1
காருலாவிய நஞ்சையுண்டிருள் கண்டர் வெண்டலை யோடுகொண்டூரெலாந்திரிந் தென்செய்வீர்பலி ஓரிடத்திலே கொள்ளும்நீர்பாரெலாம்பணிந் தும்மையேபர விப்பணியும்பைஞ் ஞீலியீர்ஆரமாவது நாகமோசொல்லும் ஆரணீய விடங்கரே.
சொற்பிரிப்பு
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட! வெண் தலை ஓடு கொண்டு,ஊர் எலாம் திரிந்து, என் செய்வீர்? பலி ஓர் இடத்திலே கொள்ளும், நீர்!பார் எலாம் பணிந்து உம்மையே பரவிப் பணியும் பைஞ்ஞீலியீர்!ஆரம் ஆவது நாகமோ? சொலும்! ஆரணீய விடங்கரே!
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.