1
நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார்துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர்பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள்முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே.
சொற்பிரிப்பு
நஞ்சி, “இடை இன்று நாளை' என்று உம்மை நச்சுவார்துஞ்சியிட்டால் பின்னைச் செய்வது என்? அடிகேள், சொலீர்!பஞ்சி இடப் புட்டில் கீறுமோ? பணியீர், அருள்!முஞ்சி இடைச் சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.