1
சித்தம் நீநினை என்னொடு சூளறும் வைகலும்மத்த யானையின் ஈருரி போர்த்த மணாளனூர்பத்தர் தாம்பலர் பாடிநின் றாடும் பழம்பதிபொத்தில் ஆந்தைகள் பாட்ட றாப்புன வாயிலே.
சொற்பிரிப்பு
சித்தம்! நீ நினை! என்னொடு சூள் அறு, வைகலும்!மத்தயானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர்பத்தர் தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி,பொத்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.