1
தம்மானை அறியாத சாதியார் உளரே சடைமேற்கொள் பிறையானை விடைமேற்கொள் விகிர்தன்கைம்மாவின் உரியானைக் கரிகாட்டி லாடல் உடையானை விடையானைக் கறைகொண்ட கண்டத்தெம்மான்றன் அடிக்கொண்டென் முடிமேல்வைத் திடுமென்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவிலா நாயேன்எம்மானை எறிகெடில வடவீரட் டானத் துறைவானை இறைபோது மிகழ்வன்போ லியானே.
சொற்பிரிப்பு
தம்மானை அறியாத சாதியார் உளரே? சடைமேல் கொள் பிறையானை, விடை மேற்கொள் விகிர்தன்,கைம்மாவின் உரியானை, கரிகாட்டில் ஆடல் உடையானை, விடையானை, கறை கொண்ட கண்டத்துஅம்மான் தன் அடிக் கொண்டு என் முடிமேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன்எம்மானை, எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை, இறை போதும் இகழ்வன் போல் யானே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.