1
காட்டூர்க் கடலே கடம்பூர் மலையே கானப் பேரூராய்கோட்டூர்க் கொழுந்தே அழுந்தூ ரரசே கொழுநற் கொல்லேறேபாட்டூர் பலரும் பரவப் படுவாய் பனங்காட் டூரானேமாட்டூர் அறவா மறவா துன்னைப் பாடப் பணியாயே.
சொற்பிரிப்பு
காட்டூர்க் கடலே! கடம்பூர் மலையே! கானப்பேரூராய்!கோட்டூர்க் கொழுந்தே! அழுந்தூர் அரசே! கொழு நல் கொல் ஏறே!பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய்! பனங்காட்டூரானே!மா(ட்)டு ஊர் அறவா! மறவாது உன்னைப் பாடப் பணியாயே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.