திருமுறை 7 · 7.045 · 11

திருஆமாத்தூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
கொல்லிக்கௌவாணம்
தலம்
ஆமாத்தூர்
நாடு
நடுநாடு

1

காண்டனன் காண்டனன் காரிகை யாள்தன் கருத்தனாய்ஆண்டனன் ஆண்டனன் ஆமாத் தூரெம் அடிகட்காட்பூண்டனன் பூண்டனன் பொய்யன்று சொல்லுவன் கேண்மின்கள்மீண்டனன் மீண்டனன் வேதவித் தல்லா தவர்கட்கே.
சொற்பிரிப்பு
காண்டனன் காண்டனன்‌, காரிகையாள் தன்‌ கருத்தனாய்ஆண்டனன்‌ ஆண்டனன்‌; ஆமாத்தூர்‌ எம்‌ அடிகட்கு ஆட்‌-பூண்டனன் பூண்டனன்‌; பொய்‌ அன்று; சொல்லுவன்‌; கேண்மின்கள்‌:மீண்டனன் மீண்டனன்‌ , வேத வித்து அல்லாதவர்கட்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பாடுவன் பாடுவன் பார்ப்பதி தன்னடி பற்றிநான்தேடுவன் தேடுவன் திண்ணெனப் பற்றிச் செறிதரஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளைக்கூடுவன் கூடுவன் குற்றம தற்றென் குறிப்பொடே.
சொற்பிரிப்பு
பாடுவன் பாடுவன், பார்ப்‌பதி தன்‌ அடி பற்றி, நான்‌தேடுவன் தேடுவன்‌ ; திண்ணெனப் ‌ பற்றிச்‌ செறி தரஆடுவன்‌ ஆடுவன்‌, ஆமாத்தூர்‌ எம்‌ அடிகளை,கூடுவன் கூடுவன்‌, குற்றம் ‌அது அற்று என்‌ குறிப்பொடே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

காய்ந்தவன் காய்ந்தவன் கண்ணழ லாலன்று காமனைப்பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தி னாலன்று கூற்றத்தைஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத் தூரெம் மடிகளார்ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பி ராட்டியைப் பாகமே.
சொற்பிரிப்பு
காய்ந்தவன் காய்ந்தவன்‌, கண்‌ அழலால்‌ அன்று காமனை;பாய்ந்தவன் பாய்ந்தவன்‌, பாதத்தினால்‌ அன்று கூற்றத்தை;ஆய்ந்தவன்‌ ஆய்ந்தவன்‌, ஆமாத்தூர்‌ எம்‌ அடிகளார்‌,ஏய்ந்தவன்‌ ஏய்ந்தவன்‌, எம்பிராட்டியைப்‌ பாகமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள் ளேநின்ற ஒண்பொருள்சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திருவொற்றி யூர்புக்குச்சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென்றோள் தடமுலைஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத் தூரையன் அருளதே.
சொற்பிரிப்பு
ஓர்‌ந்தனன்‌ ஓர்ந்தனன்‌, உள்ளத்துள்ளே நின்ற ஒண்‌ பொருள்‌,சேர்ந்தனன் சேர்ந்தனன்‌, சென்று திரு ஒற்றியூர்‌ புக்கு;சார்ந்தனன் சார்ந்தனன்‌, சங்கிலி மென்தோள்‌ தடமுலை;ஆர்ந்தனன்‌ ஆர்ந்தனன்‌, ஆமாத்தூர்‌ ஐயன்‌ அருள்‌ அதே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

வென்றவன் வென்றவன் வேள்வியில் விண்ணவர் தங்களைச்சென்றவன் சென்றவன் சில்பலிக் கென்று தெருவிடைநின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர் தங்கள்பால்அன்றவன் அன்றவன் செய்யருள் ஆமாத்தூர் ஐயனே.
சொற்பிரிப்பு
வென்றவன் வென்றவன்‌, வேள்வியில் ‌ விண்ணவர் தங்களை;சென்றவன் சென்றவன்‌, சில் பலிக்கு என்று தெருவிடை;நின்றவன்‌ நின்றவன்‌, நீதி நிறைந்தவர் தங்கள்பால்‌;அன்று அவன்‌ அன்று அவன்‌, செய்‌ அருள்‌; ஆமாத்தூர்‌ ஐயனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

