1
வள்வாய மதிமிளிரும் வளர்சடையி னானைமறையவனை வாய்மொழியை வானவர்தங் கோனைப்புள்வாயைக் கீண்டுலகம் விழுங்கியுமிழ்ந் தானைப்பொன்னிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தி னானைமுள்வாய மடல்தழுவி முடத்தாழை ஈன்றுமொட்டலர்ந்து விரைநாறும் முருகுவிரி பொழில்சூழ்கள்வாய கருங்குவளை கண்வளருங் கழனிக்கானாட்டு முள்ளூரிற் கண்டுதொழு தேனே.
சொற்பிரிப்பு
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை, மறையவனை, வாய்மொழியை, வானவர் தம் கோனை,புள் வாயைக் கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை, பொன் நிறத்தின் முப்புரிநூல் நான்முகத்தினானை,முள் வாய மடல் தழுவி, முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து, விரை தாறும் முருகு விரி பொழில் சூழ்,கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.