திருமுறை 7 · 7.035 · 10

திருப்புறம்பயம்

அருளியவர்
சுந்தரர்
பண்
கொல்லி
தலம்
புறம்பயம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அங்கம்ஓதியோர் ஆறைமேற்றளி நின்றும்போந்துவந் தின்னம்பர்த்தங்கினோமையும் இன்னதென்றிலர் ஈசனாரெழு நெஞ்சமேகங்குல்ஏமங்கள் கொண்டுதேவர்கள் ஏத்திவானவர் தாந்தொழும்பொங்குமால்விடை யேறிசெல்வப் புறம்பயந்தொழப் போதுமே.
சொற்பிரிப்பு
அங்கம்‌ ஓதி ஓர்‌ ஆறை மேற்றளி நின்றும்‌ போந்து வந்து இன்னம்பர்த்‌தங்கினோமையும்‌, இன்னது என்றிலர்‌, ஈசனார்‌; எழு, நெஞ்சமே!கங்குல்‌ ஏமங்கள்‌ கொண்டு தேவர்கள் ‌ ஏத்தி, வானவர் தாம்‌ தொழும்‌பொங்கு மால்விடை ஏறி செல்வப் ‌ புறம்பயம்‌ தொழப்‌ போதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பதியுஞ்சுற்றமும் பெற்றமக்களும் பண்டையாரலர் பெண்டிரும்நிதியிலிம்மனை வாழும்வாழ்க்கையும் நினைப்பொழிமட நெஞ்சமேமதியஞ்சேர்சடைக் கங்கையானிடம் மகிழும்மல்லிகை செண்பகம்புதியபூமலர்ந் தெல்லிநாறும் புறம்பயந்தொழப் போதுமே.
சொற்பிரிப்பு
பதியும்‌, சுற்றமும்‌, பெற்ற மக்களும்‌, பண்டையார்‌ அலர்‌; பெண்டிரும்‌,நெதியில்‌ இம்‌ மனை வாழும்‌ வாழ்க்கையும்‌, நினைப்பு ஒழி , மட நெஞ்சமே!மதியம்‌ சேர்‌ சடைக்‌ கங்கையான்‌ இடம்‌ மகிழும்‌, மல்லிகை, சண்பகம்‌,புதிய பூ மலர்ந்து எல்லி நாறும்‌ புறம்பயம்‌ தொழப்‌ போதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

புறந்திரைந்து நரம்பெழுந்து நரைத்துநீயுரை யாற்றளர்ந்தறம்புரிந்து நினைப்பதாண்மை அரிதுகாண்இஃ தறிதியேல்திறம்பியாதெழு நெஞ்சமேசிறு காலைநாமுறு வாணியம்புறம்பயத்துறை பூதநாதன் புறம்பயந்தொழப் போதுமே.
சொற்பிரிப்பு
புறம்‌ திரைந்து, நரம்பு எழுந்து, நரைத்து, நீ உரையால்‌ தளர்ந்து,அறம்‌ புரிந்து நினைப்பது ஆண்மை அரிது காண்‌ ; இஃது அறிதியேல்‌,திறம்பியாது எழு, நெஞ்சமே! சிறு காலை நாம்‌ உறு வாணியம்‌,புறம்‌ பயத்து உறை பூதநாதன் ‌ புறம்பயம்‌ தொழப்‌ போதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

குற்றொருவரைக் கூறைகொண்டு கொலைகள்சூழ்ந்த களவெலாஞ்செற்றொருவரைச் செய்ததீமைகள் இம்மையேவருந் திண்ணமேமற்றொருவரைப் பற்றிலேன்மற வாதெழுமட நெஞ்சமேபுற்றரவுடைப் பெற்றமேறி புறம்பயந்தொழப் போதுமே.
சொற்பிரிப்பு
குற்று ஒருவரைக்‌ கூறை கொண்டு கொலைகள்‌ சூழ்ந்த களவு எலாம்‌சற்று ஒருவரைச்‌ செய்த தீமைகள்‌, இம்மையே வரும்‌, திண்ணமே;மற்று ஒருவரைப்‌ பற்று இலேன்‌; மறவாது எழு , மட நெஞ்சமே!புற்று அரவு உடைப்‌ பெற்றம்‌ ஏறி புறம்பயம்‌ தொழப்‌ போதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கள்ளிநீசெய்த தீமையுள்ளன பாவமும்பறை யும்படிதெள்ளிதாவெழு நெஞ்சமேசெங்கண் சேவுடைச்சிவ லோகனூர்துள்ளிவெள்ளிள வாளைபாய்வயல் தோன்றுதாமரைப் பூக்கள்மேல்புள்ளிநள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயந்தொழப் போதுமே.
சொற்பிரிப்பு
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும்‌ பறையும் படிதெள்ளிதா எழு, நெஞ்சமே! செங்கண் ‌ சே உடைச்‌ சிவலோகன்‌ ஊர்‌துள்ளி வெள்‌ இள வாளை பாய்‌ வயல்‌ தோன்று தாமரைப் பூக்கள் மேல்‌,புள்ளி நள்ளிகள்‌ பள்ளிகொள்ளும்‌ புறம்பயம்‌ தொழப்‌ போதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

