திருமுறை 7 · 7.049 · 10

திருமுருகன்பூண்டி

அருளியவர்
சுந்தரர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
முருகன்பூண்டி
நாடு
கொங்குநாடு

1

கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர் விரவ லாமை சொல்லித்திடுகு மொட்டெனக் குத்திக் கூறைகொண் டாற லைக்கு மிடம்முடுகு நாறிய வடுகர் வாழ்முருகன் பூண்டி மாநகர் வாய்இடுகு நுண்ணிடை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
சொற்பிரிப்பு
கொடுகு வெஞ்சிலை வடுக வேடுவர்‌, விரவலாமை சொல்லி,'திடுகு மொட்டு' எனக்‌ குத்தி, கூறை கொண்டு, ஆறலைக்கும்‌ இடம்‌முடுகு நாறிய வடுகர்‌ வாழ்‌ முருகன் பூண்டி மா நகர்வாய்‌,இடுகு நுண்இடை மங்கை தன்னொடும் ‌ எத்துக்கு இங்கு இருந்தீர்‌? எம்பிரானீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

வில்லைக் காட்டி வெருட்டி வேடுவர் விரவ லாமை சொல்லிக்கல்லி னாலெறிந் திட்டும் மோதியுங் கூறை கொள்ளு மிடம்முல்லைத் தாது மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்எல்லை காப்பதொன் றில்லை யாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
சொற்பிரிப்பு
வில்லைக்‌ காட்டி வெருட்டி, வேடுவர்‌, விரவலாமை சொல்லிக்‌கல்லினால்‌ எறிந்திட்டும்‌, மோதியும்‌, கூறை கொள்ளும்‌ இடம்‌முல்லைத் தாது மணம்‌ கமழ்‌ முருகன் பூண்டி மா நகர்வாய்‌,எல்லைக்‌ காப்பது ஒன்று இல்லை ஆகில்‌, நீர் ‌ எத்துக்கு இங்கு இருந்தீர்‌? எம்பிரானீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

பசுக்க ளேகொன்று தின்று பாவிகள் பாவ மொன் றறியார்உசிர்க்கொ லைபல நேர்ந்து நாடொறுங் கூறை கொள்ளு மிடம்முசுக்கள் போற்பல வேடர்வாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்இசுக்க ழியப் பயிக்கங் கொண்டுநீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
சொற்பிரிப்பு
பசுக்களே கொன்று தின்று, பாவிகள்‌, பாவம்‌ ஒன்று அறியார்‌,உசிர்க் கொலை பல நேர்ந்து, நாள்தொறும்‌ கூறை கொள்ளும்‌ இடம்‌முசுக்கள்‌ போல்‌ பலவேடர்‌ வாழ்‌ முருகன் பூண்டி மா நகர்வாய்‌,இசுக்கு அழியப்‌ பயிக்கம்‌ கொண்டு, நீர் ‌ எத்துக்கு இங்கு இருந்தீர்‌? எம்பிரானீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

பீறற் கூறை உடுத்தோர் பத்திரங் கட்டி வெட்டன ராய்ச்சூறைப் பங்கிய ராகி நாடொறுங் கூறை கொள்ளு மிடம்மோறை வேடுவர் கூடிவாழ் முருகன் பூண்டி மாநகர் வாய்ஏறு காலிற்ற தில்லை யாய்விடில் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
சொற்பிரிப்பு
பீறல்‌ கூறை உடுத்து, ஓர்‌ பத்திரம் ‌ கட்டி, வெட்டனராய்‌,சூறைப்‌ பங்கியர்‌ ஆகி, நாள்தொறும் ‌ கூறை கொள்ளும்‌ இடம்‌மோறைவேடுவர்‌ கூடி வாழ்‌ முருகன் பூண்டி மாநகர் வாய்‌ ,ஏறு கால்‌ இற்றது இல்லையாய்விடில்‌, எத்துக்கு இங்கு இருந்தீர்‌? எம்பிரானீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

தயங்கு தோலை உடுத்த சங்கரா சாம வேத மோதிமயங்கி ஊரிடு பிச்சை கொண்டுணும் மார்க்க மொன்றறி யீர்முயங்கு பூண்முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மாநகர் வாய்இயங்க வும்மிடுக் குடைய ராய்விடில் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
சொற்பிரிப்பு
தயங்கு தோலை உடுத்த சங்கரா! சாமவேதம்‌ ஓதீ!மயங்கி ஊர்‌ இடு பிச்சை கொண்டு உணும் ‌ மார்க்கம்‌ ஒன்று அறியீர்‌;முயங்கு பூண்‌ முலை மங்கையாளொடு முருகன் பூண்டி மாநகர்வாய்‌இயங்கவும்‌ மிடுக்கு உடையராய் விடில்‌, எத்துக்கு இங்கு இருந்தீர்‌? எம்பிரான் நீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

