1
எறிக்குங் கதிர்வேய் உதிர்முத் தம்மோடே லம் இலவங்கந் தக்கோலம் இஞ்சிசெறிக்கும் புனலுட் பெய்துகொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றா றதன்கீழ்க் கரைமேல்முறிக்குந் தழைமா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேற்குயில் கூவலறாவெறிக்குங் கலைமா வெஞ்சமாக் கூடல் விகிர்தா அடியே னையும்வேண் டுதியே.
சொற்பிரிப்பு
எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு, ஏலம் , இலவங்கம், தக்கோலம், இஞ்சி,செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு, மண்டி, திளைத்து, எற்று சிற்றாறு அதன் கீழ்க்கரை மேல்முறிக்கும் தழை மா முடப்புன்னை, ஞாழல், குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா,வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா! அடியேனையும் வேண்டுதியே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.