1
மருவார் கொன்றை மதிசூடி மாணிக் கத்தின் மலைபோலவருவார் விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப் படைசூழத்திருமால் பிரமன் இந்திரற்குந் தேவர் நாகர் தானவர்க்கும்பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமா னடிகளே.
சொற்பிரிப்பு
மரு ஆர் கொன்றை மதி சூடி, மாணிக்கத்தின் மலை போலவருவார், விடைமேல் மாதோடு மகிழ்ந்து பூதப்படை சூழ;திருமால், பிரமன், இந்திரற்கும், தேவர், நாகர், தானவர்க்கும்,பெருமான் கடவூர் மயானத்துப் பெரிய பெருமான் அடிகளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.