விட்டி சைப்பன கொக்க ரைகொடு கொட்டி தத்த ளகங்கொட்டிப் பாடுமித் துந்து மியொடு குடமுழா நீர் மகிழ்வீர்மொட்ட லர்ந்து மணங்கமழ் முருகன் பூண்டி மாநகர் வாய்இட்ட பிச்சைகொண் டுண்ப தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
சொற்பிரிப்பு
விட்டு இசைப்பன, கொக்கரை, கொடு கொட்டி, தத்தளகம்‌,கொட்டிப்‌ பாடும்‌ துந்துமியொடு, குடமுழா, நீர்‌ மகிழ்வீர்‌;மொட்டு அலர்ந்து மணம்‌ கமழ்‌ முருகன் பூண்டி மா நகர்வாய்‌,இட்ட பிச்சை கொண்டு உண்பது ஆகில்‌, நீர் ‌ எத்துக்கு இங்கு இருந்தீர்‌? எம்பிரானீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

வேதம் ஓதிவெண் ணீறு பூசிவெண் கோவணந் தற்ற யலேஓதம் மேவிய ஒற்றி யூரையும் உத்திரம் நீர் மகிழ்வீர்மோதி வேடுவர் கூறைகொள்ளும் முருகன் பூண்டி மாநகர் வாய்ஏது காரணம் ஏது காவல்கொண் டெத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
சொற்பிரிப்பு
வேதம்‌ ஓதி, வெண்‌ நீறு பூசி, வெண் கோவணம்‌ தற்று, அயலேஓதம்‌ மேவிய ஒற்றியூரையும் ‌ உத்திரம்‌ நீர்‌ மகிழ்வீர்‌;மோதி வேடுவர்‌ கூறை கொள்ளும்‌ முருகன் பூண்டி மா நகர்வாய்‌,ஏது காரணம்‌ ஏது காவல்‌ கொண்டு, எத்துக்கு இங்கு இருந்தீர்‌? எம்பிரான் நீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

படவ ரவுநுண் ணேரி டைப்பணைத் தோள்வ ரிநெடுங் கண்மடவ ரல்லுமை நங்கை தன்னையோர் பாகம் வைத்து கந்தீர்முடவ ரல்லீர் இடரிலீர் முருகன் பூண்டி மாநகர் வாய்இடவ மேறியும் போவ தாகில்நீர் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
சொற்பிரிப்பு
பட அரவு நுண்‌ ஏர்‌ இடை, பணைத் தோள்‌, வரி நெடுங்கண்‌ ,மடவரல்‌ உமை நங்கை தன்னை ஓர் பாகம்‌ வைத்து உகந்தீர்‌;முடவர்‌ அல்லீர்‌; இடர்‌ இலீர்‌; முருகன் பூண்டி மா நகர்வாய்‌,இடவம்‌ ஏறியும்‌ போவது ஆகில்‌, நீர் ‌ எத்துக்கு இங்கு இருந்தீர்‌? எம்பிரானீரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சாந்த மாகவெண் ணீறு பூசிவெண் பற்ற லைக லனாவேய்ந்த வெண்பிறைக் கண்ணி தன்னையோர் பாகம் வைத்து கந்தீர்மோந்தை யோடு முழக்கறா முருகன் பூண்டி மாநகர் வாய்ஏந்து பூண்முலை மங்கை தன்னொடும் எத்துக்கிங் கிருந்தீரெம் பிரானீரே.
சொற்பிரிப்பு
சாந்தம்‌ ஆக வெண்‌நீறு பூசி, வெண் பல்‌-தலை கலனா,வேய்ந்த வெண்பிறைக்‌ கண்ணி தன்னை ஓர் ‌ பாகம்‌ வைத்து உகந்தீர்‌;மோந்தையோடு முழக்கு அறா முருகன் பூண்டி மா நகர்வாய்‌,ஏந்து பூண்‌முலை மங்கை தன்னொடும்‌ எத்துக்கு இங்கு இருந்தீர்‌? எம்பிரானீரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

முந்தி வானவர் தாந்தொழு முருகன் பூண்டி மாநகர் வாய்ப்பந்த ணைவிரற் பாவை தன்னையோர் பாகம் வைத்த வனைச்சிந்தை யிற்சிவ தொண்ட னூரன் உரைத்தன பத்துங் கொண்டெந்தம் மடிகளை ஏத்து வாரிடர் ஒன்றுந் தாமி லரே.
சொற்பிரிப்பு
முந்தி வானவர் தாம்‌ தொழும்‌ முருகன் பூண்டி மா நகர்வாய்ப்‌பந்து அணை விரல்‌ பாவை தன்னை ஓர் பாகம்‌ வைத்தவனைச்‌சிந்தையில்‌ சிவதொண்டன்‌ ஊரன் ‌ உரைத்தன பத்தும் கொண்டுஎம்தம்‌ அடிகளை ஏத்துவார்‌ இடர் ‌ ஒன்றும்‌ தாம்‌ இலரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.