திருமுறை 7 · 7.030 · 11

திருக்கருப்பறியலூர்

அருளியவர்
சுந்தரர்
பண்
நட்டராகம்
தலம்
கருப்பறியலூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சிம்மாந்து சிம்புளித்துச் சிந்தையினில் வைத்துகந்து திறம்பா வண்ணங்கைம்மாவின் உரிவைபோர்த் துமைவெருவக் கண்டானைக் கருப்ப றியலூர்க்கொய்ம்மாவின் மலர்ச்சோலைக் குயில்பாட மயிலாடுங் கொகுடிக் கோயில்எம்மானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
சொற்பிரிப்பு
சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில்‌ வைத்து உகந்துதிறம்பா வண்ணம்‌-கைம்மாவின்‌ உரிவை போர்த்து உமை வெருவக் ‌ கண்டானை; கருப்பறியலூர்‌,கொய்ம்‌ மாவின்‌ மலர்ச்சோலைக்‌ குயில்‌ பாட மயில்‌ ஆடும்‌, கொகுடிக்கோயில்‌எம்மானை; மனத்தினால்‌ நினைந்த போது அவர்‌ நமக்கு இனியவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

நீற்றாரும் மேனியராய் நினைவார்தம் உள்ளத்தே நிறைந்து தோன்றுங்காற்றானைத் தீயானைக் கதிரானை மதியானைக் கருப்ப றியலூர்க்கூற்றானைக் கூற்றுதைத்துக் கோல்வளையாள் அவளோடுங் கொகுடிக் கோயில்ஏற்றானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
சொற்பிரிப்பு
நீற்‌றுஆரும்‌ மேனியராய்‌ நினைவார் தம் ‌ உள்ளத்தே நிறைந்து தோன்றும்‌காற்றானை, தீயானை, கதிரானை, மதியானை, கருப்பறியலூர்க்கூற்றானை, கூற்று உதைத்துக்‌ கோல்வளையாள் ‌அவளோடும்‌ கொகுடிக்கோயில்‌ஏற்றானை, மனத்தினால்‌ நினைந்த போது அவர்‌ நமக்கு இனியவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

முட்டாமே நாடோ றும் நீர்மூழ்கிப் பூப்பறித்து மூன்று போதுங்கட்டார்ந்த இண்டைகொண் டடிச்சேர்த்தும் அந்தணர்தங் கருப்ப றியலூர்கொட்டாட்டுப் பாட்டாகி நின்றானைக் குழகனைக் கொகுடிக் கோயில்எட்டான மூர்த்தியை நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
சொற்பிரிப்பு
முட்டாமே நாள்தோறும்‌ நீர்‌ மூழ்கி, பூப்‌ பறித்து, மூன்று போதும்கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு, அடிச்‌ சேர்த்தும் ‌ அந்தணர் தம்‌ கருப்பறியலூர்‌கொட்டு ஆட்டுப்‌ பாட்டு ஆகி நின்றானை, குழகனை, கொகுடிக்கோயில்‌எட்டு ஆன மூர்த்தியை, நினைந்த போது அவர்‌ நமக்கு இனியவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

விருந்தாய சொன்மாலை கொண்டேத்தி வினைபோக வேலி தோறுங்கருந்தாள வாழைமேற் செங்கனிகள் தேன்சொரியுங் கருப்ப றியலூர்க்குருந்தாய முள்ளெயிற்றுக் கோல்வளையாள் அவளோடுங் கொகுடிக் கோயில்இருந்தானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
சொற்பிரிப்பு
விருந்து ஆய சொல்மாலை கொண்டு ஏத்தி, வினை போக, வேலி தோறும்‌கருந்‌ தாள வாழைமேல்‌ செங்கனிகள் ‌ தேன்‌ சொரியும்‌ கருப்பறியலூர்குருந்து ஆய முள்‌ எயிற்றுக்‌ கோல்வளையாள் ‌அவளோடும்‌ கொகுடிக்கோயில்‌இருந்தானை மனத்தினால்‌ நினைந்தபோது அவர்‌ நமக்கு இனியவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பொடியேறு திருமேனிப் பெருமானைப் பொங்கரவக் கச்சை யானைக்கடிநாறும் பூம்பொய்கைக் கயல்வாளை குதிகொள்ளுங் கருப்ப றியலூர்க்கொடியேறி வண்டினமுந் தண்டேனும் பண்செய்யுங் கொகுடிக் கோயில்அடியேறு கழலானை நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
சொற்பிரிப்பு
பொடி ஏறு திருமேனிப்‌ பெருமானை, பொங்கு அரவக் கச்சையானை,கடி நாறும்‌ பூம்‌ பொய்கைக்‌ கயல்‌ வாளை குதிகொள்ளும்‌ கருப்பறியலூர்‌கொடி ஏறி வண்டு இனமும்‌ தண்‌ தேனும் ‌ பண்செய்யும்‌ கொகுடிக்கோயில்‌அடி ஏறு கழலானை, நினைந்தபோது அவர்‌ நமக்கு இனியவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

பொய்யாத வாய்மையாற் பொடிப்பூசிப் போற்றிசைத்துப் பூசை செய்துகையினா லெரியோம்பி மறைவளர்க்கும் அந்தணர்தங் கருப்ப றியலூர்க்கொய்யுலாம் மலர்ச்சோலைக் குயில்கூவ மயிலாலுங் கொகுடிக் கோயில்ஐயனையென் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
சொற்பிரிப்பு
பொய்யாத வாய்மையால்‌, பொடி பூசிப்‌ போற்று இசைத்து, பூசை செய்து,கையினால்‌ எரி ஓம்பி மறை வளர்க்கும் ‌ அந்தணர் தம்‌ கருப்பறியலூர்கொய்‌ உலாம்‌ மலர்ச்சோலைக்‌ குயில்‌ கூவ மயில்‌ ஆலும்‌ கொகுடிக்கோயில்‌ஐயனை என்‌ மனத்தினால்‌ நினைந்தபோது அவர்‌ நமக்கு இனியவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

