திருமுறை 7 · 7.048 · 10

திருப்பாண்டிக்கொடுமுடி

அருளியவர்
சுந்தரர்
பண்
பழம்பஞ்சுரம்
தலம்
பாண்டிக்கொடுமுடி
நாடு
கொங்குநாடு

1

மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப் பாத மேமனம் பாவித்தேன்பெற்ற லும்பிறந் தேனி னிப்பிற வாத தன்மைவந் தெய்தினேன்கற்ற வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிநற்ற வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
மற்றுப்‌ பற்று எனக்கு இன்றி, நின் ‌ திருப்பாதமே மனம்‌ பாவித்தேன்‌;பெ(ற்‌)றலும்‌ பிறந்தேன்‌; இனிப்‌ பிறவாத தன்மை வந்து எய்தினேன்‌;கற்றவர்‌ தொழுது ஏத்தும்‌ சீர்க்‌ கறையூரில்‌ பாண்டிக் கொடுமுடிநல்‌-தவா! உனை நான்‌ மறக்கினும்‌ சொல்லும்‌, நா நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

இட்ட னும்மடி யேத்து வார்இகழ்ந் திட்ட நாள்மறந் திட்டநாள்கெட்ட நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிவட்ட வாசிகை கொண்ட டிதொழு தேத்து பாண்டிக் கொடுமுடிநட்ட வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
இட்டன்‌ நும்‌ அடி ஏத்துவார் ‌ இகழ்ந்திட்ட நாள்‌, மறந்திட்ட நாள்‌,“கெட்ட நாள்‌ இவை” என்று அலால் ‌ கருதேன்‌: கிளர்‌ புனல்‌ காவிரிவட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக் கொடுமுடிநட்டவா! உனை நான்‌ மறக்கினும் ‌ சொல்லும்‌, நா நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஓவு நாளுணர் வழியும் நாளுயிர் போகும் நாளுயர் பாடைமேல்காவு நாளிவை என்ற லாற்கரு தேன்கி ளர்புனற் காவிரிப்பாவு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடிநாவ லாஉனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
ஓவு நாள்‌, உணர்வு அழியும்‌ நாள்‌, உயிர்‌ போகும்‌ நாள்‌, உயர்‌ பாடைமேல்‌காவு நாள்‌ இவை என்று அலால் ‌ கருதேன்‌, கிளர்‌ புனல் காவிரிப்‌பாவு தண்புனல்‌ வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடிநாவலா! உனை நான்‌ மறக்கினும்‌ சொல்லும்‌, நா நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

எல்லை யில்புகழ் எம்பி ரானெந்தை தம்பி ரானென்பொன் மாமணிகல்லை யுந்தி வளம்பொ ழிந்திழி காவி ரியதன் வாய்க்கரைநல்ல வர்தொழு தேத்துஞ் சீர்க்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிவல்ல வாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
எல்லை இல்‌ புகழ்‌ எம்பிரான்‌, எந்தை தம்பிரான்‌, என்‌ பொன்‌ மாமணி,கல்லை உந்தி வளம்‌ பொழிந்து இழி காவிரி அதன் வாய்க்‌ கரை,நல்லவர்‌ தொழுது ஏத்தும்‌ சீர்‌ கறையூரில்‌ பாண்டிக் கொடுமுடிவல்லவா! உனை நான்‌ மறக்கினும் ‌ சொல்லும்‌, நா நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அஞ்சி னார்க்கரண் ஆதி யென்றடி யேனும் நான்மிக அஞ்சினேன்அஞ்ச லென்றடித் தொண்ட னேற்கருள் நல்கி னாய்க்கழி கின்றதென்பஞ்சின் மெல்லடிப் பாவை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடிநஞ்ச ணிகண்ட நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
“அஞ்சினார்க்கு அரண்‌ ஆதி” என்று அடியேனும்‌ நான்‌ மிக அஞ்சினேன்‌;'அஞ்சல்‌!' என்று அடித்தொண்டனேற்கு அருள் ‌ நல்கினாய்க்கு அழிகின்‌றது என்‌?பஞ்சின்‌ மெல்‌அடிப்‌ பாவைமார்‌ குடைந்து ஆடு பாண்டிக் கொடுமுடிநஞ்சு அணி கண்ட! நான்‌ மறக்கினும் ‌ சொல்லும்‌, நா நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஏடு வானிளந் திங்கள் சூடினை என்பின் கொல்புலித் தோலின்மேல்ஆடு பாம்பத ரைக்க சைத்த அழக னேயந்தண் காவிரிப்பாடு தண்புனல் வந்தி ழிபரஞ் சோதி பாண்டிக் கொடுமுடிசேட னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
ஏடு வான்‌ இளந்திங்கள்‌ சூடினை; என்‌, பின்‌? கொல்‌ புலித்‌ தோலின்மேல்‌ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே! அம்‌ தண்‌ காவிரிப்‌பாடு தண்புனல்‌ வந்து இழி பரஞ்சோதி! பாண்டிக் கொடுமுடிசேடனே! உனை நான்‌ மறக்கினும்‌ சொல்லும்‌, நா நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

