1
தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன் திருநீல கண்டத்துக் குயவனார்க் கடியேன்இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்றன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக் கடியேன் விரிபொழில்சூழ் குன்றையார் விறன்மிண்டற் கடியேன்அல்லிமென் முல்லையந்தார் அமர்நீதிக் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே.
சொற்பிரிப்பு
தில்லை வாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்; திருநீலகண்டத்துக் குயவனார்க்கு அடியேன்;இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்; இளையான் தன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன் ;வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்; விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்;அல்லி மென் முல்லை அம்தார் அமர் நீதிக்கு அடியேன்; ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.