படையெலாம்பக டாரஆளிலும் பௌவஞ்சூழ்ந்தர சாளிலுங்கடையெலாம்பிணைத் தேரைவால்கவ லாதெழுமட நெஞ்சமேமடையெலாங்கழு நீர்மலர்ந்து மருங்கெலாங்கரும் பாடத்தேன்புடையெலாம்மணம் நாறுசோலைப் புறம்பயந்தொழப் போதுமே.
சொற்பிரிப்பு
படை எலாம்‌ பகடு ஆர ஆளிலும்‌, பெளவம்‌ சூழ்ந்து அரசு ஆளிலும்‌,கடை எலாம்‌ பினைத்‌ தேரைவால்‌; கவலாது எழு , மட நெஞ்சமே!மடை எலாம்‌ கழுநீர்‌ மலர்ந்து, மருங்கு எலாம்‌ கரும்பு ஆட, தேன்‌புடை எலாம்‌ மணம்‌ நாறு சோலைப் ‌ புறம்பயம்‌ தொழப்‌ போதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

முன்னைச்செய்வினை இம்மையில்வந்து மூடுமாதலின் முன்னமேஎன்னைநீதியக் காதெழுமட நெஞ்சமேயெந்தை தந்தையூர்அன்னச்சேவலோ டூடிப்பேடைகள் கூடிச்சேரு மணிபொழிற்புன்னைக்கன்னி கழிக்கணாறும் புறம்பயந்தொழப் போதுமே.
சொற்பிரிப்பு
முன்னைச்‌ செய்வினை இம்மையில்‌ வந்து மூடும்‌ ஆதலின்‌ முன்னமே,என்னை நீ தியக்காது எழு , மட நெஞ்சமே! எந்தை தந்தை ஊர்‌அன்னச் சேவலோடு ஊடிப்‌ பேடைகள் ‌ கூடிச்‌ சேரும்‌ அணி பொழில்‌,புன்னைக் கன்னிகள்‌ அக்கு அரும்பு புறம்பயம்‌ தொழப்‌ போதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மலமெலாமறும் இம்மையேமறு மைக்கும்வல்வினை சார்கிலாசலமெலாமொழி நெஞ்சமேயெங்கள் சங்கரன்வந்து தங்குமூர்கலமெலாங்கடல் மண்டுகாவிரி நங்கையாடிய கங்கைநீர்புலமெலாம்மண்டிப் பொன்விளைக்கும் புறம்பயந்தொழப் போதுமே.
சொற்பிரிப்பு
மலம்‌ எலாம்‌ அறும்‌, இம்மையே; மறுமைக்கும்‌ வல்வினை சார்கிலா;சலம்‌ எலாம்‌ ஒழி, நெஞ்சமே! எங்கள் ‌ சங்கரன்‌ வந்து தங்கும்‌ ஊர்‌கலம்‌ எலாம்‌ கடல்‌ மண்டு, காவிரி நங்கை ஆடிய, கங்கை நீர்‌புலம்‌ எலாம்‌ மண்டிப்‌ பொன்‌ விளைக்கும்‌ புறம்பயம்‌ தொழப்‌ போதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பண்டரீயன செய்ததீமையும் பாவமும்பறை யும்படிகண்டரீயன கேட்டியேற்கவ லாதெழுமட நெஞ்சமேதொண்டரீயன பாடித்துள்ளிநின் றாடிவானவர்தாந் தொழும்புண்டரீக மலரும்பொய்கைப் புறம்பயந்தொழப் போதுமே.
சொற்பிரிப்பு
பண்டு அரீயன செய்த தீமையும் ‌ பாவமும்‌ பறையும்கண்டு அரீயன கேட்டியேல்‌, கவலாது எழு, மட நெஞ்சமே!தொண்டு அரீயன பாடித்‌ துள்ளி நின்று, ஆடி வானவர் தாம்‌ தொழும்‌புண்டரீகம்‌ மலரும்‌ பொய்கை புறம்பயம்‌ தொழப்‌ போதுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

துஞ்சியும்பிறந் துஞ்சிறந்துந் துயக்கறாத மயக்கிவைஅஞ்சிஊரன் திருப்புறம்பயத் தப்பனைத்தமிழ்ச் சீரினால்நெஞ்சினாலே புறம்பயந்தொழு துய்துமென்று நினைத்தனவஞ்சியாதுரை செய்யவல்லவர் வல்லவானுல காள்வரே.
சொற்பிரிப்பு
துஞ்சியும்‌ பிறந்தும்‌ சிறந்தும் ‌ துயக்கு அறாத மயக்கு இவைஅஞ்சி, ஊரன்‌ திருப்‌ புறம்பயத்து அப்பனைத்‌ தமிழ்ச் சீரினால்‌நெஞ்சினாலே, “புறம்பயம்‌ தொழுது உய்தும்‌' என்று நினைத்தனவஞ்சியாது உரை செய்ய வல்லவர்‌, வல்லர்‌, வான்‌ உலகு ஆள்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.