1
பத்திமையும் அடிமையையுங் கைவிடுவான் பாவியேன்பொத்தினநோ யதுவிதனைப் பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்முத்தினைமா மணிதன்னை வயிரத்தை மூர்க்கனேன்எத்தனைநாட் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே.
சொற்பிரிப்பு
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான், பாவியேன்பொத்தின நோய் அது இதனைப் பொருள் அறிந்தேன்; போய்த் தொழுவேன்;முத்தினை, மாமணி தன்னை, வயிரத்தை, மூர்க்கனேன்எத்தனை நாள் பிரிந்திருக்கேன், என் ஆரூர் இறைவனையே?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.