செடிகொள்நோய் உள்ளளவுந் தீவினையுந் தீர்ந்தொழியச் சிந்தை செய்ம்மின்கடிகொள்பூந் தடமண்டிக் கருமேதி கண்படுக்குங் கருப்ப றியலூர்க்கொடிகொள்பூ நுண்ணிடையாள் கோல்வளையாள் அவளோடுங் கொகுடிக் கோயில்அடிகளையென் மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
சொற்பிரிப்பு
செடி கொள்‌ நோய்‌ உள்ளளவும்‌ தீவினையும் ‌ தீர்ந்து ஒழியச்‌ சிந்தை செய்மின்‌!கடி கொள்‌ பூந்‌ தடம்‌ மண்டிக்‌ கருமேதி கண்படுக்கும்‌ கருப்பறியலூர்‌கொடி கொள்‌ பூ நுண்இடையாள்‌ கோல்வளையாள் ‌அவளோடும்‌ கொகுடிக்கோயில்‌அடிகளை என்‌ மனத்தினால்‌ நினைந்தபோது அவர்‌ நமக்கு இனியவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

பறையாத வல்வினைகள் பறைந்தொழியப் பன்னாளும் பாடி யாடிக்கறையார்ந்த கண்டத்தன் எண்டோ ளன் முக்கண்ணன் கருப்ப றியலூர்க்குறையாத மறைநாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக் கோயில்உறைவானை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
சொற்பிரிப்பு
பறையாத வல்வினைகள்‌ பறைந்தொழிய, பல்‌-நாளும்‌ பாடி ஆடிகறை ஆர்ந்த கண்டத்தன்‌, எண்தோளன்‌, முக்கண்ணன்‌, கருப்பறியலூர்‌,குறையாத மறை நாவர்‌ குற்றேவல் ‌ ஒழியாத, கொகுடிக்கோயில்உறைவானை, மனத்தினால்‌ நினைந்தபோது அவர்‌ நமக்கு இனியவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சங்கேந்து கையானுந் தாமரையின் மேலானுந் தன்மை காணாக்கங்கார்ந்த வார்சடைகள் உடையானை விடையானைக் கருப்ப றியலூர்க்கொங்கார்ந்த பொழிற்சோலை சூழ்கனிகள் பலவுதிர்க்குங் கொகுடிக் கோயில்எங்கோனை மனத்தினால் நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
சொற்பிரிப்பு
சங்கு ஏந்து கையானும்‌ தாமரையின் மேலானும்‌ தன்மை காணாக்கங்கு ஆர்ந்த வார்சடைகள்‌ உடையானை, விடையானை, கருப்பறியலூர்‌கொங்கு ஆர்ந்த பொழில்‌-சோலை சூழ்‌ கனிகள் பல உதிர்க்கும்‌ கொகுடிக்கோயில்‌எம்‌ கோனை, மனத்தினால்‌ நினைந்தபோது அவர்‌ நமக்கு இனியவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

பண்டாழின் இசைமுரலப் பன்னாளும் பாவித்துப் பாடி யாடிக்கண்டார்தங் கண்குளிருங் களிக்கமுகம் பூஞ்சோலைக் கருப்ப றியலூர்க்குண்டாடுஞ் சமணருஞ் சாக்கியரும் புறங்கூறுங் கொகுடிக் கோயில்எண்டோ ளெம் பெருமானை நினைந்தபோ தவர்நமக் கினிய வாறே.
சொற்பிரிப்பு
பண்‌ தாழ்‌ இன்‌இசை முரலப்‌ பல்‌-நாளும் ‌ பாவித்துப்‌ பாடி ஆடிக்‌கண்டார் தம்‌ கண்‌ குளிரும்‌ களிக்‌ கமுகம் ‌ பூஞ்சோலைக்‌ கருப்பறியலூர்‌குண்டாடும்‌ சமணரும்‌ சாக்கியரும் ‌ புறம் கூறும்‌ கொகுடிக்கோயில்எண்தோள்‌ எம்பெருமானை நினைந்தபோது அவர்‌ நமக்கு இனியவாறே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கலைமலிந்த தென்புலவர் கற்றோர்தம் மிடர்தீர்க்குங் கருப்ப றியலூர்க்குலைமலிந்த கோட்டெங்கு மட்டொழுகும் பூஞ்சோலைக் கொகுடிக் கோயில்இலைமலிந்த மழுவானை மனத்தினா லன்புசெய் தின்ப மெய்திமலைமலிந்த தோள்ஊரன் வனப்பகையப் பன்னுரைத்த வண்ட மிழ்களே.
சொற்பிரிப்பு
கலை மலிந்த தென்புலவர்‌ கற்றோர் தம் ‌ இடர்‌ தீர்க்கும்‌ கருப்பறியலூர்‌குலை மலிந்த கோள்‌-தெங்கு மட்டு ஒழுகும் ‌ பூஞ்சோலை கொகுடிக்கோயில்‌இலை மலிந்த மழுவானை, மனத்தினால் ‌ அன்பு செய்து, இன்பம்‌ எய்தி,மலை மலிந்த தோள்‌ ஊரன்‌ வனப்பகை அப்பன்‌ உரைத்த வண் தமிழ்களே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.