1
பத்தூர்புக் கிரந்துண்டு பலபதிகம் பாடிப் பாவையரைக் கிறிபேசிப் படிறாடித் திரிவீர்செத்தார்தம் எலும்பணிந்து சேவேறித் திரிவீர் செல்வத்தை மறைத்துவைத்தீர் எனக்கொருநா ளிரங்கீர்முத்தாரம் இலங்கிமிளிர் மணிவயிரக் கோவை அவைபூணத் தந்தருளி மெய்க்கினிதா நாறுங்கத்தூரி கமழ்சாந்து பணித்தருள வேண்டும் கடல்நாகைக் காரோணம் மேவியிருந் தீரே.
சொற்பிரிப்பு
பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பல பதிகம் பாடி, பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்;செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்;முத்து ஆரம், இலங்கி மிளிர் மணி வயிரக் கோவை அவை, பூணத் தந்தருளி, மெய்க்கு இனிதா நாறும்கத்தூரி கமழ் சாந்து பணித்தருள வேண்டும் கடல் நாகைக் காரோணம் மேவி இருந்தீரே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.