1
அழுக்கு மெய்கொடுன் றிருவடி அடைந்தேன் அதுவும் நான்படப் பாலதொன் றானாற்பிழுக்கை வாரியும் பால்கொள்வர் அடிகேள் பிழைப்பன் ஆகிலுந் திருவடிப் பிழையேன்வழுக்கி வீழினுந் திருப்பெய ரல்லால் மற்று நான்அறி யேன்மறு மாற்றம்ஒழுக்க என்கணுக் கொருமருந் துரையாய் ஒற்றி யூரெனும் ஊருறை வானே.
சொற்பிரிப்பு
அழுக்கு மெய்கொடு உன் திருவடி அடைந்தேன் ; அதுவும் நான் படப் பாலது ஒன்று ஆனால்,பிழுக்கை வாரியும் பால் கொள்வர்; அடிகேள்! பிழைப்பன் ஆகிலும் திருவடிப் பிழையேன்;வழுக்கி வீழினும் திருப்பெயர் அல்லால், மற்று நான் அறியேன், மறு மாற்றம்;ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.