திருமுறை 7 · 7.041 · 10

திருக்கச்சூர் ஆலக்கோயில்

அருளியவர்
சுந்தரர்
பண்
கொல்லிக்கௌவாணம்
தலம்
கச்சூர் ஆலக்கோயில்
நாடு
தொண்டைநாடு

1

முதுவாய் ஓரி கதற முதுகாட் டெரிகொண் டாடல் முயல்வானேமதுவார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள்தன் மணவாளாகதுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரேஅதுவே ஆமா றிதுவோ கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.
சொற்பிரிப்பு
முது வாய்‌ ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல்‌ முயல்வானே!மது வார்‌ கொன்றைப் புது வீ சூடும் ‌ மலையான் மகள் தன்‌ மணவாளா!கதுவாய்த் தலையில்‌ பலி நீ கொள்ளக் ‌ கண்டால்‌ அடியார்‌ கவலாரே?அதுவே ஆம்‌ ஆறு இதுவோ? கச்சூர் ‌ ஆலக்கோயில்‌ அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கச்சேர் அரவொன் றரையில் அசைத்துக் கழலுஞ்சிலம்புங் கலிக்கப் பலிக்கென்றுச்சம் போதா ஊரூர் திரியக் கண்டால் அடியார் உருகாரேஇச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழேழ் பிறப்பும் எனையாள்வாய்அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே.
சொற்பிரிப்பு
கச்சு ஏர்‌ அரவு ஒன்று அரையில்‌ அசைத்து, கழலும்‌ சிலம்பும்‌ கலிக்க, பலிக்கு என்றுஉச்சம் போதா ஊர்ஊர்‌ திரியக்‌ கண்டால்‌ அடியார்‌ உருகாரே?இச்சை அறியோம்‌; எங்கள்‌ பெருமான்‌! ஏழ்‌ஏழ் பிறப்பும்‌ எனை ஆள்வாய்‌!அச்சம்‌ இல்லாக்‌ கச்சூர்‌ வடபால் ‌ ஆலக்கோயில்‌ அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

சாலக் கோயில் உளநின் கோயில் அவையென் றலைமேற் கொண்டாடிமாலைத் தீர்ந்தேன் வினையுந் துரந்தேன் வானோர் அறியா நெறியானேகோலக் கோயில் குறையாக் கோயில் குளிர்பூங் கச்சூர் வடபாலைஆலக் கோயிற் கல்லால் நிழற்கீழ் அறங்கட் டுரைத்த அம்மானே.
சொற்பிரிப்பு
சாலக்‌ கோயில்‌ உள நின்‌ கோயில்‌; அவை என்‌ தலைமேல்‌ கொண்டாடிமாலைத்‌ தீர்த்தேன்‌; வினையும்‌ துரந்தேன்‌ வானோர்‌ அறியா நெறியானே!கோலக்‌ கோயில்‌ குறையாக்‌ கோயில் ‌ குளிர்‌ பூங்‌ கச்சூர்‌ வடபாலைஆலக்கோயில்‌, கல்லால் நிழல் கீழ் ‌ அறம்‌ கட்டுரைத்த அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

விடையுங் கொடியுஞ் சடையும் உடையாய் மின்னேர் உருவத் தொளியானேகடையும் புடைசூழ் மணிமண் டபமுங் கன்னி மாடங் கலந்தெங்கும்புடையும் பொழிலும் புனலுந் தழுவிப் பூமேல் திருமா மகள்புல்கிஅடையுங் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.
சொற்பிரிப்பு
விடையும்‌ கொடியும்‌ சடையும்‌' உடையாய்‌! மின்‌ நேர்‌ உருவத்து ஒளியானே!கடையும்‌ புடை சூழ்‌ மணி மண்டபமும் ‌ கன்னிமாடம்‌ கலந்து, எங்கும்புடையும்‌ பொழிலும்‌ புனலும்‌ தழுவி, பூமேல்‌ திருமாமகள்‌ புல்கி,அடையும்‌ கழனிப்‌ பழனக்‌ கச்சூர் ‌ ஆலக்கோயில்‌ அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

