1
அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத அவனைக் காப்பது காரண மாகவந்த காலன்றன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்எந்தை நீயெனை நமன்றமர் நலியின் இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.
சொற்பிரிப்பு
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக் காப்பது காரணமாக,வந்த காலன் தன் ஆர் உயிர் அதனை வவ்வினாய்க்கு, உன் தன் வன்மை கண்டு அடியேன்,எந்தை! நீ எனை நமன் தமர் நலியின், “இவன் மற்று என் அடியான்” என விலக்கும்சிந்தையால் வந்து, உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திருப் புன்கூர் உளானே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.