1
தம்மையேபுகழ்ந் திச்சைபேசினுஞ் சார்வினுந்தொண்டர் தருகிலாப்பொய்ம்மையாளரைப் பாடாதேயெந்தை புகலூர்பாடுமின் புலவீர்காள்இம்மையேதருஞ் சோறுங்கூறையும் ஏத்தலாமிடர் கெடலுமாம்அம்மையேசிவ லோகமாள்வதற் கியாதுமையுற வில்லையே.
சொற்பிரிப்பு
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலாப்பொய்ம்மையாளரைப் பாடாதே, எந்தை புகலூர் பாடுமின், புலவீர்காள்!இம்மையே தரும், சோறும் கூறையும்; ஏத்தல் ஆம்; இடர் கெடலும் ஆம்;அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.