1
கடிதாய்க் கடற்காற்று வந்தெற்றக் கரைமேற்குடிதான் அயலேஇருந் தாற்குற்ற மாமோகொடியேன் கண்கள்கண் டனகோடிக் குழகீர்அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே.
சொற்பிரிப்பு
கடிது ஆய்க் கடல் காற்று வந்து எற்ற, கரைமேல்குடிதான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ?கொடியேன் கண்கள் கண்டன, கோடிக் குழகீர்!அடிகேள்! உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே?
உரை
மூலத்தில் தமிழ் உரை இல்லை.