காண்டவன் காண்டவன் காண்டற் கரிய கடவுளாய்நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவேஆண்டவன் ஆண்டவன் ஆமாத் தூரையும் எனையுமாட்பூண்டவன் பூண்டவன் மார்பிற் புரிநூல் புரளவே.
சொற்பிரிப்பு
காண்டவன் காண்டவன்‌, காண்டற்கு அரிய கடவுளாய்‌;நீண்டவன்‌ நீண்டவன்‌, நாரணன்‌ நான்முகன்‌ நேடவே;ஆண்டவன்‌ ஆண்டவன்‌, ஆமாத்தூரையும்‌ எனையும்‌ ஆள்‌;பூண்டவன் பூண்டவன்‌, மார்பில் ‌ புரிநூல்‌ புரளவே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

எண்ணவன் எண்ணவன் ஏழுல கத்துயிர் தங்கட்குக்கண்ணவன் கண்ணவன் காண்டுமென் பாரவர் தங்கட்குப்பெண்ணவன் பெண்ணவன் மேனியோர் பாகமாம் பிஞ்ஞகன்அண்ணவன் அண்ணவன் ஆமாத் தூரெம் அடிகளே.
சொற்பிரிப்பு
எண்ணவன்‌ எண்ணவன்‌, ஏழ் உலகத்து உயிர் தங்கட்கு;கண்‌ அவன்‌ கண்‌ அவன்‌, “காண்டும்‌” என்பார்‌ அவர் தங்கட்கு;பெண்‌ அவன்‌ பெண்‌ அவன்‌, மேனி ஓர் பாகம்‌; ஆம்‌, பிஞ்ஞகன்‌;அண்ணவன்‌ அண்ணவன்‌ ஆமாத்தூர்‌ எம்‌ அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பொன்னவன் பொன்னவன் பொன்னைத்தந் தென்னைப்போ கவிடாமின்னவன் மின்னவன் வேதத்தி னுட்பொரு ளாகியஅன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்என்னவன் என்னவன் என்மனத் தின்புற் றிருப்பனே.
சொற்பிரிப்பு
பொன்னவன் பொன்னவன்‌; பொன்னைத்‌ தந்து என்னைப்‌ போக விடாமின்னவன் மின்னவன்‌ : வேதத்தின் ‌ உள் பொருள்‌ ஆகியஅன்னவன்‌ அன்னவன்‌ ; ஆமாத்தூர் ‌ ஐயனை ஆர்வத்தால்‌“என்னவன்‌ என்னவன்‌! என்‌ மனத்து இன்புற்று இருப்பனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

தேடுவன் தேடுவன் செம்மலர்ப் பாதங்கள் நாடொறும்நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலேயோர் நால்விரல்மாடுவன் மாடுவன் வன்கை பிடித்து மகிழ்ந்துளேஆடுவன் ஆடுவன் ஆமாத் தூரெம் அடிகளே.
சொற்பிரிப்பு
தேடுவன் தேடுவன்‌ செம்மலர்ப் பாதங்கள்‌ நாள்தொறும்‌;நாடுவன்‌ நாடுவன்‌, நாபிக்கு மேலே ஓர்‌ நால்விரல்‌;மா(ட்‌)டுவன் மா(ட்‌)டுவன்‌, வன்‌ கை பிடித்து; மகிழ்ந்து உளேஆடுவன்‌ ஆடுவன்‌, ஆமாத்தூர்‌ எம்‌ அடிகளே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

உற்றனன் உற்றவர் தம்மை ஒழிந்துள்ளத் துள்பொருள்பற்றினன் பற்றினன் பங்கயச் சேவடிக் கேசெல்லஅற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயானடி யார்கட்காட்பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும்பிற வாமைக்கே.
சொற்பிரிப்பு
உற்றனன்‌, உற்றவர் தம்மை ஒழிந்து, உள்ளத்து உள்பொருள்‌பற்றினன்‌; பற்றினன்‌ , பங்கயச் சேவடிக்கே செல்ல;அற்றனன்‌ அற்றனன்‌ ; ஆமாத்தூர் மேயான்‌ அடியார்கட்கு ஆட்‌-பெற்றனன் பெற்றனன்‌, பெயர்த்தும் பெயர்த்தும்‌ பிறவாமைக்கே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலைமெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொரு ளான விமலனைமையனை மையணி கண்டனை வன்றொண்டன் ஊரன்சொல்பொய்யொன்று மின்றிப் புலம்புவார் பொற்கழல் சேர்வரே.
சொற்பிரிப்பு
ஐயனை, அத்தனை, ஆள்‌உடை ஆமாத்தூர்‌ அண்ணலை,மெய்யனை, மெய்யர்க்கு மெய்ப்பொருள் ‌ ஆன விமலனை,மையனை, மை அணி கண்டனை, வன்தொண்டன்‌ ஊரன்‌ சொல்‌பொய்‌ ஒன்றும்‌ இன்றிப்‌ புலம்புவார் ‌ பொன்கழல்‌ சேர்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.