மேலை விதியே வினையின் பயனே விரவார் புரமூன் றெரிசெய்தாய்காலை யெழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய் கறைக்கண்டாமாலை மதியே மலைமேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்தஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.
சொற்பிரிப்பு
மேலை விதியே! வினையின்‌ பயனே! விரவார்‌ புரம் மூன்று எரி செய்தாய்‌!காலை எழுந்து தொழுவார் தங்கள் ‌ கவலை களைவாய்‌! கறைக்கண்டா!மாலை மதியே! மலைமேல்‌ மருந்தே! மறவேன்‌, அடியேன்‌; வயல்‌ சூழ்ந்தஆலைக்‌ கழனிப்‌ பழனக்‌ கச்சூர் ‌ ஆலக்கோயில்‌ அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்ற மேறிப் பேய்சூழ்தல்துறவாய் மறவாய் சுடுகா டென்றும் இடமாக் கொண்டு நடமாடிஒறுவாய்த் தலையிற் பலிநீ கொள்ளக் கண்டால் அடியார் உருகாரேஅறவே ஒழியாய் கச்சூர் வடபால் ஆலக் கோயில் அம்மானே.
சொற்பிரிப்பு
பிறவாய்‌; இறவாய்‌; பேணாய்‌; மூவாய்‌; பெற்றம்‌ ஏறிப்‌ பேய்‌ சூழ்தல்‌துறவாய்‌; மறவாய்‌, சுடுகாடு என்றும்‌ இடமாக்‌ கொண்டு நடம்‌ ஆடி;ஒறுவாய்த் தலையில்‌ பலி நீ கொள்ளக் ‌ கண்டால்‌ அடியார்‌ உருகாரே?அறவே ஒழியாய்‌ கச்சூர்‌ வடபால் ‌ ஆலக்கோயில்‌ அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வானேமெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய்மையார் தடங்கண் மங்கை பங்கா கங்கார் மதியஞ் சடைவைத்தஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.
சொற்பிரிப்பு
பொய்யே உன்னைப்‌ புகழ்வார்‌ புகழ்ந்தால் ‌ அதுவும்‌ பொருளாக்‌ கொள்வோனே!மெய்யே! எங்கள்‌ பெருமான்‌! உன்னை நினைவார்‌ அவரை நினைகண்டாய்‌!மை ஆர்‌ தடங்கண்‌ மங்கை பங்கா! கங்கு ஆர்‌ மதியம்‌ சடை வைத்தஐயா! செய்யாய்‌! வெளியாய்‌! கச்சூர் ‌ ஆலக்கோயில்‌ அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஊனைப் பெருக்கி உன்னை நினையா தொழிந்தேன் செடியேன் உணர்வில்லேன்கானக் கொன்றை கமழ மலருங் கடிநா றுடையாய் கச்சூராய்மானைப் புரையும் மடமென் னோக்கி மடவா ளஞ்ச மறைத்திட்டஆனைத் தோலாய் ஞானக் கண்ணாய் ஆலக் கோயில் அம்மானே.
சொற்பிரிப்பு
ஊனைப்‌ பெருக்கி, உன்னை நினையா தொழிந்தேன்‌, செடியேன்‌; உணர்வு இல்லேன்‌கானக்‌ கொன்றை கமழ மலரும் ‌ கடிநாறு உடையாய்‌! கச்சூராய்‌!மானைப்‌ புரையும்‌ மடமென் நோக்கி மடவாள்‌ அஞ்ச மறைத்திட்டஆனைத் தோலாய்‌! ஞானக் கண்ணாய்‌! ஆலக்கோயில்‌ அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

காதல் செய்து களித்துப் பிதற்றிக் கடிமா மலரிட் டுனையேத்திஆதல் செய்யும் அடியார் இருக்க ஐயங் கொள்வ தழகிதேஓதக் கண்டேன் உன்னை மறவேன் உமையாள் கணவா எனையாள்வாய்ஆதற் பழனக் கழனிக் கச்சூர் ஆலக் கோயில் அம்மானே.
சொற்பிரிப்பு
காதல் செய்து, களித்து, பிதற்றி, கடிமாமலர்‌ இட்டு உனை ஏத்தி,ஆதல் செய்யும்‌ அடியார்‌ இருக்க, ஐயம்‌ கொள்வது அழகிதே!ஓதக்‌ கண்டேன்‌; உன்னை மறவேன்‌; உமையாள் கணவா! எனை ஆள்வாய்‌!ஆதல்‌ பழனக்‌ கழனிக்‌ கச்சூர் ‌ ஆலக்கோயில்‌ அம்மானே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

அன்னம் மன்னும் வயல்சூழ் கச்சூர் ஆலக் கோயில் அம்மானைஉன்ன முன்னும் மனத்தா ரூரன் ஆரூ ரன்பேர் முடிவைத்தமன்னு புலவன் வயல்நா வலர்கோன் செஞ்சொல் நாவன் வன்றொண்டன்பன்னு தமிழ்நூல் மாலை வல்லார் அவரெந் தலைமேற் பயில்வாரே.
சொற்பிரிப்பு
அன்னம்‌ மன்னும்‌ வயல்‌ சூழ்‌ கச்சூர் ‌ ஆலக்கோயில்‌ அம்மானைஉன்ன முன்னும்‌ மனத்து ஆரூரன்‌ ஆரூரன்‌ பேர்‌ முடி வைத்தமன்னு புலவன்‌, வயல்‌ நாவலர்கோன்‌, செஞ்சொல்‌ நாவன்‌, வன்தொண்டன்பன்னு தமிழ்நூல் மாலை வல்லார்‌ அவர்‌ என்‌ தலைமேல்‌ பயில்வாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.