறந்திருப் பானை மூவ ரின்முத லாயவன் றன்னைச்சுற்று நீள்வயல் சூழ்திரு நீடூர்த் தோன்ற லைப்பணி யாவிட லாமே.
சொற்பிரிப்பு
குற்றம்‌ ஒன்று அடியார்‌ இலரானால்‌ கூடும்‌ ஆறு அதனைக்‌ கொடுப்பானை,கற்ற கல்வியிலும்‌ இனியானை, காணப்‌ பேணுமவர்க்கு எளியானை,முற்ற அஞ்சும்‌ துறந்திருப்பானை, மூவரின்‌ முதல்‌ ஆயவன்‌ தன்னை,சுற்றும்‌ நீள்‌ வயல்‌ சூழ்‌ திரு நீடூர்த்‌ தோன்றலை, பணியா விடல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

காடில் ஆடிய கண்ணுத லானைக் கால னைக்கடிந் திட்டபி ரானைப்பாடி ஆடும்பரி சேபுரிந் தானைப் பற்றி னோடுசுற் றம்மொழிப் பானைத்தேடி மாலயன் காண்பரி யானைச் சித்த முந்தெளி வார்க்கெளி யானைக்கோடி தேவர்கள் கும்பிடு நீடூர்க் கூத்த னைப்பணி யாவிட லாமே.
சொற்பிரிப்பு
காடில்‌ ஆடிய கண்நுதலானை, காலனைக்‌ கடிந்திட்ட பிரானை,பாடி ஆடும்‌ பரிசே புரிந்தானை, பற்றினோடு சுற்றம்‌ ஒழிப்பானை,தேடி மால்‌ அயன்‌ காண்பு அரியானை, சித்தமும்‌ தெளிவார்க்கு எளியானை,கோடி தேவர்கள்‌ கும்பிடும்‌ நீடூர்க்‌ கூத்தனை, பணியா விடல்‌ ஆமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

விட்டி லங்கெரி யார்கையி னானை வீடி லாதவி யன்புக ழானைக்கட்டு வாங்கந் தரித்தபி ரானைக் காதி லார்கன கக்குழை யானைவிட்டி லங்குபுரி நூலுடை யானை வீந்த வர்தலை ஓடுகை யானைக்கட்டி யின்கரும் போங்கிய நீடூர்க் கண்டு நாம்பணி யாவிட லாமே.
சொற்பிரிப்பு
விட்டு இலங்கு எரி ஆர்‌ கையினானை, வீடு இலாத வியன் புகழானை,கட்டுவாங்கம்‌ தரித்த பிரானை, காதில்‌ ஆர்‌ கனகக் குழையானை,விட்டு இலங்கு புரிநூல்‌ உடையானை, வீந்தவர்‌ தலைஓடு கையானை,கட்டியின்‌ கரும்பு ஓங்கிய நீடூர்க்‌ கண்டு நாம்‌ பணியா விடலாமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மாய மாய மனங்கெடுப் பானை மனத்து ளேமதி யாய்இருப் பானைக்காய மாயமும் ஆக்குவிப் பானைக் காற்று மாய்க்கன லாய்க்கழிப் பானைஓயு மாறுரு நோய்புணர்ப் பானை ஒல்லை வல்வினை கள்கெடுப் பானைவேய்கொள் தோள்உமை பாகனை நீடூர் வேந்த னைப்பணி யாவிட லாமே.
சொற்பிரிப்பு
மாயம்‌ ஆய மனம்‌ கெடுப்பானை, மனத்துளே மதியாய்‌ இருப்பானை,காய மாயமும்‌ ஆக்குவிப்பானை, காற்றுமாய்க்‌ கனலாய்க்‌ கழிப்பானை,ஓயுமாறு உறு நோய்‌ புணர்ப்பானை, ஒல்லை வல்வினைகள்‌ கெடுப்பானை,வேய் கொள் தோள்‌ உமை பாகனை, நீடூர்‌ வேந்தனை, பணியா விடலாமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

கண்ட முங்கறுத் திட்டபி ரானைக் காணப் பேணும வர்க்கெளி யானைத்தொண்ட ரைப்பெரி தும்முகப் பானைத் துன்ப முந்துறந் தின்பினி யானைப்பண்டை வல்வினை கள்கெடுப் பானைப் பாக மாமதி யாயவன் தன்னைக்கெண்டை வாளை கிளர்புனல் நீடூர்க் கேண்மை யாற்பணி யாவிட லாமே.
சொற்பிரிப்பு
கண்டமும்‌ கறுத்திட்ட பிரானை, காணப்‌ பேணுமவர்க்கு எளியானை,தொண்டரைப்‌ பெரிதும்‌ உகப்பானை, துன்பமும்‌ துறந்து இன்பு இனியானை,பண்டை வல் வினைகள்‌ கெடுப்பானை, பாகம் மாமதி ஆயவன் தன்னை,கெண்டை வாளை கிளர்‌ புனல்‌ நீடூர்க்‌ கேண்மையால்‌ பணியா விடலாமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அல்லல் உள்ளன தீர்த்திடு வானை அடைந்த வர்க்கமு தாயிடு வானைக்கொல்லை வல்லர வம்மசைத் தானைக் கோல மார்கரி யின்னுரி யானைநல்ல வர்க்கணி யானவன் தன்னை நானுங் காதல்செய் கின்றபி ரானைஎல்லி மல்லிகை யேகமழ் நீடூர் ஏத்தி நாம்பணி யாவிட லாமே.
சொற்பிரிப்பு
அல்லல்‌ உள்ளன தீர்த்திடுவானை, அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானை,கொல்லை வல்‌ அரவம்‌ அசைத்தானை, கோலம்‌ ஆர்‌ கரியின்‌ உரியானை,நல்லவர்க்கு அணி ஆனவன் தன்னை, நானும்‌ காதல் செய்கின்ற பிரானை,எல்லி மல்லிகையே கமழ்‌ நீடூர்‌ ஏத்தி நாம்‌ பணியா விடலாமே?
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

பேரோர் ஆயிர மும்முடை யானைப் பேசி னாற்பெரி தும்மினி யானைநீரூர் வார்சடை நின்மலன் தன்னை நீடூர் நின்றுகந் திட்டபி ரானைஆரூ ரன்னடி காண்பதற் கன்பாய் ஆத ரித்தழைத் திட்டஇம் மாலைபாரூ ரும்பர வித்தொழ வல்லார் பத்த ராய்முத்தி தாம்பெறு வாரே.
சொற்பிரிப்பு
பேர்‌ ஓர்‌ ஆயிரமும்‌ உடையானை, பேசினால்‌ பெரிதும்‌ இனியானை,நீர்‌ ஊர்‌ வார்சடை நின்மலன்‌ தன்னை , நீடூர்‌ நின்று, உகந்திட்ட பிரானை,ஆரூரன்‌ அடி காண்பதற்கு அன்பாய்‌ ஆதரித்து அழைத்திட்ட இம்‌ மாலைபார்‌ ஊரும்‌ பரவித்‌ தொழ வல்லார்‌, பத்தராய்‌ முத்தி தாம்‌ பெறுவாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.