1
பாறுதாங்கிய காடரோபடு தலையரோமலைப் பாவையோர்கூறுதாங்கிய குழகரோகுழைக் காதரோகுறுங் கோட்டிளஏறுதாங்கிய கொடியரோசுடு பொடியரோஇலங் கும்பிறைஆறுதாங்கிய சடையரோநமக் கடிகளாகிய அடிகளே.
சொற்பிரிப்பு
பாறு தாங்கிய காடரோ? படு தலையரோ? மலைப்பாவை ஓர்-கூறு தாங்கிய குழகரோ? குழைக் காதரோ? குறுங் கோட்டு இளஏறு தாங்கிய கொடியரோ? சுடு பொடியரோ? இலங்கும் பிறைஆறு தாங்கிய சடையரோ?-- நமக்கு அடிகள் ஆகிய அடிகளே.
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.