விரும்பி நின்மலர்ப் பாத மேநினைந் தேன்வி னைகளும் விண்டனன்நெருங்கி வண்பொழில் சூழ்ந்தெ ழில்பெற நின்ற காவிரிக் கோட்டிடைக்குரும்பை மென்முலைக் கோதை மார்குடைந் தாடு பாண்டிக் கொடுமுடிவிரும்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
விரும்பி நின்‌ மலர்ப்பாதமே நினைந்தேன்‌; வினைகளும்‌ விண்டனன்‌;நெருங்கி வண்பொழில்‌ சூழ்ந்து எழில்‌ பெற நின்ற காவிரிக் கோட்டு இடைகுரும்பை மென்முலைக்‌ கோதைமார்‌ குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடிவிரும்பனே! உனை நான்‌ மறக்கினும் ‌ சொல்லும்‌, நா நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

செம்பொ னேர்சடை யாய்தி ரிபுரந் தீயெ ழச்சிலை கோலினாய்வம்பு லாங்குழ லாளைப் பாகம மர்ந்து காவிரிக் கோட்டிடைக்கொம்பின் மேற்குயில் கூவ மாமயி லாடு பாண்டிக் கொடுமுடிநம்ப னேயுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
செம்பொன்‌ நேர்‌ சடையாய்‌! திரிபுரம் ‌ தீ எழச்‌ சிலை கோலினாய்‌!வம்பு உலாம்‌ குழலாளைப்‌ பாகம் ‌ அமர்ந்து காவிரிக்கோட்டிடைகொம்பின் மேல்‌ குயில்‌ கூவ, மா மயில் ‌ ஆடு பாண்டிக் கொடுமுடிநம்பனே! உனை நான்‌ மறக்கினும் ‌ சொல்லும்‌, நா நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சார ணன்தந்தை எம்பி ரானெந்தை தம்பிரா னென்பொன்மா மணியென்றுபேரெ ணாயிர கோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்நார ணன்பிர மன்றொ ழுங்கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிக்கார ணாவுனை நான்ம றக்கினுஞ் சொல்லும் நாநமச்சி வாயவே.
சொற்பிரிப்பு
சாரணன்‌, தந்தை, எம்பிரான்‌, எந்தை தம்பிரான்‌, என்‌ பொன்‌, மாமணி என்றுபேர்‌ எண்‌ணாயிரகோடி தேவர் ‌ பிதற்றி நின்று பிரிகிலார்‌;நாரணன்‌, பிரமன்‌, தொழும்‌ கறையூரில்‌ பாண்டிக் கொடுமுடிக்‌காரணா! உனை நான்‌ மறக்கினும் ‌ சொல்லும்‌, நா நமச்சிவாயவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கோணி யபிறை சூடியைக் கறை யூரிற் பாண்டிக் கொடுமுடிபேணி யபெரு மானைப் பிஞ்ஞகப் பித்த னைப்பிறப் பில்லியைப்பாணு லாவரி வண்ட றைகொன்றைத் தார னைப்படப் பாம்பரைநாண னைத்தொண்டன் ஊரன் சொல்லிவை சொல்லு வார்க்கில்லை துன்பமே.
சொற்பிரிப்பு
கோணிய பிறை சூடியை, கறையூரில்‌ பாண்டிக் கொடுமுடிபேணிய பெருமானை, பிஞ்ஞகப் பித்‌தனை, பிறப்பு இல்‌லியை,பாண்‌ உலா வரிவண்டு அறை கொன்றைத் தாரனை, படப்பாம்பு அரைநாணனை, தொண்டன்‌ ஊரன்‌ சொல்‌ இவை சொல்லுவார்க்கு இல்லை, துன்பமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.